உலகில் வாழ்கின்ற அனைவரும் தனது அன்றாட தேவைகளை போக்குவரத்தினூடாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில் சாலை பாதுகாப்பை பின்பற்றி நடப்பது அனைவரினதும் கடமையாகும்.
ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்க்கையும் ஏதோவொரு பயணத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சாலை விதிகளை பின்பற்றி நடப்பதன் மூலமே இறுதி வரை சிறந்த வாழ்க்கையினை வாழ முடியும்.
சாலை பாதுகாப்பு அவசியமானதாக இருப்பதோடு அதனை பின்பற்றாது செல்பவர்களின் நிலை நிச்சயம் மரணமாகவே இருக்கும் என்பதில் எத்தகைய ஐயமுமில்லை.
இவ்வாறானதொரு நிலை ஏற்படாது அனைவரையும் காக்க சாலை விழிப்புணர்வு வாசகங்களை ஏற்படுத்துவது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
சாலை பாதுகாப்பு வாசகங்கள்
சாலை விதிகளை மதிப்பதே விபத்தில்லா வாழ்க்கையின் வழி.!
தாமதமான வேகம் உங்களை தாமதப்படுத்தலாம் ஆனால் அதிக வேகம் நிச்சயம் மரணத்தை ஏற்படுத்தும்.!
சாலை விதிகளை பின்பற்றுங்கள் அது உங்கள் உயிர் காக்கும்.!
சாலையில் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருங்கள்! சாலை விதிகளை பின்பற்றுங்கள்.!
நாளை வாழ இன்றே சாலை விதிகளை பின்பற்றுங்கள்.!
வாகனம் ஓட்டும் போது தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்! அது உங்கள் குடும்பத்தை தனிமைப்படுத்தும்.!
தலையை பாதுகாக்க தலைக்கவசம் அணியுங்கள்.!
சாலை பாதுகாப்பு! நம் உயிர் பாதுகாப்பு.!
சாலை விதிகள்! சாவைக் குறைக்கும் விதிகள்.!
போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்.!
உங்கள் கவனம் சாலையில் இருக்கட்டும்! தொலைபேசியில் அல்ல.!
விபத்துக்கள் உங்களை எதிர் கொள்ளும் முன் வேகத்தை குறைத்து ஓட்டுங்கள்.!
சேமிக்க நினைத்தது சில நொடிகள்! சேதமடைந்தது பல உயிர்கள்.!
சாலையில் முந்தாதே அது உன் உயிரை பறிக்கும்! வாழ்க்கையில் முந்து அது உன் உயிரை காக்கும்.!
சாலை ஞானம் வளர்ப்போம்! சாலை விபத்தை தவிர்ப்போம்.!
பொறுமையாக ஓட்டுவோம்! பிறர் உயிர் காத்து ஓட்டுவோம்.!
சோகத்தை தரும் வேகத்தை கைவிடுவோம்.!
சாலை ஒழுக்கம் பேணுபவரே! வாழ்வின் ஒழுக்கத்தை பேணுவார்.!
வேகமான பயணமே! எமது இறுதிப் பயணமாக இருக்கும்.!
சாலை விபத்தை தடுக்க சாலை விதியை பின்பற்றுங்கள்.!
கவனச் சிதறலை ஏற்படுத்தும் கைப்பேசியை விட்டு விட்டு கவனத்துடன் வாகனத்தை செலுத்துங்கள்.!
சாலை விளக்கே எம் வாழ்க்கையின் ஒளி விளக்கு.!
வேகம் விவேகம் அல்ல! வேகத்தை குறைத்து விபத்தை தடுப்போம்.!
நம் விதியை தீர்மானிப்பதே சாலை விதி! சாலை விதியை பேணுவோம், அனைவரினதும் நலம் காப்போம்.!
சாலை விதியை கடைப்பிடிப்போம்! அனைவரதும் உயிரை தம் உயிர் என கருதுவோம்.!
நலமுடன் பயணிக்க நடைபாதையை தேர்ந்தெடுப்போம்.!
நிம்மதியை இழக்க செய்யும் போதையை தவிர்த்து நிதானமாக பயணிப்போம்.!
சாலை விதியை மதித்து நடப்பதன் மூலமே ஒரு உயிரையேனும் காத்து கொள்ள முடியும்.!
மனிதநேயத்தை காக்கும் சாலை விதிகளை இன்றே பின்பற்றுவோம்! வாருங்கள்.!
சாலையில் சாகசம் செய்யாதே இறந்து விடுவாய்.!
முறையற்ற பயணம் வாழ்க்கையின் இறுதி முடிவாகவே இருக்கும்.!
மனித வாழ்வின் பயணங்கள் இறுதி வரை தொடர வேண்டுமெனில் சாலை விதிகள் பேணப்படல் வேண்டும்.!
சுதந்திரமான பயணத்திற்கு சாலை விதிகளை பின்பற்றல் வேண்டும்.!
சாலையில் முறையாக வாகனம் ஓட்டுபவரது குடும்பமே கண்ணீரற்ற குடும்பமாக திகழும்.!
சாலை விதிகளை பின்பற்றுவோம்! சாலை விபத்தை தடுப்போம்.!
You May Also Like: