நாம் வாழ்கின்ற பூமியானது இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பாகவே காணப்படுகின்றது. பூமியானது அனைத்து உயிர்களையும் பாதுகாத்து கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப் பூமியை பாதுகாக்கும் ஒரு படையாக ஓசோன் படை உள்ளது.
ஆனால் மனிதனானவன் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுற்றுப்புற சூழலை மாசடையச் செய்கின்றான். இதன் காரணமாக எம்மை காக்கும் பூமியானது எம்மை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
ஓசோன் படலம் என்றால் என்ன
வளிமண்டலத்தில் காணப்படுகின்ற ஒரு வகையான வாயுப்படலமே ஓசோன் படலம் எனலாம். இது பூமியின் பாதுகாக்கும் கவசமாக தொழிற்பட்டு வருகின்றது.
ஓசோன் (O₃) ஆனது மூன்று ஒட்சிசன் அணுக்களை கொண்டமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை உள்ள பகுதியில் காணப்படுகின்றது.
ஓசோன் படலத்தின் நன்மைகள்
ஓசோன் படலமானது இயற்கையிலேயே பாதுகாப்பினை தரவல்லதாக காணப்படுகின்றது. அதாவது சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சின் ஒரு பகுதியை உறிஞ்சி பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கின்றது.
மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் சில தாவரங்களை இந்த ஓசோன் படலமானது அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. மேலும் இது பூமியை பாதுகாக்க கூடிய ஒரு படையாகவும் காணப்படுகின்றது.
ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பூமியானது சமநிலையாக தொழிற்பட காடுகளை அழிக்காது பாதுகாக்க வேண்டும்.
இன்று மனித சமூகமானது தனது பேராசைகளின் காரணமாக பூமியை காத்து சமநிலையாக வைத்திருக்கும் பல்வேறு மரங்களை அழிக்கின்றனர், தீ வைத்து காடழிப்பினையும் மேற்கொள்கின்றனர் அவ்வாறு அழிக்காமல் மரங்களை நட்டு காடழிப்பை தடுக்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை இலலாதொழிக்க வேண்டும், விவசாயத்திற்காக உபயோகிக்கும் பூச்சி கொள்ளிகள் குறைத்தல், அதிக புகையினை ஏற்படுத்தும் வாகனங்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலமாக ஓசோன் படலத்தை பாதுகாக்கலாம்.
குளோரோ புளோரோ காபனுடைய செயற்பாடானது ஓசோனின் அளவை குறைத்து செயற்பட பிரதானமானதொன்றாக காணப்படுகின்றது.
மேலும் கைத்தொழிற்சாலைகளில் இருந்து வெளிவிடப்படும் நச்சுத்தன்மையான கழிவுகள் என பல்வேறுபட்ட செயற்பாடுகளினூடாக ஓசோன் படலமானது பாதிப்புக்குள்ளாகின்றது.
இவ்வாறானவற்றை தவிர்ந்து செயற்படுவதன் ஊடாக ஓசோன் படலத்தினை பாதுகாக்க முடியும்.
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீங்குகள்
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புக்களை நோக்குவோமேயானால் வெப்பம் அதிகரிக்கும் இதன் காரணமாக பிற்பட்ட காலங்களில் வறட்சி ஏற்படக்கூடும்.
ஓசோன் படலம் மூலமாக ஏற்படும் புற ஊதா கதிர்களானது கடல்களில் ஊடுருவி கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கின்றது.
மேலும் இதன் காரணமாக புற்று நோய், சர்ம நோய், கண் பார்வையினை இழத்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைதல் என பல்வேறு தீங்குகளை ஏற்படுகின்றது.
கடல் நீர் மட்டம் கூடி மண் அரிப்பு ஏற்படுதல், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல் அதாவது சடுதியான வெப்பம், திடீர் மழை போன்ற சூழலுக்கு பாதகமான விளைவுகளும் இதனூடாக ஏற்படுகின்றது.
இவ்வாறாக பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் நாம் தான் ஏனெனில் ஒவ்வொரு குடிமகனும் பூமிக்கு இடையூறை விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது பூமியை வளப்படுத்தி சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதன் காரணமாக ஓசோன் படலத்தினால் ஏற்படுகின்ற தாக்கங்களை எம்மால் குறைத்து கொள்ள முடியும். இதன் காரணமாகவே தான் இன்று உலக ஓசோன் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருவதோடு ஓசோனின் முக்கியத்துவத்தினையும் இது தெளிவுபடுத்துகின்றது.
You May Also Like: