கவியரங்கமானது கவிதைகளை வளர்ப்பதற்கான ஒரு தளமாக திகழ்கின்றது.
கவியரங்கம் என்றால் என்ன
கவியரங்கம் என்பது ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் கவிதைகளை படித்துக் காட்டும் நிகழ்ச்சியினையே கவியரங்கம் எனலாம்.
கலை, இலக்கிய மேடைகளில் மட்டுமல்லாது மாணவர் மன்றம், மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கமானது ஓர் இடத்தை பிடித்துக் கொண்டது. கவியரங்குகளில் இன்று மரபுக் கவிதைகளே சிறப்பிடம் பெற்று திகழ்கின்றது.
கவியரங்கு கவிதைகள் எவ்வாறு இடம்பெறல் வேண்டும்
கவிதைகளானவை கேட்போரை கவரக்கூடிய வகையில் அமையப் பெற வேண்டும். மேலும் மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக்குறியீடுகள் சத்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டுவதாக கவிதைகள் அமையப்பெற வேண்டும்.
ஒருவருடைய உணர்ச்சிகள், கற்பனை கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதாக கவிதைகளானவை காணப்பட வேண்டும்.
சமுதாயத் தேவைகளை கருத்திற் கொண்டு ஒரு கவிதையானது இடம்பெறுவதோடு கவிதைக்குரிய மூலப் பொருள் சொற்களை கொண்டமைந்து கவிதையானது இடம் பெறுதல் வேண்டும்.
கலையை வெளிப்படுத்துவதில் பிரதானமானதொன்றாகவே கவிதை காணப்படுகின்றது. கவிதைகளில் அழகியல் உணர்வு அமைந்து காணப்படுவதோடு மாத்திரமல்லாது கற்பனை மற்றும் யோசனைகளின் வெளிப்பாடு மற்றும் தூண்டல்கள் காணப்பட வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் புதுக் கவிதை
இன்றைய கால கட்டத்தில் கவிதைகளை கவியரங்குகளில் பலவாறாக முன்வைக்கின்றனர்.
இன்றைய புதுக் கவிதையானது இன்றைய மனிதரின் வாழ்க்கை சொல்லும் அனுபவங்கள், அவரது உணர்ச்சிகள், அவர் கையாளும் மொழியின் சொற்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே கவிதையை படைக்கின்றனர்.
அதாவது மாறி வரும் மனித உறவுகள், புதிய வாழ்க்கை களங்கள், சமூக பொருளாதார மாறுதல்கள், பண்பாட்டு சிக்கல்கள், புதிய சமூக அங்கீகாரங்கள், கலாச்சார நடைமுறை போன்றவற்றினால் இன்று மனித வாழ்க்கையானது பிறப்பெடுக்கிறது எனலாம்.
இவையாவையும் உள்ளடக்கி அமைவதாகவே இன்றைய கால கட்ட கவிதைகள் காணப்படுகின்றன.
நவீன கால கவியரங்கமும் கவிதைகளின் செல்வாக்கும்
நவீன காலங்களில் கவியரங்கம் என்பதானது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது எனலாம். ஏனெனில் ஆரம்ப காலங்களில் கவிதைகளை கலை இலக்கிய மேடைகளிலும், மன்றங்களிலும் அழகாக கவிஞர்கள் படித்துக் காட்டினார்கள்.
ஆனால் தற்காலங்களில் அவ்வாறானதொரு சூழல் அரிதாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இன்று உலகமே கைக்குள் என்று சொல்கின்ற அளவிற்கு நவீனத்துவம் வளர்ந்து காணப்படுகின்றது. கைப்பேசியினூடாக கவிதைகளை வாசிக்கின்றனர்.
மேலும் ஆரம்ப காலங்களை போன்று பாடசாலைகளிலும் கவியரங்குகள் இடம் பெறுவதில்லை என்பதே யதார்த்தமாகும்.
ஆரம்ப காலப் பகுதிகளில் கவியரங்குகளுக்கு முக்கியத்துவமளித்து பல்வேறு கவிதைகள் அவ்கவியரங்கில் இடம் பெறுகின்றமையினை காண முடியும்.
தற்போது கவியரங்குகளின் செயற்பாடானது குறுகிய நிலையிலேயே காணப்படுகின்றது. மேலும் கவிதைகளை எழுதுவதில் ஆர்வம் குறைந்து காணப்படுவதோடு நவீனத்துவமான விடயங்களிலேயே இன்று ஆர்வத்தினை செலுத்துகின்றனர்.
கண்ணதாசனின் கவியரங்க கவிதை
முச்சங்கங் கூட்டி
முது புலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவை மிகுந்த கவி கூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
வட்டி கணக்கே
வாழ் வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர் கொடுத்த சீமாட்டி
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்தில மே
உனைத் தவிர
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
எனைக் கரையேற்று
ஏழை வணங்குகிறேன்….!!!
இக்கவிதையானது கலைஞர் கருணாநிதி தலைமையில் சேலத்தில் நடை பெற்ற கவியரங்கில் கண்ணதாசன் பாடிய கவிதையாகும்.
You May Also Like: