எல்லோருடைய வாழ்விலும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக தூக்கத்தில் கனவு என்பது சாதாரணமான விடயம் ஆகும். மேலும் பலருடைய தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வருவதுண்டு.
சிலருடைய தூக்கத்தில் நல்ல கனவுகளும் வருவதுண்டு. கெட்ட கனவுகளும் வருவதுண்டு. முன்னைய காலத்தில் மன்னர்கள் தங்களது அரண்மனையில் கனவுக்கென்று நிபுணர்களை நியமித்திருந்தனர்.
அவர்கள் மூலம் கனவுக்கான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். அந்த நிபுணர்கள் மூலம் தாம் காணுகின்ற கனவுகளுக்கான விளக்கங்களையும் அறிவியல் ரீதியான உண்மைகளையும் அறிந்து கொண்டனர்.
குறிப்பாக நாய் என்ற விலங்கு மனிதர்களிடையே விசுவாசத்தின் அம்சமாக விளங்குகின்றது. விசுவாசம் என்பது ஒருவருடைய துக்கத்திலும் சுகத்திலும் முழுவதுமாகப் பங்கெடுப்பதையே குறிக்கின்றது.
இதனால் நாயானது தன்னுடைய உரிமையாளருக்கு எப்போதும் விசுவாசத்துடன் விளங்குகின்றது. ஒரு நாய் ஒருவருடைய கனவில் என்னென்ன விதங்களில் தோன்றுகின்றது அதற்கு என்னென்ன விளக்கங்கள் அர்த்தங்கள் என்பவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
கனவில் நாய் வந்தால் என்ன பலன்
ஒருவருடைய கனவில் நாய் வந்தால் அவருடைய எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் கெட்ட செய்திகள் வரப்போகின்றன என்று அர்த்தம் ஆகும்.
நாய் அழுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்
ஒரு நாய் தனது எஜமானுக்கு வாழ்க்கை முழுவதும் நன்றியுணர்வுடன் செயற்படுகின்றது. இதனால் அந்த எஜமானுடைய சுகம் மற்றும் துக்கங்களில் பங்கெடுக்கின்றது. இதனால் அந்த எஜமானின் வாழ்க்கையில் நாய்க்கும் ஒரு பங்கு இருக்கின்றது எனலாம்.
குறிப்பாக ஒருவருடைய தூக்கத்தில் நாய் அழுவது போன்று கனவு வந்தால் அவருடைய வாழ்க்கையில் கெட்ட செய்திகள் அல்லது ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட போகின்றன என்று அர்த்தம் கொள்ளப்படுகின்றது. எனவே முன்கூட்டியே தம்மை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கனவு உணர்த்துகிறது.
ஒரு நாய் ஒருவரைத் தேடி வருவது போன்று கனவு வந்தால் என்ன பலன்
கனவில் ஒருவரைத் தேடி நாய் ஒன்று வருவது போன்று கனவு கண்டால் அந்த நபரிடம் பழகிய அவருக்கு விசுவாசமான ஒரு நண்பர் அவரைத் தேடி வரப்போகின்றார் என்றும் அவர்களுடைய நட்பு தொடர போகின்றது என்று அர்த்தம் அதுமட்டுமல்லாது இப்போது வரை தனிமையில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் உங்களது வாழ்க்கையில் ஒரு துணை உங்களுக்கு தேவைப்படுகின்றார் என்று அர்த்தம் ஆகும்.
ஒருவருடைய தூக்கத்தில் நாய்கள் கூட்டமாக வந்தால் என்ன பலன்
ஒருவருடைய கனவில் நாய்கள் கூட்டமாக வந்தால் அவருடைய குடும்பத்தில் ஏதோ பிரச்சினைகள் வரப்போகின்றன. எனவே அவற்றைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைத் தேடி ஆராய வேண்டும் என்பது அர்த்தம் ஆகும்.
அதுமட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதோடு குடும்பத்துடன் உங்களது ஓய்வு நேரங்களை செலவிட வேண்டும் என்பதனையும் குறிக்கின்றது.
ஒருவருடைய தூக்கத்தில் ஒரு நாய் கோபமாக இருப்பதைப் போன்று கனவு வந்தால் என்ன பலன்
ஒருவருடைய தூக்கத்தில் நாய் கோபமாக இருப்பது போன்று கனவு வந்தால் அந்த நபரிடம் நெருக்கமாக பழகிய நம்பிக்கைக்குரிய நபர் அவரை ஏமாற்றி விட்டு போகப் போகின்றார். அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்ய போகின்றார் என்பது அர்த்தம் ஆகும்.
அதுமட்டுமல்லாது ஒருவருடைய கனவில் நாய் சண்டையிடுவது போல் வந்தால் அவரை யாரோ தோற்கடிக்க முயற்சி செய்கின்றார்கள் எனவே அவர்களிடம் இருந்து வெற்றி பெறுவதற்கு கடினமாக முயற்சி செய்ய போராட வேண்டும் என்பதை உணர்த்தவே நாய் சண்டையிடுவது போன்று கனவு ஏற்படும்.
ஒருவருடைய தூக்கத்தில் நாய் கடிப்பது போன்று கனவு வந்தால் என்ன பலன்
ஒருவருடைய தூக்கத்தில் நாய் கடிப்பது போன்று கனவு வந்தால் அவருக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்து கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் அதிஷ்டம் கிடைக்கம் போகின்றது என்று அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
You May Also Like: