இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? | ஞானபீட விருது |
ஞானபீட விருதின் அறிமுகம்
1954ஆம் ஆண்டு சாந்திபிரசாத் ஜெயின் என்பவர் பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக் கழகத்தை தோற்றுவித்தார்.
இந்தியாவின் முதலாவது இந்திய குடியரசுத் தலைவரான Dr. இலாஜேந்திர பிரசாத் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களை ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவிக்க எண்ணி தொழில் முனைவோர்களிடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்கவே இந்த கழகம் உருவாக்கம் பெற்றது.
இந்த கழகத்தால் ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் பெற்ற பதினைந்து மொழிகளுள் மிகச் சிறந்த எழுத்தாளருக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றது.
ஞானபீட விருதின் அடையாளங்கள்
ஞானபீட விருதில் தங்கம் மற்றும் செம்பு கலந்த பட்டயமும் பித்தளையால் ஆன சரஸ்வதி சிலையுடன் கூடிய பாராட்டுப் பத்திரம் மற்றும் இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை முதலியனவே உள்ளடங்குகின்றன.
இந்த ஞானபீட விருது முதன்முதலில் 1961இல் நிறுவப்பட்டது. இந்த விருதினைப் பெற இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் தகுதியானவர் ஆவார்.
இந்த விருது முதன் முதலில் 1965இல் மலையாள மொழி எழுத்தாளரின் ஜி சங்கர குருப் பெற்றிருந்தார்.
ஞானபீட விருது வழங்கப்பட நோக்கம்
ஓர் எழுத்தாளரின் மிகச் சிறந்த படைப்பை பாராட்டியே 1982வரை வழங்கப்பட்டு வந்தது. எனினும் பின்னாளில் ஒவ்வொரு மிகச்சிறந்த எழுத்தாளரும் தமது வாழ்க்கை காலத்தில் இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது வழங்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள்
ஞானபீட விருது இன்றுவரை அதிகபட்சமாக ஹிந்தி மொழியைச் சேர்ந்த பதினொரு எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இந்த விருதிற்கான பணப்பரிசுத் தொகை 2015 ஆம் ஆண்டில் பதினொரு இலட்சமாக உயர்த்தப்பட்டது.
மொத்தமாகவுள்ள இருபத்தைந்து மொழிகளில் இதுவரை பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஹிந்தி, கன்னடம், வங்காளம், மலையாளம், குஜராத்தி, மராத்தியம், உருது, ஒடியா, தெலுங்கு, அசாமியம், காஷ்மீரி, பஞ்சாபி, சமஸ்கிருதம், கொங்கணி, தமிழ் போன்றனவே அந்த மொழிகள் ஆகும்.
ஞானபீட விருது இன்று வரை 57 எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களுள் ஏழு பேர் பெண் எழுத்தாளர்கள் ஆவார். ஞானபீட விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி ஆவார். 1965ஆம் ஆண்டு முதல் சத்தியம் எனப்படும் வங்காள புதினத்திற்காக இவர் அந்த விருதினைப் பெற்றார்.
விருதிற்கான விதிமுறைகளும் தேர்வு செய்யும் நடைமுறைகளும்
இந்த விருதிற்கு பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், விமர்சகர்கள், பல மொழிகளைச் சேர்ந்த வல்லுநர்கள் போன்றவர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்படுகின்றன.
பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் ஹிந்தி அல்லது ஆங்கில மொழியில் மாற்றம் செய்யப்பட்ட பின்னரே ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்யும். பின்னர் தேர்வுக்குழு தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை வெளியிடும்.
தேர்வுக்குழுவில் சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு தொடக்கம் பதினொன்று வரையான உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்படுவர்.
விருது பெற்ற ஒருவரது நூல்கள் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு பரிசீலனை செய்யப்படமாட்டாது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை குழு உறுப்பினர்களாக பதவியில் இருப்பர்.
You May Also Like: