குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி

kudiyarasu dhinam pechu potti

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அனைத்து இந்தியர்களும் தன்னுடைய நாட்டை சிறப்பாகவும், வளமாகவும் மாற்றுவதற்காக இணைந்து செயற்பட்ட ஒரு தினமான குடியரசு தினம் பற்றி நான் இங்கு பேசப்போகின்றேன்.

குடியரசு தினம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை கொண்டாடப்படும் ஒரு நாளாக குடியரசு தினம் காணப்படுகிறது. 1950ம் ஆண்டு ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.

நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட குடியரசு தினம் வழிவகுக்கிறது. இந்தியாவின் மிக முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்றாகும்.

குடியரசு தின வரலாறு

இந்திய நாடானது பிரிட்டிஸின் ஆட்சிப் பிடியில் இருந்தபோது இந்நாட்டு மக்களுக்காக சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கையின் பிற்பாடு அரசியல் நிர்ணய சபை இந்தியாவில் உருவானது.

1946ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி ராஜேந்திர பிரசாந்த் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது.

இவ்வாறு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இந்தியாவிற்கென அரசியலமைப்பு சட்டமொன்றை உருவாக்க அம்பேத்கரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தனர். இக்குழுவானது பல்வேறு வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டு சட்ட வரைவை முன்வைத்தது.

நாடாளுமன்றத்தில் 1950ம் ஆண்டு ஜனவரி 24அன்று சட்டவரைவானது ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு 1930ம் ஆண்டு ஜனவரி 26ல் அரசியலமைப்பு சட்டத்தை அமுல்படுத்த முடிவு செய்தனர்.

இவ்வாறு முடிவு செய்யப்பட்ட நாளே குடியரசு தின நாளாகும். அன்றிலிருந்து இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் ஓர் நாளாக இது காணப்படுகிறது.

சிறப்புமிக்க குடியரசு தின கொண்டாட்டம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் திகதி மிகவும் விமர்சையாக குடியரசு தினக் கொண்டாட்டம் இடம் பெறுகின்றது. மக்கள் அனைவரும் சமமானவர்களே, அனைவரும் எவ்வித வேறுபாடின்றி தங்களது உரிமைகளை அனுபவிக்க உரித்துடையவர்கள் என்ற உறுதிப்பாட்டை நினைவூட்டக்கூடிய ஒரு நாளாகும்.

தில்லியில் குடியரசு தின விழாவின்போது அணிவகுப்பானது மிகவும் கோலாகலமாக இடம்பெறும். நாட்டின் தேசிய கொடியேற்றும் நிகழ்வு மற்றும் இனிப்புக்கள் வழங்கள், பண்பாட்டு நிகழச்சிகள் போன்றன குடியரசு தினத்திலேயே இடம்பெறும். குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் இந்திய குடியரசு தலைவர் தனது உரையை நிகழ்த்துவார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்டமானது அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் உரிமைகள் தொடர்பானவற்றை சிறப்பாக விளக்கக்கூடியதாக திகழ்கின்றது.

நமது இந்திய மக்கள் அனைவருக்கும் இன, மத பேதமின்றி சமத்துவத்தினை வலியுறுத்துவதாக இந்திய அரசியலமைப்பு சட்டமானது காணப்படுகிறது. மக்களின் நலனை கருத்திற் கொண்டு மக்களாட்சியை பேணக்கூடியதே இந்த அரசியல் திட்டமாகும்.

ஒரு நாட்டின் ஆட்சி முறை சிறப்பாக காணப்பட வேண்டுமாயின் அதற்கு பிரதானமானதொரு உந்து சக்தியாக செயற்படுவது நாட்டின் அரசியலமைப்பு சட்டமாகும்.

மூவண்ணக் கொடியேற்றும் குடியரசு தினம்

மூவண்ணக் கொடிகளை ஏற்றும் சிறப்பு மிக்கதொரு நாளாக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் மிகவும் விமர்சையாக கொடியேற்றும் நிகழ்வானது இடம்பெறும்.

குடியரசு தினத்தன்று மூவண்ணக் கொடிகளை இந்திய பிரதமர் ஏற்றுவார். இக்கொடியை இந்தியாவின் குடியரசு தலைவரே அவிழ்த்து விடக்கூடியவராக காணப்படுவார். குடியரசு தினத்தில் மிக முக்கியதொரு நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு அமைந்துள்ளது.

இன, மத பேதமின்றி அனைவரையும் ஒன்று சேர வழிவகுக்கும் நாடே பாரத நாடாகும் என்ற வகையில் அனைவரும் ஒற்றுமையை பேணி நடப்பதோடு பாரத மண்ணை செழிக்க செய்வோம்.

You May Also Like:

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை

காந்தியின் கொள்கைகள் கட்டுரை