உலோகவியல் துறையில் மிக முக்கியமான உலோகங்களில் ஒன்றாக தாமிரம் காணப்படுகிறது. இது ஒரு மென்மையான உலோகமாகும்.
தாமிரம் என்றால் என்ன
தாமிரம் என்பது உலோக வகையை சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இதனை செம்பு எனவும் அழைக்கின்றனர். இது கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துதிறன் கொண்டதாகவும் காணப்படுகிறது.
தாமிரமானது கேபிள்கள், உயர் மின்னழுத்த கோடுகள், நாணயங்கள், விசைகள், இசைக் கருவிகள், மொபைல் போன்கள், நகைகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு உலோகமாகும். மேலும் உணவின் ஒரு பகுதியாகவும் இது காணப்படுகிறது.
மனித உடலில் தாமிரத்தின் முக்கியத்துவம்
மனித உடலின் செயல்பாட்டிற்கு தாமிரமானது மிக முக்கியமான உலோகமாகும். தாமிரமானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் போன்றவற்றை உருவாக்க கூடியதாகும்.
மேலும் இது நம் உடலிற்கு கிடைக்கும்படி உணவுகள் மூலம் இந்த தாமிரத்தின் சக்தி கிடைக்கப்பெறுகின்றது. தினசரி 900 மைக்ரோகிராம் தாமிரத்தை உட்கொள்வது சிறந்ததாக காணப்படுகின்றது.
தாமிரத்தின் இயற்பியல் பண்புகள்
தாமிரமானது கடினமானதாகவும், தகடாக்ககூடியதாகவும் கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையதாகவும் காணப்படுகிறது.
தனிமவரிசை தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன. இவ் உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை கடத்தக்கூடியதாகும்.
தாமிரத்தில் உள்ள உலோக பிணைப்புக்கள் சகப்பிணைப்புத்தன்மை குறைந்ததாகவும் வலிமை குறைந்ததாகவும் காணப்படுகின்றன.
தூய நிலையிலுள்ள தாமிரமானது ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் காணப்படும். இது காற்றுப்படுகின்ற சந்தர்ப்பங்களில் செந்நிறமாக மங்குகின்றது. அதிக நீர்த்துப் போகக் கூடிய தன்மையை கொண்ட ஓர் உலோகமாகும்.
சிலைகள் உருவாக்கத்தில் தாமிரத்தின் பங்கு
சிலைகளை தயாரிப்பதில் தாமிரத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அதாவது சிலைகள் தயாரிக்க வெண்கலத்தினை பயன்படுத்துகின்றனர். வெண்கலம் என்பது குறைந்தது 60 சதவீதம் செம்பினையும் 40 சதவீதம் தகரங்களையும் கொண்டதாக காணப்படுகிறது.
தகரம் சேர்ப்பதன் மூலம் ஓர் கடினத்தன்மையினை ஏற்படுத்துகிறது. மேலும் அரிப்பை தடுக்கின்றது. இதன் காரணமாகவே சிலைகளை உருவாக்க பயன்படுகின்றது.
வெண்கலம் மூலமாக உலோகங்களின் விகிதத்தை பொறுத்து நிறத்தினை மாற்றுவதற்கு துணைபுரிகின்றது. வெண்கலதொனி அதிக பொன்னிறமாக காணப்பட்டால் தாமிரமானது குறைவாக காணப்படும்.
அதற்கு பதிலாக சிவப்பு நிறமாக காணப்பட்டால் அதனுள் செம்பு அதிகமாக காணப்படும். தாமிரத்தினூடாக சிலை வடித்தலானது இன்று அதிகமாகவே காணப்படுகின்றது.
மேலும் சிலைகளானவை மிகவும் அழகாக காட்சியளிப்பதோடு மிகுந்த பயன்களை கொண்டமைந்ததாகவும் காணப்படுகின்றது.
தாமிரத்தின் பயன்பாடுகள்
தாமிரத்தின் கரைசல்களானவை மரப்பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் பாதுகாப்பு பொருள்களை உருவாக்குவதற்காக சில நூழிலை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது.
இசைக்கருவிகளின் உருவாக்கத்தின்போது தாமிரத்தின் உலோக கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைட்டு, சல்பைட்டு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகின்றது.
பக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இதன் காரணமாகவே நீண்டகாலமாக கப்பல்களின் அடிப்புறத்தை பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மீன் வலை செய்வதற்காகவும் இதனை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
ஓர் நீடித்த அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்ப வெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலை பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட வகையில் பல்வேறுபட்ட பயன்களை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. மேலும் மின் கேபிள்கள், நாணயங்கள் போன்றவற்றை உருவாக்கவதில் பாரிய பங்கினை வகிக்கின்றது.
You May Also Like: