கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன

கலைத்திட்டமானது பாடசாலைகளினால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த முகாமைத்துவமாக திகழ்கின்றது. அதாவது கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களின் அனுபவங்களை வரையறுப்பதாக கலைத்திட்ட முகாமைத்துவமானது காணப்படுகிறது.

கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன

கலைத்திட்ட முகாமைத்துவம் என்பது பாடசாலையிலோ, வெளியிலோ குழுவாகவோ, தனியாகவோ, ஆசிரியருடனோ, ஆசிரியர் இன்றியோ நிறைவு செய்து கொள்ளக் கூடியவாறு பாடசாலையினால் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்படும் சகல அனுபவங்களை உள்ளடக்கியதொரு முறைமையே கலைத்திட்ட முகாமைத்துவம் எனப்படும்.

அனைத்து மாணவர்களும் தங்கள் கல்வியில் அதிக பலன் பெறுவதனை உறுதி செய்வதாகும். கலைத்திட்ட முகாமைத்துவமானது தான் பெற்ற அறிவு மற்றும் திறன்களை சமூகத்திற்கு ஒரு அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு துணை புரிகின்றது.

கலைத்திட்ட முகாமைத்துவத்தின் இயல்புகள்

தனியாளிடத்தில் ஆக்கத்திறன், மனித நுட்பதிறன்களை விருத்தி செய்தல்: அதாவது ஒரு தனிமனிதனானவன் ஆக்கத்திறன் ரீதியாக செயற்பாடுகளை மேற்கொள்பவராக காணப்படல் வேண்டும்.

தற்போதைய சமூக தேவைகளை நிறைவு செய்தல்: கலைத்திட்ட முகாமைத்துவமானது சமூக ரீதியான தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும். இதனூடாக சமூக தேவைகளை புரிந்து கொண்டு செயற்பட முடியும்.

பண்பாட்டை பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல்: அதாவது கலைத்திட்ட முகாமையினூடாக எமது பண்பாட்டை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கான அடிப்படை திறன்களை விருத்தி செய்யக்கூடியதாக கலைத்திட்ட முகாமைத்துவமானது காணப்படுகின்றது.

ஒரு சிறந்த கலைத்திட்ட முகாமைத்துவத்தின் நியதிகள்

ஒரு கலைத்திட்டமானது மாணவர்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டமைந்ததாக காணப்படல் வேண்டும்.

கலைத்திட்ட முகாமைத்துவமானது நீண்டகால முயற்சியின் விளைவாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தரத்தினை மேம்படுத்த கூடியதாக கலைத்திட்ட முகாமைத்துவமானது காணப்படுகிறது.

கலைத்திட்ட முகாமையானது இயக்கத்தன்மையுடையதாக இருத்தல், தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு அமைந்திருத்தல் வேண்டும்.

கலைத்திட்ட முகாமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

கல்வியியல் கோட்பாடுகள்: கலைத்திட்ட முகாமைத்துவமானது சமூகவியல் மற்றும் கல்வித்தத்துவம் போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்படல் வேண்டும்.

உலக அறிவுகள்: உலகமயமாக்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவினை உள்ளடக்கியதாக கலைத்திட்ட முகாமைத்துவமானது காணப்படல் வேண்டும். இன்றைய சூழலில் உலகமயமாக்கத்தின் தாக்கம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்டக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

பொருளாதார காரணிகள்: கலைத்திட்ட முகாமைத்துவத்தில் பொருளாதார ரீதியான பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதாவது பொருளதாரமானது இன்று எவ்வாறு வளர்ச்சி கண்டுள்ளது, அதன் தன்மை எவ்வாறு காணப்படுகின்றது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படல்.

கலாச்சார விழுமியங்கள்: கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்ற போதே சிறந்த கலைத்திட்ட முகாமையாக காணப்படும்.

முறையான கலைத்திட்ட முகாமைத்துவத்தில் காணப்பட வேண்டிய அம்சங்கள்

கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது திடகாத்திரமான விளைவுகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஆக்கபூர்வமான கற்றல், கற்பித்தல் முறைமைகளை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தல்.

மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை விருத்தி செய்ய போதுமானதும் தேவையானதுமான வசதிகள் பாடசாலைகளில் வழங்கப்படல் வேண்டும்.

மாணவர்களின் தரங்களை இணங்கண்டு அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் வழிகாட்டி, பாடநூல்கள் போன்றன வழங்கிவைக்கப்படல் சிறந்ததாகும்.

திட்டமிடலின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேவையான திறன்களை விருத்தி செய்ய துணைபுரிய வேண்டும். மேலும் போதுமானளவு தேர்ச்சியினை பெற்றுள்ளனரா என்பது தொடர்பான விடயங்கள் பற்றி ஆராய்ந்தறிதல். எனவேதான் ஒரு கலைத்திட்ட முகாமைத்துவமானது மாணவர்கள் தனது பாடவிதானமான செயற்பாடுகளில் சிறந்து விளங்குவதற்கும் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கும் இவ் முகமைத்துவமானது துணைபுரிகின்றது.

You May Also Like:

மாணவர்களின் கடமைகள் கட்டுரை

சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை