கால்கோள் விழா என்றால் என்ன

நாம் ஒரு விடயத்தினை ஆரம்பிக்கும் போது அதற்குரிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட வேண்டும்.

புதிதாக ஒரு விடயத்தினை மேற்கொள்ளும் போது நாம் அதற்கான சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவது வழக்கமாகும். அந்த வகையில் திறப்பு விழா, பூஜை வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கால்கோள் விழாவானது துணைபுரிகின்றது.

கால்கோள் விழா என்றால் என்ன

நாம் ஒரு செயலினை மேற்கொள்ளும் போது அந்த செயலானது சிறப்புற அமைவதற்காக வேண்டி சில வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொள்வோம். இவ்வாறான நிகழ்வினேயே கால்கோள் விழா என குறிப்பிடலாம். மேலும் கட்டிடத் துறையின் தொடக்கத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வினையும் கால்கோள் விழாவாக கருதலாம்.

கால்கோள் விழாவின் முக்கியத்துவம்

கால்கோள் விழாவின் முக்கியத்துவத்தினை நோக்குவோமேயானால் இவ்விழாவினை கொண்டாடுவதன் மூலமாக எமது செயற்பாடானது சிறந்த முறையில் வளர்ச்சியடைய துணை நிற்கின்றது.

உதாரணமாக கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முதலாக கால்கோள் விழாவானது நடைபெறுகின்றது. இந்த விழாவின் மூலமாக கட்டிடத்தின் உரிமையாளருக்கு செழிப்பானதும் வளமானதுமான எதிர்காலம் அமைந்து காணப்படும் என குறிப்பிடலாம்.

கால்கோள் விழாவானது சிறந்த வாழ்க்கை முறைமைக்கும் பல்வேறு அதிஷ்ட நிலைகளுக்கும் அடித்தளமாக அமைந்து காணப்படுகின்றது. இதன் போது ஒரு செயலின் ஆரம்பத்தினை திறன்பட மேற்கொள்வதற்கு இந்த விழாவானது துணைபுரிகின்றது.

இவ்விழாவின் போது கடவுளை வழிபட்டு நிகழ்வுகளை மேற்கொள்வது கால்கோள் விழாவின் முக்கியத்துவமாக கருதலாம். அதாவது இந்துக்கள் புது வீட்டிற்கு குடிபுகும் போது பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் மாத்திரமல்லாமல் பாற்சோறு சமைத்தும் அவ் வீட்டிற்கு செல்வது வழக்கமாகும்.

இன்றைய கால கட்டத்தில் கால்கோள் விழா

இன்று கால்கோள் விழாவானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்று வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

அதாவது ஒரு கட்டிடத்தினை நிர்மாணம் செய்யும் போது அதன் துவக்கத்தில் தொடக்க கல் இடும் நிகழ்வானது இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது.

பாடசாலையில் புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இவ் கால்கோள் விழாவானது வெகுவிமர்சையாக இடம் பெறுவதனை இன்று எம்மால் காணக் கூடியதாக உள்ளது.

இந்துக்களுடைய மதஸ்தலமான கோயிலினை நிர்மாணம் செய்து அதனை ஆரம்பிப்பதற்கு முன்பாக அதன் தொடக்கத்தில் கால்கோள் விழாவானது இடம் பெறுகின்றது. இவ் விழாவில் கும்பாபிசேகம், விசேட பூஜை வழிபாடுகள், அன்னதான நிகழ்வுகள் போன்றன இடம் பெறுகின்றமை இந்த விழாவின் சிறப்பினை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இன்று பல கட்டிடங்களை திறப்பதற்கு முன்பதாக விளக்கேற்றி கடவுளை வழிபட்டு பின்னர் மத குருமார்களை அழைத்து ஒரு சிறப்பான முறையில் கால்கோள் விழாவானது நடந்தேறுகின்றது என்பதனை குறிப்பிடலாம்.

உதாரணமாக அமெரிக்காவில் புதிதாக பூங்காவினை அமைப்பதற்கு கால்கோள் விழாவானது இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் இன்று சமூகத்திற்கு மத்தியில் கால்கோள் விழாவானது பல சந்தர்ப்பங்களில் நிகழ்வதனை காண முடிகின்றது.

கால்கோள் விழாவின் மூலமாக ஒரு செயலின் தொடக்கமானது சிறப்புற அமையும் என்பதோடு மாத்திரமல்லாமல் எதிர்கால செயற்பாடுகளை வெற்றியுடன் கொண்டு செல்வதற்கும் கால்கோள் விழாவானது துணைபுரிகின்றது.

You May Also Like:

யதார்த்தவாதம் என்றால் என்ன