உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள்

udal nalam slogan in tamil

ஒரு மனிதனானவன் தனது அன்றாட வாழ்வை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமாயின் உடல் நலம் பேணுவது அவசியமாகும். சிறந்த உடல் நலமே நோயில்லாத வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எனலாம்.

அதாவது எமது வாழ்வை தன்னம்பிக்கையுடன் கொண்டு செல்வதற்கு உடல் ஆரோக்கியமே சிறந்ததாகும். உடல் சீராக இருக்கும்போதே எமது உள்ளமும் சீர் பெற்று விளங்கும்.

ஆகவே உடல் நலனை கருத்திற்கொண்டு செயற்படுவதோடு மாத்திரம் நின்றுவிடாது உடலிற்கு தேவையான உடற்பயிற்சிகள், போசணைகளை வழங்குவது எம் அனைவரினதும் கடமையாகும்.

ஏனெனில் நாம் பல வேலைகளை செய்வதற்கு உறுதுணையாக உடலே காணப்படுகின்றது அத்தகைய உடலை சிறப்பாக வைத்திருப்பதனூடாகவே சுறுசுறுப்பாக வாழ முடியும்.

உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள்

உடல் நலம் பேணுவோம் உயிரை காப்போம்.!

செல்வத்தை இழந்தால் எதுவும் இழக்கப்படாது. ஆனால் உடல் நலத்தை இழந்தால் அனைத்தையும் இழந்ததற்கு சமமே.!

உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு நேரம் இல்லையென்றால், உங்கள் நோய்க்காக நேரத்தை ஒதுக்குவீர்கள்.!

உங்கள் உடல் நலத்தை காப்பது உங்கள் கடமையே.!

உங்கள் ஆன்மாவிற்கு மகிழ்ச்சியானதும் ஆரோக்கியமானதும் வீட்டை வழங்க வேண்டும் என்றால் உடல் நலத்தை பேணுங்கள்.!

மகிழ்ச்சியான மனமே சிறந்த உடல் நலத்தின் அடையாளம். உங்கள் உடலை நேசியுங்கள், அதுவே நீங்கள் இறக்கும் வரை உங்களுடன் இருக்கும்.!

உடலின் பலம் உடற்பயிற்சியே! அதிக உடற்பயிற்சியே உடலின் சிறந்த சக்தி.!

புகைப்பிடிப்பதை நிறுத்தி உங்கள் உடலையும் உயிரையும் காப்பாற்றுங்கள்.!
உடல் நலத்தை காக்க அதிக தண்ணீர் அருந்துங்கள்.!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் நலன் காப்போம்.!

ஆரோக்கியமான மனமே ஆரோக்கியமான உடலை உருவாக்குகின்றது.!

உடல் எடையை குறையுங்கள்.! உடல் நலத்தை பேணுங்கள்.!

உயிரை காக்க உடல் நலன் காத்திடு.!

நோயின்றி உடல் நலம் காத்திட கவலையை இன்றே தூக்கி எறி.!

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இன்றே உடல் நலன் பேணு.!

நோயற்ற உடலே அறிவை திறன்படச் செய்யும்.!

அளவான தூக்கமும் அறுசுவை உணவுமே நலமாக வாழ்வதற்கான வழி.!

சீரான இதயத்திற்கு உடல் நலம் காப்போம்.!

ஆரோக்கியம் ஒரு வரம் அதனை இன்றே கவனித்துக் கொள்ளுங்கள்.!

நீங்கள் செல்வந்தராக இருக்க விரும்பினால் உடல் நலத்தை பேணுங்கள்.!

உடல் நலன் ஒரு இலக்கு அல்ல! அது ஒரு பயணம்.!

நீங்கள் கொழுப்பை இழந்தால் நோயை எதிர்பீர்கள்.!

மகிழ்ச்சியான உடலும் மனமுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அடையாளம்.!

உடல் என்பது ஒரு அதிசயம்! அதனை காப்பதன் மூலம் எமக்கு கிடைப்பது பெரும் அதிஷ்டமே.!

எளிதான பயிற்சி நடைப்பயிற்சி, எம் உடல் நலம் பேண எமக்கு தேவை உடற்பயிற்சி!
நலமான உடலே நல்ல மனதிற்கு வழிவகுக்கும்.!

உடல் நலதை பேணுவோம்! கவலையை மறந்து வாழ்வோம்.!

உங்கள் உடல் நலம் உங்கள் கைகளிலே.!

வளமான சமூகத்திற்கு நலமான உடல் நலமே அவசியம்.!

உயிர் காக்கும் உடலை உறுதியாக காப்பது உன் கடமையே.!

உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவர்.!

நீண்ட கால வாழ்விற்கு உடல் நலம் காப்பதே சிறந்தது.!

நோயை எதிர்த்து போராட இன்றே உடல் நலத்தை காப்போம் என உறுதி மொழி எடுங்கள்.!

You May Also Like:

ஊட்டச்சத்து பற்றிய வாசகங்கள்

மனநலம் என்றால் என்ன