பதிவுரு எழுத்தர் பணியானது ஆவணங்களை பராமரித்துக் கொள்ள துணைபுரிகின்றது.
பதிவுரு எழுத்தர் பணி என்றால் என்ன
பதிவுரு எழுத்தர் பணி என்பது பணி அலுவலக ஆவணங்களை பராமரிப்பதாகும். அதாவது சில அலுவலகங்களில் கூடுதலாக ஜெராக்ஸ், படிப்பெருக்கி போன்ற உபகரணங்களை இயக்குபவர்களாகவும் பதிவுரு எழுத்தர்களின் பணியானது காணப்படுகிறது.
பதிவுரு எழுத்தரின் கடமைகள்
பதிவுரு எழுத்தரானவர்கள் தரவு உள்ளீட்டு பணிகளை மேற்கொள்வார்கள்.
கோப்பு மாற்றங்கள் அல்லது அணுகல் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் உட்பட புதுப்பித்த பதிவுகளை பராமரித்தல்.
இயற்பியல் பதிவுகளின் டிஜிட்டல் நகல்களை உருவாக்க கோப்புகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தல்.
பதிவுரு எழுத்தரிடம் காணப்பட வேண்டிய திறன்கள்
ஒரு பதிவுரு எழுத்தர் சிறந்த முறையில் தன்னகத்தே திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் பதிவுரு எழுத்தரிடம் காணப்பட வேண்டிய திறன்களை நோக்குவோமேயானால்.
தரவு உள்ளீடு திறன்
அதாவது தரவுகளை எவ்வாறு முறைப்படுத்தி உள்ளீடு செய்வது தொடர்பான திறன் காணப்பட வேண்டும். இதனூடாக பதிவுரு எழுத்தருடைய பணியானது சிறப்பாக இடம் பெறும்.
நிர்வாக மற்றும் நிறுவன திறன்
பதிவுரு எழுத்தர் என்பவர் ஓர் ஆவணங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றியும் நிர்வாகம் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறுவனத்தின் நோக்கம் பற்றியும் அறிந்து செயற்படக்கூடியவராக காணப்படல் வேண்டும்.
செயலாக்க கருவிகளின் வேலை அறிவு
அதாவது ஜெராக்ஸ் போன்ற செயலாக்கக் கருவிகளை இயக்க தெரிந்தவர்களாக காணப்படுதல் வேண்டும். இதனூடாகவே தனது பதிவுரு எழுத்தர் பணியை மேற்கொள்ள முடியும்.
விமர்சன சிந்தனை திறன்
அதாவது விமர்சன ரீதியில் எவ்வாறு சிந்தித்து தனது நிர்வாக விடயங்களை மேற்கொள்தல் என்பது தொடர்பாக விமர்சன சிந்தனைத்திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
பல்வேறு வகையான பதிவுரு எழுத்தர்களில் ஒருவர் பணிபுரியும் தொழில்களுக்கேற்ப பல்வேறுபட்ட பதிவுரு எழுத்தர்கள் காணப்படுவர்.
அதாவது சுகாதார வசதிகளில் பணிபுரியும் பதிவுரு எழுத்தர்கள், மருத்துவ பதிவுரு எழுத்தர்கள், நிதி நிறுவனங்களில் பணிபுரியும் நிதி பதிவுரு எழுத்தர்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாக பதிவுரு எழுத்தர்கள் போன்றோர் காணப்படுகிறார்கள்.
பதிவுரு எழுத்தரின் பிரதான பணி
ஒரு பதிவுரு எழுத்தரின் பணியானது ஒரு நிறுவனத்தின் தரவுகளை பராமரிப்பதற்கு துணைபுரிவதோடு துல்லியமாக பதிவு செய்து வைப்பதற்கும் அதனை அணுகுவதற்கும் துணைபுரிகின்றன. மேலும் இவர்கள் கோப்பு மேலாண்மை அமைப்புக்களை உருவாக்கி ஆவணங்களை சிறந்த முறையில் பாதுகாக்கின்றனர்.
மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவு செய்கின்றதனை உறுதி செய்கின்றனர். ஒரு பதிவு எழுத்தாளர் கல்வி உட்பட பல தொழில்களில் பணியாற்ற முடியும்.
பதிவுரு எழுத்தாளர் முக்கியமான ஆவணங்களை தாக்கல் செய்யவும், நிறுவனத்தின் கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருப்பதனையும் ஒரு பதிவு எழுத்தாளர் தனது பணியாக கொண்டு செயற்படுகின்றனர்.
பதிவுரு எழுத்தரின் பொறுப்புக்கள்
கணினி மற்றும் பைலிங் சிஸ்டங்களில் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப பதிவுகள் மற்றும் கோப்புக்களை செயலாக்குதல், ஒழுங்கமைத்தல்.
தகவல்களை கோரும் நபர்களுக்கு வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் அதேநேரத்தில் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்.
புதிய கோப்புக்களை தயாரித்து கணிணி மற்றும் பேப்பர் சிஸ்டம் இரண்டிலும் கணிணி நடைமுறைகளின் படி தரவுகளை அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்களை மேற்கொள்வதனை பதிவிரு எழுத்தாளர் தன்னகத்தே கொண்டு செயற்படுகின்றார்.
You May Also Like: