அகிம்சை மூலமாக நாட்டை வென்று இந்தியா நாட்டை மீட்டுக் கொடுத்த மகாத்மா காந்தியின் உண்மையான பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தியாகும். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள போர் பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தி மிகப் பெரிய மற்றும் சிறந்த தேச பக்தர் ஆவார்.
காந்தியடிகள் பற்றி சில வரிகள்
#1. காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
#2. இவரது தந்தை பெயர் கரம்சந்த் உத்தமசந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் காந்தி ஆகும். மகாத்மா காந்தியின் மனைவியின் பெயர் கஸ்தூரிபாய் ஆகும்.
#3. மகாத்மா காந்தி அவரின் பள்ளி படிப்பை 18 வயதில் முடித்துவிட்டு 19 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். பின் அவர் பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
#4. தென் அமெரிக்காவில் இனவெறியையும் நிறவெறியையும் எதிர்த்து கறுப்பர் இன மக்களுக்கு ஆதரவாக போராடி உள்ளார்.
#5. தென்னாபிரிக்காவின் நாட்டின் பகுதியில் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த முதல் இந்திய வழக்கறிஞர் ஆவார்.
#6. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த காந்தி 1924 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார்.
#7. அறப்போராட்டம், சுதேசி போன்ற கொள்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் விடுதலை இயக்கம் ஆக்கினார்.
#8. தனது முழு வாழ்க்கையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார். பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழி நடத்தும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
#9. சத்தியமும் அகிம்சையும் காந்தியின் கொள்கைகளாகும். இவர் இந்தியாவின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
#10. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம், தண்டி மார்ச், உப்பு சத்திய கிரகம், அந்தியப் பொருட்கள் புறக்கணிப்பு, வரிகொடா இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய இயக்கங்களை அறவழியில் முன்னெடுத்து வழி நடத்தினார்.
#11. காந்தியடிகள் பகவத் கீதை சமய கொள்கைகள் லியே டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்.
#12. இவர் மேலைநாட்டு உடைகளை தவிர்த்து இந்திய நாட்டின் காதி உடைகளைலேயே அணிந்தார்.
#13. காந்தி குஜராத் மொழியில் எழுதிய சுயசரிதை “சத்தியசோதனை” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
#14. தமிழக அரசு காந்தியின் சிறப்பை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
#15. காந்தி தனது இறுதிக்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கவில்லை.
#16. காந்தி தலைமையிலான விடுதலைப் போராட்டத்தினால் இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் பெற்றது.
#17. இவர் 1948-ல் ஜனவரி 30 ஆம் தேதி நாதுரகம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியது.
You May Also Like: