வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை

vaikom porattam katturai in tamil

நாம் வாழும் சமூகங்களில் மனிதர்களிடையே சாதி, இனம், மொழி, மதம் என வேறுபாடுகள் நிலவுவதுவே மிகப்பெரிய கொடுமையான செயல் எனலாம்.

இந்த வகையில் சாதி கட்டமைப்பில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலமான கேரள மாநிலத்தின் சாதி கொடுமைகளுக்கு எதிராக இடம்பெற்ற ஓர் சத்திய கிரகமாகவே இந்த வைக்கம் போராட்டம் காணப்படுகின்றது.

வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வைக்கம் போராட்டம் என்றால் என்ன
  • போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி
  • வைக்கம் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள்
  • வைக்கம் போராட்டத்தின் வெற்றி
  • முடிவுரை

முன்னுரை

தற்கால இந்தியாவில் கற்றோர் விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் கேரளா மாநிலம், சென்ற நூற்றாண்டில் வைதீகர்களின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது.

இந்த நிலையில் அங்கே தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட மக்களுக்கு பல்வேறு கொடுமைகள் இடம்பெற்றமையோடு அவர்களது உரிமைகளும் மீறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில் அங்கு வாழக்கூடிய மக்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலேயே வைக்கம் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த வைக்கம் போராட்டம் பற்றிய தெளிவினை இக்கட்டுரையில் நோக்கலாம்.

வைக்கம் போராட்டம் என்றால் என்ன

கேரள மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த மகாதேவர் கோவிலினைச் சுற்றியுள்ள பாதைகளில் தாழ்ந்த சாதியினர் நடமாடக்கூடாது என்ற வழமை பல ஆண்டுகளாக அங்கு பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த தீண்டாமைக்கு எதிராக 1924 தொடக்கம் 1932 காலப்பகுதியில் நடைபெற்ற ஒரு சத்தியாக்கிரகமாகவே இந்த வைக்கம் போராட்டம் காணப்படுகின்றது.

போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், உயர்சாதி இந்துக்கள் போன்றோர் நடமாட முடிந்ததோடு தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரான ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு கூட எவரும் முன் வரவில்லை. இந்த சூழ்நிலையில் தான் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த டி.கே.மாதவன் என்பவர் முதன் முதலில் இதற்கு எதிராக குரல் கொடுக்க தயாரானார். இவரைத் தொடர்ந்து பல தலைவர்கள் முன் நின்று இந்த போராட்டத்தை பல்வேறு கட்டங்களில் நடத்தி முடித்துள்ளனர்.

வைக்கம் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள்

தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான டி.கே.மாதவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வைக்கம் போராட்டத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுள் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், இராஜகோபாலச்சாரி, கிருஷ்ணசாமி ஐயர், அய்யாமுத்து மற்றும் கேளப்பன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் அவர்களே போராட்டத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.

வைக்கம் போராட்டத்தின் வெற்றி

வைக்கம் போராட்டத்தின் விளைவாக 1925 ஆம் ஆண்டு அரசாங்கம் தீண்டாமையை ஒழித்து புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இதன் விளைவாக வைக்கம் கிராமத்தின் மகாதேவர் ஆலயத்தினைச் சுற்றியுள்ள வீதிகளில் அனைத்து மக்களும் சாதி பாகுபாடுகளைக் கடந்து நடமாடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததோடு, 1936 ஆம் ஆண்டு 12 வருடங்களின் பின்னர் கோயிலினுள் அனைவரும் பிரவேசிப்பதற்கான நுழைவுப் பிரகடனமும் வெளியிட்டபட்டது. இவை வைக்கம் போராட்டத்தின் வெற்றியாகவே கொண்டாடப்பட்டது.

முடிவுரை

நாம் வாழும் இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த சாதி கட்டமைப்புகள் இறுக்கமாக இருப்பதனை காணலாம்.

இவ்வாறான சாதிப் பிரிவினைகளின் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினைகள் ஏற்படுவதோடு, தாழ்ந்தவர்களாக கருதப்படக் கூடிய மக்கள் தங்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் இழந்து வாழும் நிலையும் ஏற்படுகின்றன.

இவ்வாறான உரிமை மீறல்களுக்கு எதிராக வெற்றி கண்ட ஓர் போராட்டமாக வைக்கும் போராட்டம் காணப்படுவதனால் ஏனைய உரிமையை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்வதற்கான ஓர் உந்து சக்தியாகவே இது அமைந்துள்ளது.

You May Also Like:

இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை