அதிகாரம் என்றால் என்ன

adhikaram in tamil

நிர்வாக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மிக முக்கியமானதொன்றாக அதிகாரமானது விளங்குகின்றது.

அதிகாரம் என்றால் என்ன

அதிகாரம் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் செயற்படுத்தக் கூடிய சிறப்புரிமைகள், ஆட்சியை குறித்து நிற்கின்றது. அதாவது சட்டம், கொள்கை, கட்டுப்பாடுகள் போன்றன ஒரு தலைமையில் இருந்து உருவாகின்றது. அவற்றை அமுல்படுத்துவதற்கு அதிகாரமானது அவசியமாகின்றது.

அந்த வகையில் அதிகாரமானது பல்வேறு வகைகளாக காணப்படுகின்றது. அரசியல் அதிகாரம், சமூக அதிகாரம், பொருளாதார அதிகாரம் என பல்வேறுபட்ட அதிகாரங்கள் காணப்படுகின்றன.

அதிகாரத்தின் சில முக்கிய பண்புகள்

சட்டபூர்வமான தன்மையை கொண்டதாக காணப்படும்

அதிகாரத்தின் அத்தியாவசிய பண்புகளில் ஒன்றாக சட்டபூர்வ தன்மை காணப்படுகின்றது. அதிகாரம் என்பது ஒரு நிறுவனத்தில் உள்ள மேலதிகாரிகளின் சட்டபூர்வ உரிமையை குறித்து நிற்கின்றது. அதிகாரமானது சில இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முடிவெடுத்தல்

முடிவெடுத்தலானது அதிகாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக காணப்படுகின்றது. அதாவது ஒரு தனி நபரோ அல்லது குழுவோ கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க அங்கீகரிக்கப்பட்டால் இறுதியில் ஒரு நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் தொடர்பான முடிவுகளை நேரடியாக செய்வதற்கான அதிகாரமானது அவர்களிடம் காணப்படும்.

செயற்படுத்தல்

முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் செயற்பாடுகளை செயற்படுத்தல் வேண்டும். ஒரு செயற்பாடு அது செயற்படுத்தப்பட வேண்டிய விதம் ஒவ்வொரு நிறுவனத்திலும் மேலாளர்க்கு மேலாளர் மாறுபட கூடியதாகும்.

ஆதிக்கம் செலுத்தல்

அதிகாரமானது மற்றவர்களுக்கு கட்டளையிடும் தனிநபரின் திறனாகும். அதிகாரமுடைய ஒரு தனிநபர் அல்லது குழு மற்ற தனிநபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

பொறுப்புக்கூறல்

அதிகாரம் கொண்டதொரு நபர் அல்லது தனிநபர்களின் குழு சில உயர் அதிகாரங்களுக்கு பொறுப்பு கூற கூடியதாக காணப்படும். ஒரு ஜனநாயக அமைப்பில் பொறுப்புக் கூறல் மிக முக்கியமானதொரு பண்பாகும்.

அரசியலும் அதிகாரமும்

அரசியல் என்பது ஒரு சமூகத்திற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து செயல்படுத்துவதை குறிக்கின்றது. மேலும் அரசியல் என்பது அதிகாரம் விநியோகிக்கப்படும் மற்றும் செயல்படுத்தப்படும் அரசியல் நிறுவனத்தினையும் குறித்து நிற்கின்றது.

அந்த வகையில் அரசியலின்றி அதிகாரமும், அதிகாரமின்றி அரசியலும் இல்லை என்றளவிற்கு இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக காணப்படுகின்றது.

ஒரு சமூகமானது ஒரு குறிப்பிட்ட வழியில் அதிகாரத்தை பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டால் அதுவே முறையான அதிகாரமாகும். அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறைகளை வரையறுக்கும் ஓர் கட்டமைப்பாகும்.

அதிகாரம் அரசியல் பற்றி பிளட்டோவின் குடியரசு, அரிஸ்டோட்டிலின் அரசியல் மற்றும் கன்பியூசியஸின் படைப்புக்கள் போன்ற நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வகையிலேயே அரசியலின் பிரதான கருப் பொருளாக அதிகாரம் திகழ்கின்றது என்பதனை சுட்டிக்காட்ட முடிகின்றது.

வீட்டோ அதிகாரம்

வீட்டோ அதிகாரம் எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரமே வீட்டோ அதிகாரமாகும்.

இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்கு இந்த ஐந்து நாடுகளின் பங்கானது வெளியுலகிற்கு தெரிய வந்ததால் ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்ட 1946 ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும் அதிகாரம்) பெற்ற நாடுகளின் சிறப்பை இந்த நாடுகளே பெற்றுள்ளது.

அதிகாரமானது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகின்றது. மேலும் அரசியலில் பிரதானமானதொன்றாக அதிகாரமே செயற்படுகின்றது.

You May Also Like:

அமைப்பு சாரா தொழில் என்றால் என்ன

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன