அளபெடை என்றால் என்ன

alapedai in tamil

அளபெடை என்றால் என்ன

ஓர் எழுத்தானது தன் இயல்பான ஒலியில் இருந்து அதன் மாத்திரையினை நீட்டி ஒலித்தலே அளபெடையாக கொள்ளலாம். இந்த அளபெடையானது செய்யுள்கள் மற்றும் பாடல்களின் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அளபெடை என்றால் என்ன

அளபெடை என்பது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனலாம். அதாவது செய்யுளின் ஓசை குறைகின்ற இடங்களில் ஓசையினை நிவர்த்தி செய்வதற்காக எழுத்துக்கள் நீண்டு ஒலிக்கும் இவ்வாறு நீண்டு ஒலிப்பனவையே அளபெடையாகும்.

அளபெடையின் வகைகள்

அளபெடையானது பிரதானமாக 02 வகைகளாக காணப்படுகின்றது. அவை

  1. உயிரளபெடை
  2. ஒற்றளபெடை

உயிரளபெடை

உயிரளபெடை என்பது யாதெனில் செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்காக உயிர் நெடில் எழுத்துக்கள் ( ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழும் தன்னுடைய அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே உயிரளபெடை ஆகும்.

இந்த உயிரளபெடை எழுத்துக்களானது மொழி முதலிலும், மொழி இடையிலும், மொழி இறுதியிலும் அளபெடுத்து வருவதனை காணலாம்.

ஊதாரணம்: ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
நல்ல படாஅ படை – மொழி இறுதி
உறா அர்க்கு உறுநோய் – மொழி இடையிலும் அமைந்து காணப்படுகின்றது எனலாம்.

மேலும் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்களும் அதன் அருகிலேயே இடம் பெறுவதனையும் காணலாம். ( ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ)

உயிரளபெடையின் வகைகள்

உயிரளபெடையானது செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகளாக காணப்படுகின்றதனை குறிப்பிடலாம். அந்த வகையில் அதன் வகைகளை பின்வருமாறு நோக்கலாம்.

செய்யுளிசை அளபெடை:

செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்காக நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுத்து வருவது செய்யுளிசை அளபெடை எனப்படும். இந்த செய்யுளிசை அளபெடையினை இசை நிறை அளபெடை எனவும் அழைப்பர். மேலும் செய்யுளிசை அளபெடையானது “அ” எனும் எழுத்திலேயே முடிவுறும் எனவும் குறிப்பிடலாம்.

உதாரணமாக,

தெய்வம் தொழாஅள் கொழு நன் தொழு தொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

இன்னிசையளபெடை:

செய்யுளில் ஒசை குறையாத சந்தர்ப்பத்தில் அதன் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசையளபெடையாகும்.

உதாரணம், கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றி கெடும் அதாவது உடுப்பதூஉம் எனும் சொல்லில் உள்ள து என்ற குறில் எழுத்தானது தூ என்ற நெடில் எழுத்தாகி உடுப்பதூஉம் என அளபெடுப்பதனையே இன்னிசையளபெடையாக கருதலாம்.

சொல்லிசை அளபெடை:

சொல்லிசை அளபெடை என்பது செய்யுளில் ஒரு பெயர்ச்சொல்லானது வினையெச்ச சொல்லாக திரிபட்டு (மாறுபட்டு) அளபெடுத்து வருவதே சொல்லிசை அளபெடை எனப்படும். சொல்லிசை அளபெடையானது எனும் எழுத்தில் முடிவடையும் என்பதனையும் குறிப்பிடலாம்.

உதாரணமாக, உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரனசைஇ இன்னும் உளேன் அதாவது நசை என்பது விருப்பத்தினை சுட்டுகின்றது இது விரும்பி என்ற பொருளினை தருவதற்காக னசைஇ என அளபெடுத்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

ஒற்றளபெடை

அளபெடையின் வகைகளுள் மற்றுமொறு வகையாக ஒற்றளபெடையானது காணப்படுகின்றது. அந்த வகையில் ஒற்றளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்காக மெய்யெழுத்துக்களான (ங், ஞ், ண், ம், ந், ன், வ், ய், ல், ள்) ஆகிய பத்தும் ஃ எனும் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை எனப்படும்.

உதாரணம் :- வணங்ங்கினான், மன்ன்னன், எங்ங்இறைவன் போன்றவற்றுள் அதே எழுத்தானது மீண்டும் வருவதனை அவதானிக்க முடிகின்றது.

You May Also Like:

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

படர்க்கை என்றால் என்ன