ஆசிரியர் பற்றிய கட்டுரை

asiriyar katturai in tamil

உலகில் வேறு எந்த தொழிலுக்கும் வழங்காத கௌரவத்தினை சான்றோர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வழங்கி உள்ளனர்.

அதாவது மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்தபடியாக கண்ணியம் செலுத்தக்கூடியவர்களாகவே ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறு சிறப்பு மிகுந்த ஆசிரியராவதே எனது எதிர்கால இலட்சியம் ஆகும்.

ஆசிரியர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆசிரியரின் சிறப்பு
  3. ஆசிரியரின் முக்கியத்துவம்
  4. ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும்
  5. ஆசிரியரின் பண்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத செல்வமாகும். அத்தகைய அளவில்லாத செல்வத்தினை வழங்கக்கூடியவராகவே ஆசிரியர் காணப்படுகின்றார். அறிவு செல்வதை எமக்கு தரும் ஆசிரியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

ஆசிரியரின் சிறப்பு

ஒன்றும் அறியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களை பொக்கிஷங்களாக மாற்றுவது ஆசிரியர்கள் தான். அதாவது ஒரு மாணவனை நற்பண்புமிக்கவனாகவும், சிறந்த சமூகப் பிரஜையாகவும் மாற்றுவது ஆசிரியரின் சக்தியாகும்.

ஆகவே தான் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற பழமொழிக்கு இணங்க ஆசிரியர் இறைவனுக்கு நிகராக பார்க்கப்படுகின்றார். இது ஆசிரியர்களின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.

ஆசிரியரின் முக்கியத்துவம்

ஒரு குழந்தையை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பெற்றோராக இருப்பினும், அக்குழந்தைக்கு இவ்வுலகத்தினை அறிமுகப்படுத்துவார்களாக ஆசிரியர்களே இருப்பார்கள்.

அதாவது வெறும் களிமண் போன்று இருக்கும் மாணவர்களை இன, சாதி, மத பாகுபாடுகள் இன்றி ஒரு சிலையாக வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களே. எனவே இவர்களின் பங்கு சமூகத்துக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும்

நான் விரும்பும் ஆசிரியரானவர் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடிய சிறந்த ஓர் நண்பனாகவும், மாணவர்கள் அதே மனதில் நேரான எண்ணங்களை தோற்றுவிக்க கூடியவராகவும், இன்முகத்துடன் பேசக்கூடியவராகவும்,

மாணவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடியவராகவும், அன்பால் அறிவினை ஊட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

அதாவது மாணவர்கள் மத்தியில் சிறந்ததொரு ஆசிரியர் என போற்றப்படும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியரின் பண்புகள்

சிறந்த ஆசிரியர் எந்தவித இன, மத, சாதி பாகுபாடுகளும் இன்றி மாணவர்களை சமமாக நடத்தக் கூடியவராகவும், தெளிவான அறிவு படைத்தவராகவும், மாணவர்களுக்கு நற்பண்புகளையும், நன்னடத்தையையும் கற்றுக் கொடுப்பவராகவும்,

கருணையும், இரக்க குணமும் படைத்தவராகவும், சரி தவறை நியாயமான முறையில் சுட்டிக்காட்டக் கூடியவராகவும், தவறான வழியில் செல்லும் மாணவர்களை திருத்தக் கூடியவராகவும் மற்றும் கடமையில் நேர்மை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

முடிவுரை

ஒவ்வொரு மனிதனின் சாதனைக்கு பின்புலத்திலும் ஏதோ ஒரு ஆசிரியர் கட்டாயமாக இருப்பார். அதாவது ஏணிப்படி போன்று எம்மை உயர இடத்துக்கு கூட்டிச் செல்லக் கூடியவர்களே ஆசிரியர்கள்.

அந்த ஆசிரியர்களுக்கு உரிய கண்ணியத்தையும், மதிப்பையும் உரிய முறையில் வழங்குவது மாணவர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like:

இணையவழிக் கல்வி கட்டுரை