மனித நேயம் பேச்சு போட்டி

manitha neyam speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். இந்த உலகில் வாழும் அனைவருமே ஏதோவொரு வகையில் பிறருடன் கருணையுடனும் பாசத்துடனுமே நடந்து கொள்கின்றனர் என்றடிப்படையில் மனித நேயம் பற்றியே பேசப்போகின்றேன்.

மனித நேயம்

மனித நேயம் என்பதனை அன்பு காட்டுதலினூடாக புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த உலகில் காணப்படுகின்ற பல மனிதர்களில் பலரை யாரென்று தெரியாமல் இருப்பினும் ஏதாவது ஒரு துன்பம் நேரும் போது எமது கண்களில் ஏற்படும் சிறுதுளி கண்ணீரும் மனித நேயம் ஆகும்.

மனித நேயத்தின் வெளிப்பாடாகவே அன்பு, பாசம், கருணை, புன்னகை போன்றவை காணப்படுகின்றன. எந்தவொரு மனிதனாலும் தனித்து வாழ முடியாத நிலையை உணர்த்துவதாகவே மனித நேயமானது காணப்படுகின்றது.

முகம் அறியாத நட்பிற்காக நாம் உதவி செய்கின்ற நிலையினையும் மனித நேயம் என்றே கொள்ளலாம்.

மனிதர்களிடம் மட்டும் ஏற்படுவதாக மனித நேயம் காணப்படுவதில்லை. மாறாக உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதே மனித நேயமாகும். புறாவிற்காக தனது உடலின் ஒரு பாகத்தை கொடுத்த சிவிச்சக்கரவர்த்தி மன்னன் எமக்கு உணர்த்த விளைவது மனித நேயத்தைதான்.

மனித நேயம் என்றாலே எம் கண் முன் தோன்றுவது அன்னை தெரேசாவாகத்தான் இருக்கும். ஏனெனில் அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பில்லா கருணையினை வழங்கக் கூடிய ஒருவராகவே அன்னை தெரேசா காணப்பட்டார்.

அதுமாத்திரமல்லாது முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னனது செயலானது மனித நேயத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அடுத்தவர்களின் வலிகளை நாம் உணரத் தொடங்கும் போது எம்மில் மனித நேயமானது உருவாகுகின்றது. பிறரிடம் எல்லையில்லா அன்பு காட்டுவது, இளகிய சுபாவம், இரக்க உணர்வு போன்றவற்றை மனித நேயத்தின் வெளிப்பாடாகும்.

மனித நேயத்தில் அன்பு

மனித நேயத்தில் மிகவும் பிரதானமானதொரு விடயமாகவே அன்பு காணப்படுகின்றது. அன்பு இருக்கும் ஒருவரிடையே தான் மனித நேயமானது வேரூன்றி காணப்படும்.

விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், நம்பிக்கை போன்ற நல்ல குணங்கள் அன்பின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.

ஒருவரின் நன்மையை கருத்திற் கொண்டு பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஓர் ஒழுக்கமான மனநிலையையும் கொண்டதுமாகவே அன்பானது காணப்படுகின்றது.

அன்பானது ஒரு மனிதனிடத்தில் ஏற்படுகின்ற போதே சுயநலமில்லாத மனித நேயமானது ஒருவரிடத்தில் வெளிப்படுத்தப்படும்.

மன்னிக்கும் மனித நேயமான இயல்பானது அன்பின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது. ஒருவர் தவறு செய்யும் பொருட்டு மன்னிக்காது செயற்படுவோமேயானால் அவரிடத்தில் அதிகரித்த பிரச்சினையே காணப்படும்.

ஆனால் மன்னிக்கும் குணமானது ஒருவரிடத்தில் காணப்படுமாயின் அவரது வாழ்வானது ஒரு சிறப்பான உறவு நிலையை நோக்கி நகரக்கூடியதாக மாறும்.

இன்றைய காலகட்டத்தில் மனித நேயத்தின் பங்கு

ஆரம்ப காலப்பகுதிகளில் மனித நேயமானது காணப்பட்டது போன்று இல்லாமல் இன்று மனித நேயமானது அருகியே காணப்பட்டு வருகின்றது. இன்று பல மனிதர்கள் பிறர் துன்பத்தில் இன்பத்தை காணக் கூடியவர்களாகவே திகழ்கின்றனர்.

ஏனெனில் இரு மனிதர்களிடையே பிணக்கு ஏற்படுகின்ற போது வேடிக்கை பார்க்கும் நிலையே காணப்படுகின்றது. இதே போன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மனித நேயமற்ற பல சம்பவங்கள் இன்று அதிகரித்து கொண்டே வருகின்றது.

இதற்கான பிரதானமான காரணமாக சினிமா காணப்படுகின்றது. இதனூடாக இடம் பெறும் காட்சிகள், தவறான புரிதல்கள், நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக இன்றைய கால கட்டத்தில் மனித நேயமானது அருகியே வருகின்றது.

மனிதனாக பிறந்த அனைவரும் மனித நேயத்துடன் வாழுகின்ற போதே சமூகமானது சிறப்பாக வாழ வழியமைக்கும்.

மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும் மற்றவரை ஏற்று கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்” எனும் வரிகளுக்கு ஏற்ப மனித நேயத்தை வளர்ப்போம்.

You May Also Like:

தாய்மையின் சிறப்பு கட்டுரை

லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை