நாம் வாழ்வதற்கு அடிப்படையானதாகவும் முதன்மையானதொன்றாகவும் நிலமானது காணப்படுகின்றது. அந்தவகையில் பஞ்சமி நிலமானது முக்கியமானதொன்றாக திகழ்கின்றது.
ஆங்கிலேயே ஆட்சிக்காலப்பகுதியின் போது ஏழை மக்களை அடிமைப்படுத்தி வாழும் ஒரு சூழலே அக்காலப்பகுதிகளில் காணப்பட்டது. இவ்வாறான மக்களிற்கு முக்கியமானதாக இந்த பஞ்சமி நிலமானது விளங்குகின்றது.
பஞ்சமி நிலம் என்றால் என்ன
பஞ்சமி நிலம் என்பது யாதென்றால் நிலமின்றி வாழ்கின்ற ஏழை மக்களுக்கு (பட்டியலின மக்கள்) 1892 ம் ஆண்டு இந்திய பிரிட்டிஸ் அரசினால் வழங்கப்பட்டுள்ள நிலமாகும்.
அதாவது அக்காலப்பகுதியில் வாழ்ந்த பட்டியலின மக்களை அக்கால அதிகார வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் பஞ்சமர்கள் என்றே அழைத்தனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற நிலத்தினையும் பஞ்சமி நிலம் என்றே அழைக்கின்றனர்.
பஞ்சமி நிலத்தினுடைய வரலாறு
பஞ்சமி நிலத்தினுடைய வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தோமையானால் ஆரம்ப கால கட்டங்களில் குறிப்பிட்ட சில ஏழை மக்கள் ஜமீன்தார்கள் மற்றும் பிரபுக்களுக்கு அடிமையாக இருந்தனர். இவர்களுடைய உழைப்பினை சுரண்டிக் கொண்டே அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.
அக்காலப்பகுதிகளில் காணப்பட்ட ஏழை மக்களிடம் சொந்தமாக ஒரு நிலம் கூட காணப்படவில்லை. இவ்வாறான ஒரு சூழலில் மக்களை அடிமைப்படுத்துவதும் ஒரு குறிப்பிட்டளவு உணவினையுமே வழங்கி வந்தார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் 1891ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டில் கலக்டெராக இருந்த ஜேம்ஸ் ஹென்றி ஏப்பர்லி ட்ரெமென்ஹீரே மற்றம் பல கிறிஸ்தவ மத மிசனரிகளானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. இவ்ஆய்வானது பட்டியலினமக்கள் ஏன் இவ்வாறு காணப்படுகின்றார்கள் என்பது பற்றியதாகவே அமைந்துள்ளது.
மேலும் இதனுள் வேளாண்மை செய்வதற்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற அறிக்கையானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கிணங்க இவர்களுக்கு அரசினால் பஞ்சமி நிலமானது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள்
பட்டியலின மக்கள் விவசாயம் செய்து கொள்வதற்காகவும் அந்நிலத்தில் வீடுகளை கட்டிக்கொள்வதற்காகவும் பஞ்சமி நிலமானது பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சொந்தமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு சுய மரியாதையுடன் பட்டியலின மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இம் மக்கள் சமூகத்தில் மிகவும் தாழ்வான நிலையிலேயே காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு பஞ்சமி நிலத்தினை வழங்குவதினூடாக இவர்களை உயர வைப்பதோடு ஏனையவர்களுக்கும் இவர்களால் உதவ முடியும் என எதிர்பார்த்தனர்.
எனவேதான் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்காலப் பகுதிகளில் இவ் நிலங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்படுவதோடு இந்த நிலங்களை மக்களிடம் இருந்து பறித்தும் எடுத்துள்ளனர் என்பதனை குறிப்பிடலாம்.
இன்று இவ்வாறானதொரு நிலமானது இருந்துள்ளதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் வினாவப்படுகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
பஞ்சமி நிலத்தினை 10 வருடங்களுக்கு யாராலும் விற்க முடியாதென்றும் அவ்வாறு விற்க வேண்டுமாயின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தினருக்கே அதனை விற்க முடியும் என்றும் அரசாங்கமானது கட்டளையினை பிறப்பித்துள்ளது.
ஆனாலும் பிற்பட்ட காலங்களில் அந் நிலமானது அம் மக்களிடமே இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் நிலம் இவர்களுக்கென இருந்தாலும் அதற்கான உரிமையை இவர்கள் கொண்டிருக்கவில்லை அதனை பிற்பட்ட காலங்களில் வந்த அரசாங்கமே எடுத்துக் கொண்டுள்ளது என்பதுதான் இந்த நிலத்தினுடைய யதார்த்தமான நிலையாகும்.
You May Also Like: