நாம் வாழக்கூடிய பாரத தேசமாகிய இந்தியாவானது சுமார் 75 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்து, தனியாக செயற்படுவதாக இருப்பினும் கூட நாம் வாழக்கூடிய இந்நாட்டில் இன்னும் பல்வேறு துறைகள் முடங்கி போய் எழுச்சிகள் ஏதும் இல்லாமல் இருப்பதனை காணலாம்.
அதாவது வறுமை, சாதி, இனம், மதம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் சூழப்பட்ட தேசமாகவே நாம் வாழக்கூடிய நாடு அடையாளப்படுத்தப்படுகின்றது. அத்தோடு உணவு உற்பத்தி, தொழில் வளங்கள் என்பவற்றிலும் தன்னிறைவை இன்னும் எட்டவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
எனவே இவ்வாறான அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டிய ஒரு புதிய இந்தியாவாகவே 2047 ஆம் ஆண்டில் எனது பார்வையில் இந்தியா காணப்பட வேண்டும்.
2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூக ஒருங்கிணைப்பும், ஒருமைப்பாடும்
- கல்வியின் வளர்ச்சி
- விவசாய துறையில் வளர்ச்சி
- தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழக்கூடிய பாரத தேசமானது தற்காலங்களில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சனத்தொகை வளர்ச்சி என்பவற்றை துரிதமாக கொண்டுள்ள போதிலும். அதிக அளவுக்கு பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், மற்றும் சுகாதார பிரச்சினைகளை சந்திக்க கூடிய ஒரு களமாகவே காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான அனைத்து பிரச்சினைகளையும் கலைந்து புதியதொரு இந்தியாவை நிறுவுவதே என்னுடைய 2047 ஆம் ஆண்டு கனவு இந்தியாவின் முக்கியமான நோக்கமாகும்.
அதனடிப்படையில் 2047 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவானது எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதனை இந்த கட்டுரையில் காணலாம்.
சமூக ஒருங்கிணைப்பும், ஒருமைப்பாடும்
ஆசிய கண்டத்தின் “பெரிய அண்ணா” என்ற சிறப்பு பெயரைக் கொண்டுள்ள இந்தியாவானது பல்வேறு இன, மத, மொழி, நிற வேறுபாடுகளை கொண்ட மக்களை உள்வாங்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு நாடாகும்.
ஆகவே இங்கு இயல்பாகவே இன, வர்க்க சாதி, வேறுபாடுகளும், பிரச்சனைகளும் தோன்றிய வண்ணமே உள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் வாழக்கூடிய அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பல்வேறு பல்லின கலாச்சார நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் தான் இந்திய நாட்டவர் ஒரே தேசத்தவர் என்ற குடையின் கீழ் கொண்டு வருவது மிகவும் அவசியமானதாகும்.
எனது 2047 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே சமூக ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் காணப்படுகின்றது.
கல்வியின் வளர்ச்சி
ஒரு நாட்டினுடைய கல்வி வளர்ச்சி அதிகமாகும் போது அந்த நாட்டின் ஏனைய அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கல்வி என்பது ஏழை பணக்காரன் என்று எந்தவித பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களும் அனுபவிக்க கூடிய ஒரு தனி உரிமை ஆக மாற வேண்டும்.
ஆகவே எமது நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களையும், மாணவர்களுக்கான கல்வி வளங்களையும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான நூலகங்கள் போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, எதிர்கால சந்ததியினர் 100% எழுத்தறிவு படைத்தவர்களாக திகழ வேண்டும் என்பதே எனது எதிர்கால இந்தியாவின் இலக்காகும்.
விவசாய துறையில் வளர்ச்சி
இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவே விவசாயம் காணப்படுகின்றது. ஆகவே இந்த விவசாயத்துறையானது சிறப்பாக விளங்கினால் மாத்திரமே இந்தியாவின் பொருளாதார மேன்மை அடைய கூடும்.
இதற்கான முன்னேற்பாடுகளாகவே தற்போதைய காலங்களில் இருந்து விவசாயிகளுக்கான நுண்திட்ட கடன்களை வழங்குதல், மானிய முறையில் உரம் மற்றும் விதைகள் வழங்குதல், பயிர் காப்பீட்டு முறைகள் பற்றிய தெளிவையும் அதற்கான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்துதல், சிறந்த விவசாய செய்கைக்கு தேவையான ஆற்றல்களை விவசாயிகளிடம் ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை செய்தல் மற்றும் விவசாயிகளுக்கான லாபங்களை அதிகப்படுத்தும் செயல் திட்டங்களை செய்தல் போன்ற மாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதே வருங்கால இந்தியாவானது விவசாயத் துறையில் வளர்ச்சி கண்டு ஒரு சிறந்த அபிவிருத்தியை அடையும் என குறிப்பிடலாம்.
தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி
தற்காலங்களில் மக்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதனால் சமூகங்களிலேயே வேலையின்மை என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகவே மாறிவிட்டது.
நடைமுறை உலகுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த அறிவை மாணவர்களுக்கு வழங்குவதோடு நாட்டில் அனைவரும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வேலை வாய்ப்புகளையும் அதிகப்படுத்தி கொடுப்பது நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும்.
இதன்படி சுயதொழில் வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல், தனியார் துறை கம்பெனிகளை உருவாக்குதல் அல்லது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தல் மற்றும் பெண் தலைமை குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவாரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் வருங்கால 2019 ஏழாம் ஆண்டு இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை கட்டி எழுப்பலாம்.
முடிவுரை
நாம் வாழும் இந்திய தேசமானது தற்காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் இவ்வாறான அனைத்து இன, சமூக, மத, கலாச்சார, அரசியல், பொருளாதார பிரச்சினைகளை களைந்து ஒரு தன்னிறைவான சுதந்திரமான இந்தியாவினை கட்டியெழுப்புவதே 2047 ஆம் ஆண்டு எதிர்கால இந்தியா பற்றிய எனது பார்வையாகும்.
You May Also Like: