சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை

செல்வங்களுள் அழியாத செல்வமாகிய கல்வியே ஒருவரின் வாழ்வினை சிகரத்துக்கு விட்டுச் செல்லம் உந்துக் காரணியாக அமைகின்றது.

சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கல்வியின் அவசியம்
  • கல்வியினால் ஏற்படும் பயன்கள்
  • கல்வியினால் சிகரம் தொட்டவர்கள்
  • கல்வியில் உலகமயமாதலின் தாக்கம்
  • கற்றோரின் பெருமைகள்
  • முடிவுரை

முன்னுரை

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை முழுமை அடைய செய்ய மற்றும் அவனை அவனது வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய செய்ய உதவுகின்ற கல்வி செல்வமானது எப்போதும் அழிவு இல்லாத நிலையான செல்வமாகும்.

கல்வி செல்வத்தின் மூலம் ஒருவர் உயர்ந்த இடத்தினை பெற்றுக்கொள்ள முடிகின்றது. கல்வி இல்லையேல் பாரினில் எதையும் நகர்த்த இயலாது.

கல்வியின் அவசியம்

செல்வத்தால் சிறந்த செல்வமாக கருதப்படுகின்ற கல்வி செல்வமானது ஒருவருடைய வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன.

இருப்பினும் சிறந்த உயிரினமாக ஆறறிவு பெற்ற மனிதனே போற்றப்படுகின்றான். பிற உயிர்களை காட்டிலும் மனிதனே உயர்ந்தவனாய் மதிக்கப்படுகிறான். மதிப்பும் மரியாதையும் கல்வியின் கண் மனிதன் பெற்ற பகுத்தறிவுக்கு சான்றாகும்.

இந்த பகுத்தறிவின் காரணமாகவே எது நல்லது, எது கெட்டது என மனிதனால் பகுத்தாய்ந்து செயலாற்ற முடிகிறது. நீரிலிருந்து பாலை பிரித்து அருந்தும் அன்னப்பறவை போல கல்வி கற்றவனால் மட்டுமே நல்லவற்றை நாடிச் செல்ல இயலும்.

மேலும், உயர்ந்த தொழில் ஒன்றை பெறுவதற்கு, சமூகத்தில் சிறந்த பிரஜையாக திகழ்வதற்கும் கல்வி என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகிறது.

கல்வியினால் ஏற்படும் பயன்கள்

  • கல்வியானது கற்றவனை மட்டுமின்றி அவனை சார்ந்தவர்களையும் அவனது சமூகத்தையும் ஏன் நாட்டையும் அது உயர்த்துகிறது.
  • ஒருவர் பெற்ற சிறந்த கல்வியானது வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்பதை பகுத்தறிய கற்றுக் கொடுக்கின்றது.
  • இந்த உலகத்தில் மற்றும் அவர்கள் வாழும் சமுதாயத்தில் உயர்வையும், வருவாயையும், பாராட்டையும், திறமையும் அளிக்கும் ஒரே ஒரு சாதனமாக கல்வி திகழ்கின்றது.
  • ஒடுக்கப்பட்டவர்களும் உயர்ந்த அந்தஸ்தையும் பதவியையும் பெறுவதற்கு கல்வி முக்கியமானதாக காணப்படுகிறது.
  • ஒருவரிடம் இல்ல அறியாமையை விளக்கி அறிவு விரிவடைவதற்கு கல்வி உறுதுணையாக உள்ளது.
  • ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு கல்வி முக்கியமானதாகும்.
  • அறியாமையை போக்குவதற்கு கல்வி அவசியமானதாகும்.

கல்வியினால் சிகரம் தொட்டவர்கள்

இந்த உலகில் சிறந்த தலைவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்ற பல்வேறு நபர்கள் கல்வியின் மூலம் சிகரம் தொட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

தற்காலத்தில் மிக உயர்ந்த பதவிகளில் காணப்படுபவர்கள் சிறந்த முறையில் கல்வியை சரிவர பெற்று அவற்றை உபயோகிப்பவர்களே ஆவார்கள்.

அந்த வகையில் இந்திய நாட்டில் கல்வியினால் சிகரம் தொட்ட சில அறிஞர்களை எடுத்து நோக்குவோமாயின்,

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு துறைகள் தலைமை பொறுப்பை வகிக்கும் சுந்தர் பிச்சை, விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முதல் பெண்மணி கல்பனா சாவ்லா, ஏவுகணை நாயகன் என வர்ணிக்கப்படும் அப்துல் கலாம் போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

கல்வியில் உலகமயமாதலின் தாக்கம்

மக்களின் திறன்களை வளர்க்க, உலகமயமாதலின் மூலம் கல்வி அறிவை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற வளர்ந்து வரும் நாடுகள் மாற்றத்தை விரும்புகின்றன.

பல்வேறு வேலைகளுக்கு தேவையான திறன்களை தொழிற்சாலைகளிலும், பெறுநிறுவன உலகங்களிலும், உயர்கல்விகளுக்கு இடையேயான உறவிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டன.

உலகமயமாதலின் செயல்முறை என்பது உலக வர்த்தகம், தொடர்பு, கல்வி செயல்பாடு, பொருளாதார உறவு இவை அனைத்திலும், 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, மனித தலைமையை உருவாக்குவதில் கல்வி ஒரு முக்கிய முதலீடாக இருந்து தொழில்நுட்ப புதுமைகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டுவர உந்து சக்தியாக இருந்தது.

இது சமூகத்தில் கல்வியின் அந்தஸ்தை பரப்புவதன் மூலம் மக்களுக்கு பன்முகத்தன்மை வளர்ச்சியை உறுதி செய்கிறது.

கற்றோரின் பெருமைகள்

அழியாத செல்வம் ஆகிய கல்விச்செல்வமானது ஒருவர் தம் செல்லும் இடங்கள் எல்லாம் பெருமையை பெற்றுக்கொள்ள உதவுகிறது.

செல்வந்தனாக வாழ்ந்த ஒருவன் கால சூழ்நிலையால் ஏழையாக மாறிவிடலாம் ஆனால் கல்வி அறிவுடையவன் அவ்வாறு அல்லாமல் எப்போதும் உயர்ந்தவனாகவே காணப்படுவான் அத்தோடு சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுபவனாகவும் கல்வி கற்றோர் காணப்படுகின்றனர்.

முடிவுரை

இத்தனை சிறப்புகள் பெற்று காணப்படுகின்ற கல்வியை சரிவரக் கற்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நான் மட்டுமல்லாமல் எம்முடைய சந்ததிக்கும் சரியான முறையில் சமமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்தி அனைவரும் வாழ்வில் உயர்வு பெற உதவுதல் வேண்டும்.

You May Also Like:

சிகரம் தொடு கட்டுரை