சுகாதாரம் என்றால் என்ன

sugatharam enral enna

எம்மைச் சூழவுள்ள நபர்கள், சுற்றுப்புற சூழல் என்பன சமூகத்தின் பகுதியாகும். நம்மையும் நம்மை சுற்றியுள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும்.

சுகாதாரம் என்றால் என்ன

சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், குறிப்பாக தூய்மை, பாதுகாப்பான குடிநீர் நுகர்வு மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கும் பின்பற்றப்படும் நல்ல பழக்கவழக்கங்களையும் அவற்றின் நடைமுறைகளையும் குறிக்கிறது.

அதாவது நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல மனதையும் மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செய்யப்படும் அனைத்து செயல்களையும் இது குறிக்கிறது.

சுகாதாரம் என்பது எமது உடலை மட்டும் சுத்தமாக வைத்துருப்பது அல்ல நாம் எமது அன்றாட வேலைகளை சுத்தமாக செய்வதோடு எமது சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்துருப்பதே சிறந்த சுகாதாரம் ஆகும்

இன்றைய உலகில் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது தொற்று நோய்களாகும். நாம் எம்மையும் சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்துருப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சுத்ததின் அவசியம்

எமது நாட்டில் இன்று தொற்று நோய்கள் காற்றை விட வேகமாக பரவி வருகிறது. எனவே நாம் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்பதோடு எமது உடலை ஆரோக்கியமாக சுத்தமாக வைத்துருப்பது இந்த தொற்று நோய்களுக்கான மருந்து.

எனவே நாம் உடல் ஆரோக்கிம், உள ஆரோக்கியம், சமூக ஆரோக்கியம் என அனைத்து விடயங்களிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் ஆகும்.

உடல் ஆரோக்கியம்

தினமும் உடற்பயிற்சி செய்தல், போசனை மிக்க உணவிகளை உண்ணுதல், சுத்தமான ஆடை அணிதல், நகம் கை என்பன சவர்கரம் இட்டு கழுவுதல், பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிதல் போன்ற நல்ல பழக்கங்கள் மூலம் நோய்களை குறைத்து கொள்ள முடியும்.

உள ஆரோக்கியம்

மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு மனம் தான் காரணம் எனவே எமது மனதை நிம்மதியாகவும் சுத்தமாகவும் வைத்திருத்தல் வேண்டும். அவ்வாறான மனதை சுத்தமாக வைத்திருக்க சில வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்.

தியானம் செய்யதல், இறைவழிபாடு செய்தல் என்பன மனதை தூய்மையாக வைத்திருக்க உதவும்.

சமூக ஆரோக்கியம்

தனி ஒருவரின் ஆரோக்கிய நிலைமைக்கு சமூகம் மிக பெரிய முக்கியம் பெறுகிறது. நாம் அனைவரும் சமூகத்தையும் அயலவர்களையும் நேசித்தது வாழ வேண்டும்.

சட்டத்தை மதித்தல், இலட்சிய வாதியாக இருத்தல், சூழலை நேசித்தல், சமூகவிரோத செயற்பாடுகளில் விலகி இருத்தல் போன்ற செயல்கள் மூலம் சமூகத்தில் ஆரோக்கியத்தை பேணலாம்.

நாம் வாழும் சமூகத்தில்லுள்ள சுகாதாரப் பிரச்சினைகள்

தனிநபர் ஆரோக்கிய நிலையும் சூழற் சமநிலையும் சமூக ஆரோக்கியத்துக்கு முக்கியமாக அமைகின்றது. அவற்றுக்கு தடையாக உள்ள எல்லாக் காரணிகளும் சமூக சுகாதார பிரச்சினைகள் எனப்படும்.

நாம் வாழும் சமூகத்தில் பரவலாகக் காணக்கூடிய சுகாதார ரீதியான பிரச்சனைகளாக சூழல் மாசடைதல், தொற்று நோய்கள் ஏற்படல் போன்றன காணப்படுகின்றன.

மேலும் புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவனை குற்றங்களும் துஷ்பிரயோகங்களும் அதிகமாக காணப்படுகின்றன.

எனவே நாம் அனைவரும் சிறந்த பழக்கங்களையும், நல்ல பண்புகளை பின்பற்றி சிறந்த நோயில்லாத எதிர்காலத்தையும், சமூகத்தையும் உருவாக்க வேண்டும்.

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை