கணிப்பொறி என்றால் என்ன

kanipori enral enna in tamil

இன்று பல்வேறுபட்ட நபர்கள் பயன்படுத்தும் ஒரு மின்னனு சாதனமாக கணிப்பொறி காணப்படுகிறது. இது பல தகவல்கள் மற்றும் தரவுகளை கையாளக்கூடியதாக கணிப்பொறியானது காணப்படுகின்றது.

கணிப்பொறி என்றால் என்ன

கணிப்பொறி என்பது இன்று நாம் பயன்படுத்தப்படும் கணினியையே சுட்டிக்காட்டுகின்றது. அதாவது மூலதரவை பயனரிடமிருந்து உள்ளீடாக பெற்று பின்னர் அதனை செயலாக்குகின்றது. மேலும் விரும்பிய முடிவை வெளியீடாக தரும் ஒரு மின்னனு சாதனமே கணிப்பொறி ஆகும்.

கொடுக்கப்பட்ட கட்டளையினை உள்ளீடாக பெற்று கொண்டு அதிவேகமாக செயல்பட்டு விரும்பிய வெளியீட்டை வழங்குவது கணிப்பொறி எனப்படும். வன்பொருள் மற்றும் மென்பொருளின் கலவையாக கணிப்பொறியானது திகழ்கின்றது.

கணினியில் உள்ள பருப்பொருட்களான மதர்போர்ட், நினைவகம், திரையகம், விசைப்பலகை போன்றன வன்பொருள்களாகும். மேலும் கட்டளை மற்றும் அதன் தொகுப்பை மென்பொருட்களாக கொள்ளலாம்.

கணிப்பொறியின் அடிப்படை பாகங்கள்

உள்ளீட்டகம்

உள்ளீட்டகமானது அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளீடு செய்வதற்கு பயன்படுகின்றது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.

மையச்செயலகம்

கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை கணிப்பொறி புரிந்து கொள்ளும் விதமாக மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியே மையச்செயலகமாகும். இது உள்ளீடு மற்றும் வெளியீடு போன்றவற்றின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றது. மையச்செயலகமானது கட்டுப்பாட்டகம், கணித ஏரணச் செயலகம், நினைவகம் என 03 பகுதிகளை கொண்டுள்ளது.

நினைவகம்

இது முதன்மை நினைவகம், இரண்டாம் நிலை நினைவகம் என இரண்டு வகையாக காணப்படுகிறது. தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்ற தயாராக இருக்கும் போது அதனை தற்காலிகமாக சேமிப்பதற்கு முதன்மை நினைவகம் பயன்படுகின்றது. மேலும் தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது. உதாரணமாக வன்வட்டு, சீடி ரொம் இனை கூறலாம்.

வெளியீட்டகம்

பயனர்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் தகவலை தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளினையும் வெளியீட்டகமாக குறிப்பிட முடியும். உதாரணமாக திரையகம், அச்சுப்பொறி காணப்படுகிறது.

கணிப்பொறியின் பயன்பாடுகள்

தரவுகளை சேமித்தல்

கணிப்பொறியானது நாம் உள்ளீடு செய்யும் தரவுகளை தனது நினைவகத்தில் சேமித்து வைக்கும் ஆற்றலுடையது. இதனூடாக தேவையான நேரத்தில் எமது தரவுகளை இலகுவாக பார்வையிட முடியும்.

குறைந்த நேரத்தில் வேகமாக செயல்படக்கூடியது

மிகவும் குறுகிய நேரத்தில் எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தரவுகளை வேகமாக சேகரித்து கொள்ளவும் துணைபுரிகின்றது.

சிறந்த பொழுது போக்கு கருவியாக காணப்படுகிறது

கணினியில் அறிவு சார்ந்த பல்வேறு விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. இதனூடாக மன அழுத்தமானது குறைவடைய வழி வகுக்கின்றது.

கல்விக்கு துணைபுரிகின்றது

கணிதம், விஞ்ஞானம், வானியல், அறிவியல், புவியியல், நடனம் என பல்வேறுபட்ட துறைகள் பற்றிய அறிவை கற்றுக்கொள்வதற்கு துணைபுரிகின்றது. மேலும் மாணவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்கள் தொடர்பான விபரங்களை சேமித்து வைப்பதற்கும் கணிப்பொறி உதவுகின்றது.

மருத்துவத்துறையில் கணிப்பொறியானது பல்வேறுபட்ட செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக திகழ்கின்றது

உடலிலுள்ள பல்வேறுபட்ட நோய்களை கணிப்பொறியின் மூலமே ஆராய்ந்து இலகுவாக கண்டுபிடிக்கின்றனர். மேலும் பல நோய்களுக்கான காரணங்களையும் இதனூடாகவே அறிந்து கொள்கின்றனர்.

தொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது

மின்னஞ்சல், இணையம் போன்றவற்றின் ஊடாக எந்த மூளையில் இருப்பவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள கணிப்பொறியானது துணை செய்கின்றது. மேலும் கணிப்பொறியினூடாக முகம் பார்த்து நேரடியாக உரையாடவும் முடிகிறது.

கணிப்பொறியானது இன்று பல்வேறுபட்ட துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.

You May Also Like:

படிகம் என்றால் என்ன

மின்புலம் என்றால் என்ன