அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தனது நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய மாவீரனும் இந்திய இராணுவத்தை முதலில் உருவாக்கிய பெருமைக்குரியவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பற்றியே பேசப்போகிறேன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு
இந்திய சுதந்திர போராட்ட தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1987 ஜனவரி மாதம் 23ம் நாளன்று இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனுமிடத்தில் பிறந்தார்.
இவர் வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தவராவார். இவரது பெற்றோர் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி ஆவார். இவர் தைரியம் மிக்கவராக சிறுவயதிலிருந்தே காணப்பட்டார்.
கல்வி
இவர் தனது ஐந்து வயதில் கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்ப பள்ளியில் இணைந்து கொண்டு ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். தனது உயர் கல்வியை கெல்கத்தா ரேவன்ஸா கல்லூரியில் தொடங்கினார்.
இவரது தாயார் தெய்வ பக்தியுடையவராக இருந்தமையின் காரணமாக இவரும் சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தின் பால் ஈடுபாடுடையவராக காணப்பட்டார்.
இவ்வாறாக துறவறத்தில் ஈடுபாடுடையவராக காணப்பட்ட சுபாஸ் சந்திரபோஸிற்கு சரியான குரு கிடைக்காததன் காரணமாக இவர் 1915ம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார்.
இவரது கல்வி வாழ்க்கையில் இந்தியர்களை அவமதித்து பேசும் ஆசிரியர் ஒருவர் இவருக்கே கற்பித்தார். இந்த ஆசிரியருடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் 2 ஆண்டுகள் தனது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர் 1917இல் இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். 1919ம் ஆண்டு இவர் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் மாணவனாக தேறினார். இவர் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒருவராக காணப்பட்டார்.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒரு மாமனிதராக இவர் காணப்படுகிறார். இவர் தனது நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் தான் வேலை செய்யக்கூடாது என கருதி தனது பதவியை இராஜினாமா செய்தவராவார். இதன் பின்பு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இவர் சுதந்திர போராட்டத்தில் முழு வீச்சுடன் போராடினர். 1944 காலப்பகுதியில் தேசிய இராணுவத்தை உருவாக்கிக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் மட்டுமல்லாது போராட்டங்களில் ஈடுபடுவதனூடாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டார்.
இந்திய மக்களை தனது கனத்த பேச்சின் காரணமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கு உந்துதலாக இருந்தார்.
சுதந்திர இந்திய இராணுவம்
1941ம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பினை இவர் தெடங்கினார். இவர் சுதந்திர இந்திய வானொலி சேவையான ஆசாத் ஹிந்த் என்பதை உருவாக்கி மக்கள் மத்தியில் விடுதலைக்கான தாகத்தினை தூண்டினார்.
இந்திய இராணுவத்திற்கு தீவிர பயிற்சியினை அளித்தவராவார். அதன் பின்னர் தமக்கான தனியானதொரு தேசிய கொடியினை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் விடுதலைக்காக மிகவும் சிறந்த முறையில் இந்திய இராணுவத்தினை பலப்படுத்தினார். இன, மத, பேதங்களை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவராக இவர் காணப்படுகிறார்.
இறப்பு
1945ம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தின் காரணமாக இவர் மரணத்தினை எய்தினார்.
“பயந்தவன் வாழ்க்கை தகராறு துணிந்தவன் வாழ்க்கை வரலாறு” என்ற வரிகளிற்கு ஏற்ப இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ஒரு மாவீரராக இன்றும் எம் மனதில் நீங்கா இடத்தினை பிடித்தவரே சுபாஸ் சந்திரபோஸ் ஆவார்.
You May Also Like: