உந்தமானது ஒரு பொருளின் நிறை மற்றும் வேகத்தை சார்ந்ததாக காணப்படுகிறது. ஒரு பொருளை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருப்பதற்கு உந்தமானது அவசியமாகின்றது.
உந்தம் என்றால் என்ன
உந்தம் என்பது ஒரு பருமனும் திசையும் கொண்ட ஒரு காவிக்கணியம் ஆகும். நேர்கோட்டில் இயங்கும் துணிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். மரபு இயக்கவியலில் அதன் திணிவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டின் பெருக்குத்தொகையாக உந்தமானது காணப்படுகிறது.
மேலும் உந்தமானது நேரியக்க உந்தம் அல்லது பெயர்விக்க உந்தம் என்று அழைக்கப்படுகிறது. உந்தமானது புறவிசைகளின் தலையீடு இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியின் மொத்த உந்தமாக காணப்படுகின்றது.
ஒரு பொருள் இயக்கத்தில் இருக்கும் போது அதன் நிறை வேகத்தின் மடங்காக பெருகிறது. இதுவே உந்தமாக காணப்படுகிறது.
நேர்கோட்டு உந்தம்
நேர்கோட்டு உந்தமானது ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை அறிந்து கொள்ள இந்த உந்தமானது அவசியமாகின்றது. அதாவது திசை வேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் அதிகமாக காணப்படும். விசையின் விளைவானது திசை வேகத்தையும் நிறையினையும் சார்ந்ததாக அமைகின்றது.
இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசை வேகத்தின் பெருக்கற்பலனே உந்தமாகும். இதன் திசையானது பொருளின் திசைவேக திசையிலேயே அமைந்து காணப்படும். இது ஒரு வெக்டர் அளவாக காணப்படுகிறது.
இயற்பியல் உந்தம்
இயற்பியலில் உந்தமானது பல்வேறு வகையில் காணப்படுகின்றது. அதாவது இயக்கத்தின் அளவு, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு மொபைலின் வெகு ஜனத்தை அதன் வேகத்தால் பெருக்கும் உற்பத்தியில் இருந்து பெறப்பட்ட திசையின் அளவாக இயற்பியல் உந்தம் காணப்படுகின்றது.
கோண உந்தம்
கோண உந்தமானது சுழற்சி இயக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இது மொழி பெயர்ப்பு இயக்கத்திற்கான வேகத்தை உருவாக்குகின்றது.
கோணஉந்தம் என்பது ஒரு திசையன் அளவு, முக்கியமாக ஒரு துகள் புள்ளி வழியில் சுழலும் அல்லது ஒரு புள்ளியை கடந்து செல்லும் ஒரு அச்சில் சுற்றி நீட்டிக்கப்பட்ட ஒரு பொருளால் அமைந்து வகைப்படுத்தப்பட்டதாக காணப்படுவதாகும்.
கோண உந்தம் ஒரு சதுர மீட்டர் அல்லது வினாடிக்கு கிலோ அலகுகளில் அளவிடப்படுகிறது. அதாவது சர்வதேச அலகுகளின் படி அளவிடப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட புள்ளியை பொறுத்து கோண உந்தத்தின் திசையன்கள் மற்றும் ஒரு புள்ளி துகளின் நேரியல் வேகத்தை பொறுத்தே சுற்றளவு கோண உந்தம் நகர்கிறது.
அதாவது ஒரு கடினமான உடல் ஒரு குறிப்பிட்ட அச்சை சுற்றி சுழற்சிக்கு எதிராக அதன் சொந்த உடலின் ஒரு மந்த நிலையை கொண்டதாக காணப்படுகின்றது.
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியும் உந்தமும்
நியூட்டனின் விதிகளில் குறிப்பிடப்படும் விசை என்பது உந்தமாற்று வீதத்தினையே சுட்டி நிற்கின்றது. அதாவது திணிவு மாறிலியாக காணப்படின் இந்த விளக்கம் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை துல்லியமாக விளக்க கூடியதாக காணப்படுகின்றது.
ஒரு பொருளின் வேகம் மாறாது காணப்படுமேயானால் அப்பொருள் மீது விசைகள் ஏதும் உந்தப்படவில்லை என கொள்ளலாம்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியானது ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை விளக்குகின்றது. இந்த விதியின் படி பொருளின் உந்தமானது மாறுபடும் வீதம் அதன் மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் காணப்படும்.
You May Also Like: