ஒரு மனிதனானவன் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும். இதன் விளைவாக பல நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதோடு சுறு சுறுப்பாகவும் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும் செயற்பட முடியும்.
இன்று மனிதனானவன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பதை விட உடலுக்கு தீங்கிளைக்கும் துரித உணவுகளையே உண்ணுகின்றான். இதன் காரணமாக நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதோடு பல நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றது.
மனிதனானவன் காபோவைதரேற்று, புரதம், விட்டமின், கொழுப்பு, கனியுப்புக்கள் என ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் இவ்வாறாக உண்ணும் போதே உடல் வலுப்பெறும்.
ஒரு மனிதனானவன் உண்ணும் உணவுதான் அவனுடைய மகிழ்ச்சிகரமான வாழ்வை தீர்மானிக்கின்றது என்றடிப்படையில் மனிதனானவன் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள உணவுகளை உண்பதோடு மட்டுமல்லாது ஏனையவர்களுக்கும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இதனூடாகவே அனைவரும் ஆரோக்கியமாகவும் நோய் நொடிகள் இன்றியும் வாழ முடியும். அந்த வகையில் ஊட்டச்சத்து பற்றிய வாசகங்களை இந்த பதிவில் நோக்கலாம்.
ஊட்டச்சத்து பற்றிய வாசகங்கள்
ஊட்டம் நிறைந்த உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழி..!
வாழ்வதற்காக உண்ணுங்கள்.!
வலுவாக இருக்க ஊட்டமிக்க உணவை உண்ணுங்கள்.!
ஊட்டமிக்க உணவே! சிறந்த குடும்பத்தின் ஆரோக்கியம்..!
உங்கள் நலனே உங்கள் செல்வம்.!
நன்றாக வாழ ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள்.!
தரையில் விளைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.! ஆரோக்கியம் பெறுங்கள்.!
வாழ்வாதாரம் உனது மருந்தாகவும் மருந்து உனது ஊட்டமாகவும் இருக்கட்டும்.!
சீரான இதயத் துடிப்புக்கு முறையான உணவே சிறந்த வழி.!
ஆரோக்கியமான உணவே மகிழ்ச்சியான வாழ்க்கை.!
ஊட்டச்சத்துள்ள உணவிற்கு முன்னுரிமை வழங்குங்கள் உங்கள் உடல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.!
ஆரோக்கியத்தை அழிக்கும் உணவை தவிர்த்து ஊட்டமிக்க உணவை கடைபிடியுங்கள்.!
நல்ல ஊட்டச்சத்து சிறந்த வாழ்க்கை தரத்திற்கு வழிவகுக்கிறது.!
ஊட்டச்சத்தே எமது வாழ்வின் ஆதாரம்.!
ஊட்டச்சத்து குறைபாடில்லாத உலகை உருவாக்குவோம்! மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.!
பயிர் வளர உயிர்ச்சத்து.! குழந்தைகள் வளர ஊட்டச்சத்து.!
வலிமையான நோயற்ற சமூகத்தை உருவாக்க ஊட்டச்சத்துமிக்க உணவே சிறந்தது.!
சத்தான உணவே! நோய் தீர்க்கும் மருந்து.!
புற்றுநோய் எனும் அரக்கனை அழிக்க ஊட்டச்சத்தை பிரதானமாக்குவோம்.!
ஊட்டமிக்க உணவே! பார்வை திறனை வலுப்படுத்தும்.!
ஊட்டச்சத்தை சேர்த்திடு! உடல் வலிமையை பெற்றிடு.!
நலம் காக்கும் ஊட்டச்சத்தை உணவில் சேர்த்திடு! நலமாக வாழ்ந்திடு.!!
ஊட்டமுள்ள உணவே எதிர்கால சந்ததியின் ஆரோக்கியம்.!
உலக வாழ்வின் மூலாதாரம் ஊட்டச்சத்து மிக்க உணவே.!
வாட்டமில்லா வாழ்விற்கு ஊட்டமுள்ள உணவே சிறந்தது.!
நோயை எதிர்த்து போராட உணவில் ஊட்டத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.!
ஊட்டச்சத்தே குழந்தைகளின் வளர்ச்சி.!
நாளை வாழ இன்றே உண்போம், ஊட்டமிக்க உணவை.!
ஊட்டமிக்க உணவே ஆரோக்கியமான ஆத்மாவை உருவாக்கும்! ஆரோக்கியமான மனமே உங்கள் உடலை ஆரோக்கியமாக்கும்.!
ஊட்டச்சத்து மிக்க உணவை உண்போம்! நீண்ட ஆயுளிற்கு வழியமைப்போம்.!
அழகான வாழ்வை உருவாக்க ஊட்டச்சத்தே சிறந்த தீர்வு.!
முறையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவு முறையே.! உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.!
உன் எதிர்காலம் நீ உண்ணும் உணவிலேயே அடங்கியுள்ளது.. சிறந்த உணவே சிறந்த வாழ்க்கையின் அடித்தளம்.!
You May Also Like: