இவ் உலகில் மனிதனானவன் எவ்வாறு வாழ்கின்றானோ அவ்வாறே அவன் வாழ்கைக்கான உண்மைத் தன்மையினை புரிந்து கொண்டு வாழ்வதும் மிக முக்கியமானதொன்றாகவே கருதப்படுகின்றது.
மனிதனானவன் கற்பனை செய்யக்கூடியவனாகவே திகழ்ந்து வருகின்றான். அவ்வாறாக அவன் கற்பனை செய்வதானது பல சந்தர்ப்பங்களில் கற்பனையாகவே அமைந்து விடுகின்றது.
இவ்வாறான கற்பனையினை தவிர்ந்து வாழ்க்கையின் உண்மைத் தன்மையினை புரிந்து கொள்வதற்கு யதார்த்தவாதமானது துணைபுரிகின்றது எனலாம்.
யதார்த்தவாதம் என்றால் என்ன
யதார்த்தவாதம் என்பது கற்பனையினை தவிர்த்து ஒரு விடயம் பற்றிய உண்மைத் தன்மையினை சுட்டிக்காட்டுவது என குறிப்பிடலாம். அதாவத ஒரு விடயம் எவ்வாறு நடந்தேறியதோ அதனை அவ்வாறே கூறுவதாகும்.
கற்பனைவாதத்தினை தவிர்த்து வாழ்கையினுடைய யதார்த்தத்தினை குறிப்பிடுவதனை யதார்த்தவாதமாக கொள்ளலாம். எமது வாழ்க்கையில் நடைபெறும் விடயங்கள் பற்றிய ஒரு தெளிவான தன்மையினை யதார்த்தவாதமானது விளக்குகின்றது.
யதார்த்தவாதத்தின் அவசியம்
யதார்த்தவாதத்தின் அவசியத்தினை நோக்குவோமேயானால் ஒரு செயலினுடைய தெளிவினை அறிந்து கொள்வதற்கு இது துணைபுரிகின்றது. அதாவது ஒரு விடயம் பற்றிய செய்திகளை இலகுவாக எம்மால் புரிந்து கொள்ள காரணமாகின்றது.
ஆரம்ப கால மக்களுடைய வாழ்க்கை வரலாறுகளை மிகவும் துள்ளியமாக அறிந்து கொள்வதற்கு யதார்த்தவாதமானது அவசியமானதாக கருதலாம். மேலும் யதார்த்தவாதத்தின் மூலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை செயற்பாடுகளிலிருந்து தீர்வினை பெற்றுக்கொள்வதோடு பிரச்சினைகள் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளவும் இது துணைபுரிகின்றது.
ஆரம்ப கால கட்ட மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், போன்ற விடயங்களின் உண்மைத் தன்மையினை துள்ளியமாக அறிந்து கொள்ள யதார்த்தவாதமானது அவசியமாகின்றது.
யதார்த்தவாதத்தின் நன்மைகள்
யதார்த்தவாதமானது தனிநபருடைய மட்டுமல்லாது சமூகத்தின் தேவைகளுக்கும் முக்கியத்துவமளித்து வருகின்றது. மனிதர்களுடைய தேவைகளானது காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் தம் தேவைகளை உணர்ந்து கொண்டு செயற்பட யதார்த்தவாதமானது உதவுகின்றது.
கற்பித்தல் முறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு யதார்த்தவாதமானது துணைபுரிகின்றது.
அதாவது அறிவியல் துறையில் மாற்றத்தினை கொண்டு வருவதற்கு பாரிய அளவில் யதார்த்தவாதமானது செல்வாக்கு செலுத்துகின்றது. கதைகள், புகைப்படம் எடுத்தல் போன்றவற்றின் ஊடாக ஒரு விடயம் தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும்.
யதார்த்தவாதத்தின் தீமைகள்
யதார்த்தவாதமானது உண்மையான தேவைகள், உண்மையான உணர்வுகளுக்கு மாத்திரமே முக்கியத்துவமளிப்பதால் கற்பனை திறனானது மழுங்கடிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எம்மால் கற்பனை வளத்தினை செயற்படுத்த முடியாத ஒரு சூழல் எமக்குள் ஏற்படுகின்றது.
யதார்த்தவாதமானது அறிவியல் பாடத்திற்கே முக்கியத்துவமளிப்பதன் காரணமாக கலை மற்றும் இலக்கியத்துறைகளானது முக்கியத்துவம் இழந்து காணப்படுகின்றது.
மேலும் எம்முடைய இலட்சியம் மற்றும் மதிப்புக்களுக்கு முக்கியத்துவமளிக்காது செயற்படுகின்றது. இதன் காரணமாக மனிதனானவன் இலட்சியமற்ற மானுடனாகவே காணப்படுவதோடு இலட்சிய ரீதியான எண்ணங்களும் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.
அறிவியலும் யதார்த்தவாதமும்
இன்று யதார்த்தவாதமானது அறிவியல் துறையில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்தகின்றதனை காணக்கூடியதாக உள்ளது. அதாவது நாம் அறிந்து கொண்ட விடயங்களில் இருந்து நாம் அறியாத விடயங்களை ஒரு தொடர்புடன் ஆராய்வதனை அடிப்படையாக கொண்டு அறிவியல் யதார்த்தவாதமானது செயற்படுகின்றது.
அறிவியல் யதார்த்தவாதமானது பல்வேறுபட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் காரண காரிய தொடர்புத்தன்மை என்பவற்றை மேற்கொண்டு வருகின்றமை அறிவியலில் யதார்த்தவாதத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதனை குறிப்பிடலாம்.
இவ்வாறாக யதார்த்தவாதமும் அறிவியலும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக காணப்பட்டாலும் சில அறிஞர்கள் இதன் தன்மையினை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.
ஏனெனில் யதார்த்தவாதமானது யதார்த்தத்தினை மட்டுமே பிரதிபலிக்க கூடியதாக காணப்படுவதோடு இங்கு எதிர்கால திட்டங்களுக்கு இடமளிக்காமலேயே இதன் செயற்பாடும் அமைந்துள்ளது எனலாம்.
You May Also Like: