வேற்றுமையில் ஒற்றுமை பேச்சு போட்டி

vetrumaiyil otrumai speech in tamil

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். மனிதனானவன் இன, மத, மொழி என பல்வேறுபட்ட வகையில் வேறுபாட்டினை கொண்டிருந்த போதிலும் மனிதாபிமானம் என்றடிப்படையில் அனைவரும் ஒன்றாகியவர்களே என்பதன் ஊடாக வேற்றுமையில் ஒற்றுமை பற்றியே நான் இன்று பேசப்போகின்றேன்.

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இன, மத, மொழி பேசுகின்ற வேறுபட்ட மக்களே காணப்படுகின்றனர். இவர்கள் தனது நாட்டிலிருந்து வேறு ஒரு நோக்கத்திற்காக பிறிதொரு நாட்டிற்கு செல்கின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் இவர்கள் தனது நாட்டின் சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டதொரு சூழலிலேயே வாழ்கின்றனர். ஆனால் இவ்வாறு வேறுபட்ட போதிலும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். இதற்கு பிரதானமான காரணமாக திகழ்வதே வேற்றுமையில் ஒற்றுமை ஆகும்.

வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதனாலேயேதான் ஒரு நாடு இன்றும் வலிமையானதாகவும், அபிவிருத்தியை நோக்கியும் நகரக்கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் எவ்வளவுதான் வேறுபாடுகள் காணப்படினும் தனது நாட்டிற்கு ஒன்று என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். இவ்வாறு ஒற்றுமையானது பேணப்படுகின்ற போதே ஒரு நாடானது முன்னேற்ற பாதையினை நோக்கி நகர முடியும்.

தன்னகத்தே இருக்கும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக வாழும் மக்களையே வேற்றுமையில் ஒற்றுமையாக கூறலாம்.

இன்று பல்வேறுபட்ட வகையில் வன்முறைகள், போர்கள் என்பன இடம் பெறுகின்ற போதிலும் கருணை, அன்பு சிறந்த இயல்புகள் காணப்படுகின்றதனாலேயேதான் இன்றும் இந்த உலகமானது நிலை பெற்று கொண்டு இருக்கின்றது.

வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவம்

ஒரு பணியிடத்தில் அல்லது நிறுவனம் மற்றும் சமூகத்தில் மக்களது மன உறுதியினை வலுப்படுத்துவதற்கு பக்கபலமாக வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பது காணப்படுகின்றது.

வெவ்வேறு மதங்களை சேர்ந்த இரு வேறுபட்ட நபர்களுக்கிடையில் தனது உறவை மேம்படுத்துவதற்கு வழிவகுப்பதோடு, வேலை தரம், உற்பத்தி திறன் என தனது வாழ்க்கை முறைகளை மேம்படுத்தி கொள்ளவும் இது துணைபுரிகின்றது.

ஒரு சமூகப் பிரச்சினையானது இடம் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துணைபுரிவதோடு அனைவருக்கும் சமமான உரிமையினை பெற்றுத்தரக் கூடிய ஓர் முறைமையாகவும் வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகின்றது.

உலகில் காணப்படுகின்ற மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், உணவு வகைகள், நம்பிக்கைகள், ஆடைகள் என வேறுபட்ட ரீதியில் ஈர்க்கப்படுவதானது வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

உலகில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சங்கங்கள் இன்று ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாக வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுவதே காரணமாகும். பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு வழியமைத்து தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

இந்திய நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையின் பங்கு

இந்திய நாடானது பல்வகைத் தன்மை கொண்டதொரு நாடாக காணப்படுகின்றது. இந்நாட்டில் மக்கள் இன்றும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் அங்கு ஒற்றுமை தலை தூக்கி காணப்படுவதேயாகும்.

அந்த வகையில் அப்துல் கலாம் அவர்களிடம் ஒரு மாணவி எழுந்து ஓர் கேள்வி கேட்டார். அதாவது இந்தியாவினுடைய மிகப் பெரிய பெருமை எது என்று கேட்டார். அப்போது குத்து விளக்கேற்றி விட்டு அமர்ந்த அப்துல் கலாம் அவர்கள் கூறினார்கள் இப்போது நான் ஏற்றி வைத்த குத்து விளக்கானது இந்துக்களினுடைய அடையாளம். அதனை ஏற்றி வைக்க உபயோகித்த மெழுகுவர்த்தியானது கிறிஸ்தவர்களது அடையாளம் அதனை ஏற்றி வைத்த நானோ ஓர் இஸ்லாமியர் என்றும் இந்த வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் மிகப் பெரிய பெருமை என்று கூறினார்.

இந்திய நாட்டில் பல இன மக்கள், பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் இந்தியன் என்ற வகையில் அனைவரும் சமமானவர்களே ஆவர்.

நாட்டின் அல்லது தேசத்தின் முன்னேற்றத்திற்கு எப்போதும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் ஆகும். உலகின் பன்முகத் தன்மை கொண்ட நாடுகளில் ஒரு ஜனநாயக நாடாக இந்தியாவே திகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

You May Also Like:

எதிர்கால இந்தியா பேச்சு போட்டி

அப்துல் கலாம் பேச்சுப்போட்டி