இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக காணப்படுகின்ற கடவுள் என்பவர் ஒருவரே ஆவார் மற்றும் இவ்வுலகில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் இறைவனது குழந்தைகளே ஆவர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சாதிப் பாகுபாடு
- சமய வேறுபாடு
- ஒரே சாதி ஒரே கடவுள்
- வேறுபாடுகளை களைவதற்கான செயல்பாடுகள்
- முடிவுரை
முன்னுரை
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது திருமூலரது திருமந்திரத்தின் திருவாக்கு ஆகும். இக்கூற்றானது சாதிப் பாகுபாடு மற்றும் சமய பாகுபாடு என்பவற்றை கலைந்து இறைவன் என்பவன் ஒருவனே அனைவருக்கும் ஒரே குலமே என்னும் உண்மையை உணர்த்தி நிற்கின்றது.
இந்த உண்மையை அறியாத பேதை மக்கள் அனைவரும் சாதி, மதம் என பல வேற்றுமைகளை வளர்த்து மனித குலத்தின் ஒற்றுமை நிலையை சீர்குலைத்து வருகின்றனர்.
சாதிப் பாகுபாடு
தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் பாரிய பிரச்சனைகளுள் இச்சாதி பாகுபாட்டு முறையும் ஒன்றாகும். சாதிப் பாகுபாடு என்ற அடிப்படைகள் தினந்தோறும் பல கலவரங்கள் நிகழ்ந்த வண்ணமே காணப்படுகிறது.
இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிரும் இறைவனின் படைப்பே ஆகும். இதனையே திருவள்ளுவர் அவர்கள் ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறுகின்றார்.
ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு விரும்பிய தொழிலை மேற்கொண்டனர். செய்யும் தொழிலே தெய்வம் என கருதினர். அவ்வாறு அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் காலப்போக்கில் சாதிகளை பகுத்து வைத்தனர்.
இம்முறைமை காலப்போக்கில் பாரிய பல பிரிவுகள் புதிதாக தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து தீண்டத்தகாதவர் என சிலரை ஒதுக்கி வைத்து பல கொடுமைகளை அழைத்தனர்.
சமய வேறுபாடு
சமயம் என்ற சொல்லானது பக்குவப்படுத்தல் எனும் பொருளை தருகின்றது. அனைத்து சமயமும் ஆன்மாவானது இறைவனடி சேர்தலையே குறிக்கோளாக கொண்ட அமைந்து காணப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் அதாவது சிந்துவெளி, வேதகால பகுதிகள் இயற்கை சீற்றங்களை கண்டு அச்சம் கொண்ட மக்கள் இயற்கையை தெய்வமாக கருதி வழிபட்டனர். பின்னர் அச்சக்திகளுக்குரிய கடவுளர்களை வழிபட்டனர்.
இவ்வாறு காணப்பட்ட கடவுள் வழிபாடானது ஒவ்வொருவரின் விருப்புக்கு அமைய பல சமயங்களாக மாற்றம் பெற்றது. அந்த வகையில் தற்காலத்தில் இந்து சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லாம் சமயம், பௌத்த சமயம் என பல சமயங்கள் உலகில் காணப்படுகின்றன.
ஒவ்வொரு சமய பிரிவினரும் நமக்கென பல கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் தீர்மானித்து அதற்கமைவாக வாழ்கின்றனர்.
ஒரே சாதி ஒரே கடவுள்
சாதி பாகுபாட்டை மரமையினாலும், சமய வேறுபாட்டின் காரணமாகவும் மக்களிடையே பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கல்வி கற்க வேண்டும், ஆலயத்திற்குள் செல்ல வேண்டும், மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் வாழ்நாளில் நடைபெறும் ஒவ்வொரு விடயங்களிலும் பல அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் பல மக்கள் பல இன்னல்களுக்கு நேரிடுகின்றனர்.
இந்த சாதி பாவப்பட்ட முறைமையையும் சமய வேறுபாட்டையும் ஒழித்து மக்கள் மத்தியில் அனைவரும் ஒருவரே என்ற எண்ணத்தை நிலை நாட்டுதல் வேண்டும்.
சாதிப் பாகுபாடு முறைமையும் தீண்டாமை எனும் கொடுமையும் ஒழித்து சமூக ஒற்றுமையை மனித குலத்தில் நிலைநாட்டுவதற்கு இன்றும் பலர் பாரிய முயற்சிகளை செய்த வண்ணமே காணப்படுகின்றனர்.
அந்தவகையில், ஆரம்பத்தில் பாரதியார் “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றும், தாயுமானவர் “வேறுபடும் சமயம் எல்லாம் புகழ்ந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை” என்றும் தமது நூல்களில் பாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர்.
வேறுபாடுகளை களைவதற்கான செயல்பாடுகள்
சாதி வேறுபாடு தீண்டாமை மற்றும் சமய வேறுபாடுகளின் காரணமாக மக்களிடையே ஏற்படும் இன மத கலவரங்களினால் வருகின்ற உயிராபத்துக்கள் உடைமை சேதங்கள் என்பவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல்.
அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்பதை மக்களிடையே தெளிவுபடுத்தி அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க செய்தல்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் ஒருவரே எனவும் நாட்டினுடைய வளர்ச்சிக்கு வேறுபாடுகளை கலந்து ஒற்றுமையுடன் செயலாற்றுதல் என்பது அவசியமான காரணியாகும் என்பதை மக்களுக்கு தெளிவூட்டுதல்.
சாதி வெறிகொண்டு கலவரங்களை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளல்.
பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களிடையே சாதி மத வேற்றுமை கலைந்து ஒற்றுமையை விதைக்கும் நோக்கில் செயற்றிட்டங்களை மேற்கொள்ளல்.
முடிவுரை
இந்த பூமியில் பிறந்த அனைவரும் ஒருவரே என் உறவினரே என்ற எண்ணத்தில் சாதி மத இனம் வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒற்றுமையாக செயலாற்றுதல் வேண்டும். வேறுபாடுகளை விட்டு ஒற்றுமையாக செயலாற்றுவதன் மூலம் ஒரு நாட்டினுடைய வளர்ச்சியானது அதிகரிக்கிறது.