அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்

எல்லோருடைய தூக்கத்திலும் கனவு வருவது சாதாரணமான விடயம் ஆகும். பெரும்பாலான கனவுகள் பலருக்கு தூக்கத்தால் எழுந்ததும் ஞாபகத்தில் இருக்காது. சிலருக்கு எழும்பியதும் நினைவில் நன்றாக பதிந்திருக்கும்.

கனவுகள் காணும் நேரத்தை வைத்து அந்த கனவுகள் இன்னும் எத்தனை நாட்களில் நடக்கும் என்று ஸ்வப்ன சாஸ்திரம் என்ற கனவு தொடர்பான நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவுபடுத்தி உள்ளனர். இன்றைய பதிவில் உறக்கத்தில் அர்ச்சகர் வந்தால் அதன் பலன்கள் என்னென்ன என்பன பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்

ஒருவருடைய உறக்கத்தில் அந்த நபர் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பின் ஆலய அர்ச்சகர் பிரசாதம் தருவது போன்று கனவு வந்தால் அந்நபர் திருமணமாகாதவர் எனில் அந்த நபருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று அர்த்தம் ஆகும்.

ஒருவருடைய உறக்கத்தில் அர்ச்சகர் ஒருவர் உபதேசம் அல்லது போதனை போன்றன செய்வது போல் கனவு வந்தால் அந்த நபருக்கு திடீரென்று எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத செலவுகள் பல ஏற்படும் என்பது அர்த்தம் ஆகும். அதுமட்டுமல்லாமல் அந்த நபருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களால் பண விரயம் போன்றன ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

ஒரு நபருடைய உறக்கத்தில் ஒரு கோயில் ஐயர் கனவில் வந்தால் தற்போது எடுத்திருக்கும் முடிவுகள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை யாவும் யாரோ ஒருவர் இறைவனால் அனுப்பப்பட்டு பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகின்றது.

ஒருவரது உறக்கத்தில் பூசாரி அந்த நபருக்கு தீர்த்தம் வழங்குவது போன்று கனவு வந்தால் அந்த நபருக்கு அல்லது அவரது குடும்பத்தில் உள்ள யாராவது நபருக்கு இதுவரை குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருந்திருந்தால் எதிர்வரும் காலத்தில் விரைவில் குழந்தைப்பாக்கியம் உண்டாகும் என்பது அர்த்தம் ஆகும்.

ஒருவருடைய உறக்கத்தில் புரோகிதர்கள் பலர் கூட்டமாக இருப்பது போன்று கனவு வந்தால் அந்த நபரின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் நல்ல காரியங்கள் பல நடக்கும் என்று கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது ஒருவரது உறக்கத்தில் புரோகிதர் ஒருவர் அந்த நபருக்கு சாபம் விடுவது போன்று கனவு வந்தால் அதுவரை அவர் வாழ்வில் இருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் தீரும் என்று நம்பப்படுகின்றது.

ஒருவருடைய உறக்கத்தில் அந்த நபர் ஒரு பிராமணரது இல்லத்துள் நுழைவது போன்று கனவு வந்தால் அந்த நபருக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது ஒருவருக்கு தூக்கத்தில் பிராமணர் பணம் தருவது போன்று கனவு வந்தால் அந்த நபரது பொருளாதார வாழ்க்கை நிலை உயரும் என்று கூறப்படுகின்றது.

ஒருவரது உறக்கத்தில் அந்தணர் ஒருவரைக் கனவு கண்டால் அந்த நபருக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி பொன், பொருள், ஆடை, சொத்து சேர்க்கை உண்டாகும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார் என்று கூறப்படுகின்றது.

You May Also Like:

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்