கம்பரை ஆதரித்த வள்ளல் யார்

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்சடையப்ப வள்ளல்

சடையப்ப வள்ளல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப வள்ளல் பிறந்தார். சடையப்பர் இளமைப் பருவத்தில் இருந்தே கொடை வள்ளலாக திகழ்ந்தார்.

தமிழ்ப் புலவர்கள் மற்றும் தமிழ்க் கவிஞர்களுக்கும் தனது கொடைக் கரத்தை நீட்டினார். பலருக்கும் பல விதமான உதவிகளை செய்து வந்தார். ஏழை எளியவர்கள் என பாகுபாடு பாராமல் அனைவருக்கும் உதவி செய்து வந்தார்.

தஞ்சை மண்ணில் இருந்து ஒரு தாய் தனது கிராமங்களுக்கு வந்திருக்கும் செய்தி அறிந்தார். அந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றார். அவர்களுக்கும் தனது கொடைக் கரத்தினால் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தார்.

அந்த தாயின் மகனான சிறுவனுக்கு கல்வி கற்பதற்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்தி கொடுத்தார். சடையப்பர் தனது தோட்டத்தில் உள்ள காளி தேவியாரை பூஜை செய்து வணங்குவார். அவ்வப்போது அந்த சிறுவனையும் அழைத்து செல்வார்.

கம்பரின் தோற்றம்

ஆண்டுகள் பல கழிந்தன. சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான்.சடையப்பருடன் வந்த இளைஞன் வேறு யாரும் இல்லை. கவிப் பேரரசு, கவிச்சக்கர வர்த்தி, கம்பன் வீட்டு கட்டுத்தறி, கவிவாறி என்று பல பட்டப் பெயர்கள் வைத்து ஒட்டக்கூத்தர், புகழேந்திய பல புலவர்களால் அழைக்கப்பட்ட கம்பர் ஆவார்.

கம்பரின் புகழ் ஓங்குகிறது. தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு புலவராக கம்பர் திகழ்ந்து வந்தார். மற்றைய புலவர்களை விட இவர் புகழ் பெற்று விளக்குகின்றார். சோழ மன்னர்களின் அவையில் இவரின் புகழ் பிரபல்யமானது.

ஒரு நாள் சோழ மன்னன் அவைக்களத்தில் ஒரு அரங்கேற்றம் நடைபெறுகிறது. அந்த அரங்கேற்றத்திற்கு கம்பருக்கும் அழைப்பிதழ் வந்தது கம்பர் செல்கிறார். அப்போது அங்கு பல விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தன.

அந்த விவாதங்களில் பல கவிஞர்கள் சோழ மன்னர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். கம்பர் சோழ மன்னர்களிடம் கொங்கு வேளாளர்களை மட்டுமே புகழ்ந்து பாடிய என்னால் உங்களைப் புகழ்ந்து பாட முடியாது என தனது இயலாமையை கூறினார்.

மன்னர்கள் கோபமுற்றார்கள். ஆனால் கம்பர் தனது நிலையில் இருந்து மாறவில்லை. அங்கு கொங்கு வேளாளர்களைப் பற்றி பாடினார். கம்பருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.

வேளாளர்களிடம் கை ஏந்தி வாங்கிய இந்த கைகள் வேறு எவரிடமும் கை ஏந்தாது என்று கூறி இடக்கையால் பரிசினை வாங்கிச் சென்றார்.

கம்பர் இராமாயணம் இயற்றுதல்

ஒரு சமயம் கம்பர் இலங்கை சென்றிருந்தார். அப்போது அங்கு கடும் வறட்சி நிலவியது. இதனைப் பார்த்து கவலையுற்ற கம்பர் நிலைமையை சடையப்பருக்கு எடுத்து கூறினார்.

உடனே சடையப்பர் தன்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

சில ஆண்டுகள் கழிந்த பின்பு இராமாயணம் பற்றி சடையப்ப வள்ளல் அறிகிறார். இதனை தமிழில் மொழி பெயர்க்குமாறு கம்பரிடம் கூறினார். கம்பரும் அதனை ஏற்று கம்பராமயணத்தை சமஸ்கிருதத்தில் தமிழில் இருந்து மொழி பெயர்த்தார்.

மொழி பெயர்த்த பின்பு கம்பரை சடையப்பர் நெற்கதிர்கள் கொண்டு வரவேற்றார். அதனால் அந்த ஊர் இன்றும் கதிரமங்கலம் என அழைக்கப்படுகின்றது. அதாவது அப்போது நெற்கதிர்களால் பந்தலிட்டு கதிர்களால் வரவேற்கப்பட்டார்.

இவ்வாறு வள்ளலாக வாழ்ந்த சடையப்பர் தனது இறுதிக் காலத்தில் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்தார். தனது வீடு மற்றும் சில தோட்டங்களுடனேயே வாழ்ந்தார்.

ஒருமுறை ஒரு புலவர் இவரது வீட்டு வாசலில் வந்து காத்து கொண்டிருந்தார். கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் தவிர்த்த சடையப்பர் வீட்டின் பின்புறத்திற்கு வந்து பாம்பு புற்றுக்குள் கையை விட்டார். பாம்பு மாணிக்கக்கல் கக்கியது. அதனை எடுத்து வந்து அந்த புலவருக்கு கொடுத்தார்.

கம்பர் இராமயணத்தில் வரிக்கு வரி சடையப்பன் என்ற பெயரை குறிப்பிட்டு தனக்கு வாழ்வு தந்த வள்ளல் எனப் போற்றியுள்ளார்.

You May Also Like:

காவியம் என்றால் என்ன