சைவ சமயங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வாகனங்களாக பிராணிகள் காணப்படுகின்றன.
இந்துக்கள் தெய்வங்களை வழிபடுவதோடு மட்டுமல்லாது அவர்களுக்குரிய அம்சமான வாகனமாக விளங்கும் பிராணிகளையும் வழிபடுவதோடு விரத காலங்களில் அப்பிராணிகளை பூஜித்து வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
இன்றைய இந்த பதிவில் நாம் மகாலட்சுமியின் வாகனப் பறவையான ஆந்தை பற்றி பார்ப்போம்.
ஆந்தையின் தோற்றம் பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் காணப்படுகின்றது. இந்த ஆந்தை மக்களிடையே ஒரு கூடாத சகுணத்தின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வீடுகளில் ஆந்தை இருத்தல் மற்றும் ஆந்தை அலறுதல் போன்ற விடயங்கள் அவ்விடத்தில் இறப்பு சம்பவம் ஏற்படப் போகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். இதனால் சமூகத்தினால் வெறுக்கப்படும் ஒரு பறவையாக ஆந்தை விளங்குகின்றது.
ஆந்தையின் இயல்புகள்
ஆந்தையின் கண்கள் மிகவும் பெரியதாகவும் முட்டை வடிவில் காணப்படும். இது எல்லா திசைகளையும் சுற்றி பார்ப்பதற்கு தன்னுடைய தலையை 270டிகிரி வரை திருப்பும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் ஆந்தை ஆனது பகல் முழுதும் உறங்குவதோடு இரவில் கண் முழித்து வேட்டையாடும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆந்தையின் நகங்கள் கூரிய வலுவாகக் காணப்படுவதோடு இதன் இறகுகள் மெருதுவானவையாகக் காணப்படுகின்றன.
இத்தகைய ஆந்தையின் உடலமைப்புக்கள் அதனது இரையை இலகுவாக வேட்டையாட உதவுகின்றது. மேலும் ஆந்தையின் சிறப்பம்சம் என்னவெனில் இதற்கு மூன்று இமைகள் காணப்படுகின்றன.
அதாவது இமைப்பதற்கு, தூங்குவதற்கு, கண்களை சுத்தம் செய்வதற்கு என தனித்தனி இமைகளைக் கொண்டுள்ளமை ஆந்தைக்கே உரிய சிறப்பம்சம் ஆகும்.
மகாலட்சுமியின் பறவை வாகனம்
மகாலட்சுமியின் வாகனமாக கருதப்படுவது ஆந்தை ஆகும். இந்தியாவின் வட பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் மகாலக்சுமியையும் அவரது வாகனமான ஆந்தையையும் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
மேலும் இந்தியாவின் வட பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய வீடுகளின் கூரைகளில் ஆந்தைகள் கூடு கட்டி வாழ்வது மற்றும் அது தினமும் அலறிக் கொண்டு இருப்பது நல்ல சகுணம் என்று நினைத்து கருதி வாழ்கின்றனர்.
மேலும் அப்பிரதேசங்களில் நிகழ்வுகள் நடக்கவிருக்கும் வீடுகளில் ஆந்தை அலறும் ஒலி கேட்டால் அந்த வீட்டிற்கு லக்சுமியின் சம்மதம் கிடைத்ததாக கருதப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் அந்த பிரதேசங்களில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது ஆந்தை அலறும் சத்தம் கேட்டால் போகின்ற காரியம் உறுதியாக வெற்றி பெறும் என்று நம்புகின்றனர். அத்துடன் இங்கு ஆந்தை அலறுவதால் அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும்.
ஆந்தையின் புத்தி மிகவும் கூர்மையானது. ஐரோப்பியர்கள், கிரேக்கர்கள் ஆந்தையை அறிவின் கடவுள் என்று அழைக்கின்றனர்.
குறிப்பாக கோயில்களில் உள்ள மரங்களில் ஆந்தை ஒலி எழுப்பினால் அவ்வூரில் வாழும் மக்களுக்கு நல்லன நடக்க போவதாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. அத்தோடு அந்த ஆந்தை ஒலி எழுப்பாமல் அமைதியாக இருத்தல் அல்லது கெடுதல் நடப்பதற்கான சகுனமாகப் பார்க்கப்படுகின்றது.
நவக்கிரகங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்து ஆந்தை ஒலி எழுப்பும் சத்தங்களுக்கு ஏற்றவாறு அதன் பலன்கள் கூறப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் ஆந்தைக்கு இரவின் அரசன், விவசாய நண்பன், செல்வம் தரும் பறவை போன்ற பல பெயர்கள் காணப்படுகின்றன.
You May Also Like: