தென்னை மரத்தின் பயன்கள்

thennai marathin payangal

தென்னை மரத்தின் பயன்கள்

உலகில் பல்லாயிரக்கணக்கிலான மரம், செடி, கொடிகள் உள்ளன. அதில் சில மரங்கள் மனிதனுக்குப் பெரும் பயன்களை அளிக்கின்றன. அவற்றில் தென்னை மரமும் ஒன்றாகும்.

தென்னை மரத்தின் தாவரவியல் பெயர் கோக்கல் நியூசிஃபெரா “Cocos nucifera L” ஆகும். சங்ககால நூல்களில் தென்னை மரத்தினை ‘தெங்கு” என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தென்னை மரத்திற்குத் தாழை என்ற பெயருமுண்டு.

தென்னை மரங்களின் பூர்வீகமாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.

இவை மணல் பிரதேசங்கள், உப்பு நீர் உள்ள பிரதேசங்கள், நீர் வளம் கொண்ட பிரதேசங்கள், சூரிய சக்தி கிடைக்கும் பகுதிகள் போன்றவற்றில் அனேகமாக வாழக் கூடியவையாகும். உலகளாவிய ரீதியில் பிலிப்பைன்ஸ் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

பொதுவாகத் தென்னை மரங்களானவை 60 – 90 மீட்டர் வரை வளரக் கூடியவையாக உள்ளன. இதற்குக் கிளைகள் கிடையாது. இதன் ஓலை 4-4 மீட்டர் வரை வளரும். இதன் வகைகள் பல உள்ள போதிலும் பொதுவாக நெட்டை, குட்டை என இரண்டு வகையாக உள்ளன.

நெட்டை வகை தென்னையானது 60 மீட்டர் வரையும் வளரும். குட்டை வகை தென்னை மரங்களானவை 30 – 40 வருடங்கள் வரை வாழ்நாளைக் கொண்டுள்ளன.

தென்னை மரத்தின் பயன்கள்

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்தரக் கூடியவையாகும். இளநீர் தென்னை மரத்தின் மிகச் சிறந்த பயன்களில் ஒன்றாகும். இது உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கோடை காலங்களில் சிறந்த இயற்கைக் குடிபானமாக விளங்குகின்றது. அது மட்டுமல்லாது ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றது.

தென்னை மரத்தின் தேங்காயானது இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சமையல் பொருட்களில் முக்கியமான பொருளாக விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுவதுடன் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

தேங்காய் பூவானது சமையலுக்கு உதவுவதுடன், உலர் தேங்காய்ப் பூ இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கும் பயன்படும்.

இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகின்றது. மேலும் தேங்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைபைக் கரைக்க உதவுகின்றது.

தென்னையில் உள்ள மற்றைய கூறுகளில் ஒன்றான தென்னை ஓலையானது கூரை மேய்வதற்கும், வேலிகளை அடைப்பதற்கும் பயன்படுகின்றன.

கைவினைப் பொருட்களையும் உருவாக்கலாம். ஈக்கிலைப் பயன்படுத்தி விளக்குமாறு (துடைப்பான்) செய்யலாம்.

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் இயற்கை விறகாகப் பயன்படுகின்றது.

பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரானது கயிறு தயாரிக்கப் பயன்படுகின்றது.

தேங்காய் நாரை பயன்படுத்தி பாத்திரங்களைக் கழுவலாம்.

தேங்காய் நாரிலிருந்து பெறப்படும் கழிவானது தாவரங்கள் பூங்கன்றுகளுக்கு உரமாகப் பயன்படும்.

தென்னை ஓலையினைப் பயன்படுத்தி விசிறி தயாரிக்கவும் முடியும்.

இதன் குருத்தோலையினைப் பயன்படுத்தி தோரணம் கட்டலாம்.

குரும்பெட்டியைப் பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் செய்யலாம்.

தென்னை மரத்தின் வேரை கசாயம் வைத்துப் பருகினால் படை சொறி, தோல் நோய், நாக்கு வரட்சி போன்ற பிரச்சினைகள் தீரும்.

You May Also Like:

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி