இளைஞர்கள் பற்றிய கட்டுரை

இளைஞர்கள் பற்றிய கட்டுரை

ஒரு நாட்டினது எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டி எழுப்பும் சாதனங்களாக காணப்படுபவர்கள் இளைஞர்களே ஆவர்.

இளைஞர்கள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இளைஞர் எனப்படுபவர்
  • இளைஞரின் சிறப்புகள்
  • இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
  • சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

இளைஞர் எனப்படுவோர் ஒரு நாட்டினுடைய ஆணிவேராக காணப்படுகின்றனர். “விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்ற பழமொழியானது ஒரு இளைஞன் நாட்டினுடைய வளர்ச்சிக்கு எவ்விதம் பங்காற்றுவான் என்பது அவனது சிறுபராய நடவடிக்கைகளின் மூலமே அறிந்து கொள்ளலாம் என்பதை விவரிக்கின்றது.

இன்றைய சமூகத்தில் காணப்படுகின்ற இளைஞர்கள் நாட்டினுடைய வளர்ச்சிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இளைஞர் எனப்படுபவர்

இளைஞர் எனப்படுவோர் யாவரெனின், 15 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையானது இளைஞர்கள் என வரையறை செய்கின்றது.

இளம் வயதுக்கு உட்பட்டவர்களே புதிய ஆக்கத்திறன்களையும், சுறுசுறுப்பான செயற்பாடுகளையும், தர்க்க ரீதியான சிந்தனைகளையும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்களாக காணப்படுகின்றனர். இளைஞர்களின் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலமாக மேம்பட்ட சமுதாயத்தை உலக தரத்தில் ஏற்படுத்த முடிகின்றது.

இளைஞரின் சிறப்புகள்

இன்றைய உலகில் காணப்படுகின்ற இளைஞர்கள் யாவரும் திறமையினாலும், அறிவிலும் சிறப்பு வாய்ந்தவர்களாகவும் மற்றும் சமூக அக்கறை நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக சிந்தித்து அவற்றுக்கு தீர்வு காண்பவர்களாகவும், வரையறைகள் இன்றி சிந்தனைகளை விரிவுபடுத்தி பாரிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் என்பவற்றை மேற்கொண்டு உலகினை நல்வழிக்கு இட்டு செல்பவர்கள் ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க சிறப்புகளாக காணப்படுகின்றன.

இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

தற்காலத்தில் இளைஞர்கள் பல்வேறு வகையான சவால்களை தம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் எதிர்நோக்குபவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் எதிர் நோக்குகின்ற சவால்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் வாழ்க்கையை திசைத் திருப்பும் விடயங்களாகவும் காணப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு,

  • அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை.
  • தவறான அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகள்.
  • சமூக ஏற்றத்தாழ்வுகள்.
  • ஜாதி, மத, இனம் சார் பாகுபாட்டுப் பிரச்சனைகள்.
  • பாலியல் துஷ்பிரயோகங்கள்.

சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு

ஒரு நாட்டினுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒரு விடயமாக காணப்படுகின்றது. இன்றைய கால இளைஞர்களுக்கு எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், துணிவும், ஆர்வமும் அதிகமாக காணப்படுகிறது.

இவர்களை சரியான முறையில் நெறிப்படுத்தவதன் மூலம் ஒரு சமுதாயத்தை வளர்ச்சி பாதையை நோக்கி எடுத்துச்செல்ல முடிகின்றது. இத்தகைய இளைஞர்களை சரிவர செயலாற்றுவது ஒரு சமூகத்தின் கடமையாகும்.

தற்காலத்தில் காணப்படுகின்ற இளைஞர்கள் சமுதாய அக்கறை கொண்டவர்களாகவும், நாட்டின் மீது பற்று கொண்டவர்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முடிவுரை

ஒரு நாட்டினுடைய தூண்களாக காணப்படுகின்ற இளைஞர்களை அவர்களுக்கு எதிரான சவால்களில் இருந்து மீட்டு எடுத்து சரிவர வழி நடத்துவதன் ஊடாக ஒரு நாட்டில் சிறந்த தலைவர்கள் உருவாக்கப்பட்டு நாடு முன்னேற்ற நிலையை அடைகின்றது.

You May Also Like:

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்