அப்துல் கலாம் பேச்சுப்போட்டி

abdul kalam speech in tamil

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தியாவின் ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி என்றழைக்கப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் பற்றியே பேசப்போகின்றேன்.

அப்துல் காலம் அவர்கள் இந்தியாவில் தென்கோடி பகுதியில் ஒன்றான ரமேஸ்வரத்தில் 1931ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் ஒரு அணு விஞ்ஞானியாக உலகில் தடம் பதித்தவராவார்.

இவரது குடும்பமானது ஏழ்மையானதாகவே காணப்பட்டது. இதன் காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்று தனது குடும்பத்தை பராமரித்தார்.

தனது பள்ளிப்படிப்பை ராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிலே பயின்றார். பள்ளிப்படிப்பை தொடங்கிய காலப்பகுதியிலேயே தனது குடும்ப வறுமையினை கருத்திற் கொண்டு தனக்கு கிடைத்த வேலைகளை செய்தார்.

அதாவது பள்ளி நேரம் போக மற்றைய நேரங்களில் வீடு வீடாக சென்று செய்தித்தாள்களை விநியோகம் செய்தார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்ததன் பின்னர் திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் எனும் கல்லூரியில் இயற்பியலை கற்று இளங்கலை பட்டத்தினை பெற்றார்.

இயற்பியலில் தனக்கு ஆர்வமில்லை என்பதனை உணர்ந்த இவர் 1955ம் ஆண்டு விண்வெளி பொறியியலை கற்றார். பின்னர் முதுகலை பட்டத்தினையும் பெற்றார்.

தனது குடும்பம் வறுமையின் கீழ் உள்ள போதும் தனது கல்வியை இடையிலே விட்டு விடாது பல தடைகளை தாண்டி தனது கனவுகளை நோக்கி பயணித்தவரே அப்துல் கலாம் ஆவார்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் டாக்டர் அப்துல் கலாம்

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பாரியதொரு பங்களிப்பினை மேற்கொண்டார்.

அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆய்வு கூடங்களை அமைத்து தொழில்நுட்பங்களை ராணுவம் அல்லாத மக்களுக்கு பயன்படும் வகையில் சாதாரண மக்களின் பகுதிக்கு மாற்றுவதற்கு டாக்டர் கலாமே காரணமாக இருந்தார்.

அந்த அடிப்படையில் 1996ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய அரசு நிறுவிய தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினராக கலாம் இருந்து வந்தார்.

இது அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தில் கலாமின் பங்கானது பாரிய அளவிலேயே காணப்பட்டது.

பெங்களூரிலுள்ள தேசிய விண்வெளி ஆய்வு கூடத்தில் லகுரகப் போக்குவரத்து விமானங்களை மேம்படுத்தி உற்பத்தி செய்ய அப்துல் கலாம் துணைபுரிந்தார்.

அப்துல் கலாம் தனது திறமையின் காரணமாக ஒரு சிறிய ஹெலிகப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். இந்திய ஆராய்ச்சி பணியகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த ஒரு மாமனிதராகவே அப்துல் கலாம் அவர்கள் திகழ்ந்தார்கள்.

1988ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய இடம் வகித்தவராக திகழ்ந்தார்.

தூர நோக்குடைய அப்துல் கலாம்

அப்துல் கலாம் அவர்கள் தனது இந்திய தேசத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவராகவே காணப்பட்டார்கள். இவர் எப்பொழுதும் ஒரு தூர நோக்குடனேயே செயற்படக் கூடியவராகவே காணப்பட்டார்.

அதாவது இளைஞர்களே கனவு காணுங்கள் என்பதினூடாக இளைஞர்கள் தவறான பாதையை நோக்கி செல்லாது சரியான பாதையை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டியாக இருந்தார்கள்.

மேலும் ஒரு தூர நோக்கின் அடிப்படையிலேயே இளைஞர்களை முன்னிலைப்படுத்தி நீ முயன்றால் நட்சத்திரங்களை பறிக்கலாம் எனக்கூறி நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடையே உள்ளது என்பதனை சுட்டிக் காட்டினார்.

மூன்றாவது குடியரசு தலைவரான அப்துல் கலாம்

இவர் 2002 ஆம் ஆண்டு ஜூலை 25ம் நாளில் 11வது குடியரசு தலைவராக பதவியேற்றார். இவர் குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பே இவரிற்கு “பாரதரத்னா” என்ற விருதானது அரசினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மாமனிதர் 27 ஜூலை 2015ல் இந்த உலகை விட்டு நீங்கிச் சென்றாலும். தன் வறுமையினை பாராது அயராது உழைத்து உலகமே போற்றும் மாமனிதராக பலருக்கும் உந்துசக்தியாக இன்றும் எம் மனக்கண் முன் தோன்றுபவராகவே அப்துல் கலாம் திகழ்கிறார்கள்.

You May Also Like:

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

எதிர்கால இந்தியா பேச்சு போட்டி