சட்டமன்றம் என்றால் என்ன

satta mandram in tamil

சட்டத்தினை இயற்றக் கூடிய ஒரு மன்றமாக சட்டமன்றம் காணப்படுகின்றது. சட்டங்களை இலகுவாக புரிந்து கொள்வதற்கு சட்ட மன்றமானது துணைபுரிகின்றது.

சட்டமன்றம் என்றால் என்ன

சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பாகும். சட்டமன்றத்தில் மாநில சட்டங்களை இயற்றவும், திருத்தவும் முடியும்.

சட்டமன்றத்தின் வகைகள்

சட்டமன்றமானது ஓரவை சட்டமன்றம், ஈரவை சட்டமன்றம் என இரு வகையாக காணப்படுகின்றது.

ஓரவை சட்டமன்றம்

அரசாங்கம் ஒன்றில் ஓரவை முறைமை என்பது ஒரு சட்டவாக்க அவையை கொண்ட நாடாளுமன்ற முறையினை குறிக்கின்றது. பொதுவாக இந்த ஓரவை சட்டமன்றமானது சிறிய அல்லது சீரான ஒற்றையாட்சி நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்றது. ஓரவை சட்டமன்ற முறைமையானது செயல்திறன் மிக்கதாக காணப்படுகின்றது. மேலும் சட்டவாக்க முறைமையானது எளிமையானதாக காணப்படுகின்றது.

சட்ட முடக்கமானது ஓரவை சட்டவாக்கத்தில் ஏற்படாது. மேலும் செலவீனம் குறைவானதாக ஓரவை சட்டமன்ற முறைமை காணப்படும். ஓரவை சட்டமன்றத்தின் குறைபாடாக பெரும்பாண்மை இனத்தின் அல்லது சமூகத்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுவதனை குறிப்பிடலாம்.

மேலும் சமூகத்தின் சில முக்கிய பகுதிகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இவ்வாட்சி முறையில் குறைவாகவே காணப்படுகின்றது என்பதும் இவ் ஓரவை சட்டமன்றத்தின் குறைபாடாகும்.

ஈரவை சட்டமன்றம்

சட்டமன்றமானது ஈரவைகளை கொண்டமைந்து காணப்படுமாயின் அது ஈரவை சட்டமன்றம் எனப்படும். இவ் ஈரவை சட்டமன்றமானது மேலவை, கீழவை என தனித்தனி மன்றங்களை கொண்டு செயல்படுகின்றது. இரு மன்றத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு வழி முறைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது நாட்டிற்கு நாடு மாறுபடக் கூடியதாகும்.

சமஷ்டி அரசாங்கமுடைய நாடுகளில் இரு மன்ற சட்டமன்றமானது காணப்படுகின்றது. மேலும் இந்த ஈரவை சட்டமன்றமானது நாட்டு மக்களின் நலன்களை உயர்த்த கூடியதாக காணப்படுகின்றது. மேலும் சர்வதிகார செயற்பாடுகளை தடுப்பதற்கு துணைபுரிகின்றது.

சட்டமன்றத்தின் பணிகள்

மாநில பட்டியலில் உள்ள அனைத்து துறைகளின் மீதும் சட்டமன்றமானது சட்டத்தினை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் புதிய வரிகளை கொண்டு வர முடியாது. நிதி அதிகாரங்கள் சார்ந்த விடயங்களை சட்டமன்றமே நிறைவேற்றுகின்றது.

நிர்வாக துறையை சட்டமன்றம் கட்டுப்படுத்துகின்றது. மேலும் சட்டமன்றமே சட்டத்தினை உருவாக்குகின்றது. பழைய சட்டங்களாக இருப்பின் அதனை தற்போதைய சூழலிற்கு ஏற்றாற் போல் மாற்றியமைக்க சட்டமன்றத்தினாலேயே முடியும்.

நீதித்துறை தொழிற்பாடுகளில் சிலவற்றினை சட்டமன்றமே மேற்கொள்கின்றது. பிரித்தானியாவில் மேற்சபை மேன்முறையீட்டிற்கான உயர் நீதிமன்றமாக செயற்படுகின்றது.

சட்டமன்றமானது மக்களின் மனம் பாதிக்க கூடிய செயல்களை கண்டிக்கின்ற இடமாக காணப்படுகின்றது. மேலும் பொது மக்களுக்கு நன்மையளிக்க கூடிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு மக்களுக்கு தீங்கு தரக் கூடியவைகள் களையப்படுகின்றன.

தமிழ் நாட்டின் சட்டமன்றம்

1861 இல் பிரிட்டிஸ் அரசு முதல் கவுன்சில்கள் சட்டத்தை இயற்றியதன் மூலமாக மெட்ராஸ் லெஜிஸ் லேட்டிவ் கவுன்சில் என்ற அவையானது தோற்றுவிக்கப்பட்டது. அவைக்கு மாகாண ஆளுனரை பரிந்துரை செய்யும் அதிகாரத்தை வழங்கினர். மேலும் சென்னை ஆளுனரே சட்டமன்றத்தின் தலைவராக காணப்பட்டார்.

இவ் ஆளுனரே எவ்வளவு நாட்கள் அவையை கூட்ட வேண்டும், எங்கே, எப்போது தொடர்பானவற்றை விவாதிக்க ஆளுனருக்கே அதிகாரம் உண்டு. 1892இல் கவுன்சில் சட்டமானது சென்னை சட்டமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணியினை விரிவுபடுத்தியது. சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறைமையும் இதனூடாகவே வளர்ச்சியடைந்தது.

எனவே தான் சட்டமன்ற முறைமையானது நாட்டிற்கு நாடு வேறுபட்டு காணப்படக் கூடியதாகும். மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை தனித்துவமாக கொண்டமைந்ததொரு மன்றமாக திகழ்கின்றது.

சைபர் கிரைம் என்றால் என்ன