விண்வெளியில் இந்திய சாதனைகள் கட்டுரை

vinveliyil india sadhanaigal katturai in tamil

விண்வெளித் துறையில் சாதனை படைத்ததொரு நாடாக இந்தியா திகழ்வது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் இன்று பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு வளர்ந்து வரும் ஓர் நாடாக இந்தியாவே காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

விண்வெளியில் இந்திய சாதனைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • முதல் செயற்கை கோள்
  • நிலவில் தடம் பதித்த சந்திரயான் – 1
  • ஏவுகணை வாகனங்களும் விண்வெளி பயணமும்
  • விண்வெளி பயணத்தில் மனிதர்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் விண்வெளி சாதனைகளானவை 1950 காலப்பகுதிகளில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று பல்வேறுபட்ட சாதனைகளை கண்டு வருவதானது இந்திய மண்ணின் பெருமையினையே எடுத்துக்காட்டுகின்றது.

முதல் செயற்கை கோள்

விண்வெளியில் இந்தியாவின் முதற் கட்ட சாதனையானது 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இந்தியாவின் வானியல் அறிஞரான ஆர்யப்பட்டாவின் பெயரில் ஏவப்பட்டது. இதுவே இந்தியாவால் ஏவப்பட்ட முதல் செயற்கை கோளாகும். இது 250 பொறியிலாளர்களை கொண்டு 2 வருட உழைப்பின் பயனாக வடிவமைக்கப்பட்டதொரு செயற்கை கோளாக திகழ்ந்தமை இதன் சிறப்பாக காணப்படுகின்றது.

நிலவில் தடம் பதித்த சந்திரயான் – 1

இந்தியாவில் சூழல் மற்றும் வானிலை, ஒளிபரப்பு, தகவல் தொடர்பு என்பவற்றை கண்காணிப்பதற்கு செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கை கோளே சந்திரயான் – 1 ஆகும்.

இது 2008ம் ஆண்டு ஒக்டோபர் 22ம் திகதி விண்ணில் ஏவப்பட்டு நிலவின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதொரு கோளாகும். இது 2008ல் நிலவில் இறங்கி தனது இந்திய கொடியை தடம்பதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தொரு கோளாகும்.

இக்கோளானது சந்திரனில் நீர் மூலக் கூறுகள் காணப்படுவதனை கண்டுபிடித்ததோடு இந்தியர்களின் திறமையினையும் எடுத்தியம்புகின்றது.

ஏவுகணை வாகனங்களும் விண்வெளிப் பயணமும்

இந்தியாவானது விண்வெளித் துறையில் பல்வேறுபட்ட வளர்ச்சியினை கண்டு வருவதோடு அதனுள் ஏவுகணை வாகனங்களின் வளர்ச்சியும் ஒன்றாகும். அந்த வகையில் ஜியோசின்க்ரோனல், சாட்டலைட் லாஞ்ச் வெஹிக்கின் போன்ற ஏவுகணை வாகனங்களானது குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் GSLV மார்க் 3 என்ற ஏவுகணையானது அதிக எடையுள்ள சுமைகளை சுமந்து செல்லக் கூடிய திறமை கொண்டதொரு ஏவுகணையாகும்.

விண்வெளிப் பயணத்தில் மனிதர்கள்

இந்திய விண்வெளித் துறையில் சாதனை படைத்த விண்வெளி வீரர்களாக ராகேஸ் சர்மா, கல்பனா சவ்லா, சுனிதா வில்லியம் போன்றோர்கள் காணப்படுகின்றனர்.

அந்தவகையில் விண்வெளியில் முதல் கால் பதித்த இந்தியராக திகழ்பவர் ராகேஸ் சர்மா ஆவார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டமானது இன்று வரவேற்கத்தக்கதொரு சிறந்த திட்டமாகவே திகழ்கின்றது.

அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு சாதனைகளை கொண்டமைந்ததொரு நாடாக இந்தியா திகழ்வதில் எவ்வித ஐயமுமில்லை.

முடிவுரை

இந்திய நாட்டினுடைய வளர்ச்சியானது கல்வி, சுகாதாரம், தொழில் என வளர்ச்சியடைந்து காணப்பட்டது போன்று விண்வெளியிலும் சாதனைகளை படைத்த ஓர் நாடாக இந்தியா திகழ்வது சிறப்பிற்குரியதாகும். இந்தியாவின் விண்வெளி சாதனையானது இந்திய நாட்டின் தனித்துவத்தை எடுத்தியம்பக் கூடியதாகும்.

You May Also Like:

டிஜிட்டல் இந்தியா கட்டுரை

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை