சுத்தம் பற்றிய வாசகங்கள்

sutham slogans in tamil

மனிதனாவன் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வை வாழ வேண்டுமாயின் தன்னையும் தன்னை சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். சுத்தமான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கைக்கு வழியமைக்கும்.

நாம் அனைத்து விடயங்களிலும் சுத்தமாக இருக்கும்போதே நோயற்ற மகிழ்சியான வாழ்வை வாழ முடியும்.

அவ்வாறில்லாது பொது இடங்களில் குப்பை போடுவது, சூழலை சுத்தமாக வைத்திருக்காமை என பல சுகாதாரமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோமேயானால் அது எம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்று கழிவுகளை முறையாக அகற்றாமல் பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக கழிவு நீர் நாம் பருகும் நீருடன் கலக்கின்றது இதன் காரணமாக பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுவதோடு மரணமும் இடம்பெறுகின்றது.

இவ்வாறான சுத்தமற்ற செயற்பாடுகளினால் சமூகமானது பாரிய அழிவை நோக்கியே செல்கின்றது. எனவே சுத்தத்தை முறையாக பேணுவதே அனைவரும் நோயற்ற மகிழ்சிகரமான வாழ்வை வாழ வழியமைத்து தருகின்றது.

சுத்தம் பற்றிய வாசகங்கள்

சுகமான வாழ்விற்கு சுத்தமே வழிசெய்யும்.!

சுத்தம் சுகம் தரும்.!

உணவில் சுத்தமே வாழ்வில் நித்தம் தேவை.!

சுத்தமான இடமே..! ஆரோக்கியமான இடம்.!

மகிழ்சியான வீட்டின் அடிப்படை.. சுத்தம் பேணுவதே!

களங்கமில்லாத தூய்மையே எமது குறிக்கோளாக இருக்கவேண்டும்.!

தினமும் உடலையும் சுற்றுசூழலையும் சுத்தமாக வைத்திருங்கள்..!

ஆரோக்கியமான வாழ்விற்கு பொது இடங்களில் குப்பைகளை போடாதீர்கள்.!

உங்களின் சுத்தமே..! பூமியின் சுத்தம்.!

சுத்தம் செய்ய ஒரு நிமிடம் எடுத்து கொள்ளுங்கள்..!

உங்கள் எதிர்காலத்தை குப்பையில் போடாதீர்கள்.! சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்.!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!

சுத்தமான பூமியின் திறவுகோள் உங்கள் கைகளிலேயே உள்ளது.!

கிருமிகளை அழிக்க..! சுத்தத்தை பேணுங்கள்.!

சுத்தமான பூமியே..! நமது இலக்காக இருக்க வேண்டும்.!

கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்தி..! அனைவரும் மகிழ்சியான வாழ்வை வாழ்வோம்.!

காலை மாலை தினமும் உடலை சுத்தம் செய்..! மனமகிழ்வுடன் வாழ்ந்திடு..!

சுகமாய் சுவாசிக்க..! சுத்தமான காற்றே தேவை..! சுத்தமாய் இருந்திடு..!

நாட்டினை நலமாக்க.! இன்றே வீதியை சுத்தம் செய்! நாடும் நலம் பெறும்! எம் வாழ்வும் வளம் பெறும்.!

உயிரைக்கொல்லும் நச்சுக் கழிவுகளை குடிநீரில் கலக்காதீர்கள்.! சுத்தத்தைப் பேணுங்கள் ஒரு உயிரையேனும் காத்திடுங்கள்.!

சுத்தமான கைகளே சுகாதாரத்தின் ஆதாரம்.!

வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்.!

சுத்தம் செய்து! புதிய நாளை புதிதாக உணருங்கள்.!

தூய்மையே ஆரோக்கியத்தின் அடித்தளம்.!

சுத்தமான இடங்கள்! மகிழ்ச்சியான முகங்கள்.!

உங்கள் ஆன்மாவை அமைதியாக வைத்திருக்க சுத்தத்தைப் பேணுங்கள்.!

பூமியை சுத்தமாக வைத்திருப்பதே அனைவருடைய கனவாகவும் இருக்க வேண்டும்.!

தூய்மை என்பது வளர்ச்சியின் அடையாளம்.!

பிணியற்று வாழ! துணை செய்வது சுத்தமே.!

சுத்தமான உணவே சுகாதாரமான வாழ்வின் அடித்தளம்.!

நகங்களை வெட்டுவோம், சுத்தத்தை பேணுவோம்.!

பசுமையான பூமிக்கு இன்றே! சூழலை சுத்தமாக்கிடுங்கள்.!

நாளைய சந்ததியின் ஆரோக்கியத்திற்கு இன்றே தூய்மையைப் பேணுங்கள்.!

நச்சுக்களைத் தவிர்ப்போம்.! நல் வாழ்வு வாழ்வோம்.!

முறையாக கழிவுகளை அகற்று, சந்தேமாசமாக வாழ்ந்திடு.!

உணவில் தேவை சுத்தம்.! அதுவே வாழ்வின் தத்துவம்.!

நோயை விரட்ட இன்றே பேணுவோம் சுத்தத்தை.!

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்