சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை

விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை

ஒரு நாட்டினுடைய சிறந்த எதிர்காலத்தின் சாதனையாளர்களாக திகழ இருப்பவர்கள் இளைஞர்கள் ஆவர். அவர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் சமூகமானது சீராகிறது.

சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாழ்க்கை வரலாறு
  • பலம், பலவீனம்
  • இளைஞர்களின் மீதான நம்பிக்கை
  • முடிவுரை

முன்னுரை

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆன்மீகம் என்பது தழைத்து வளர்ந்த தேசமாக இந்திய தேசம் காணப்படுகிறது.

இந்த தேசமானது தன்னலமற்ற பல துறவிகளையும், மகான்களையும் கண்ட இந்தியாவினுடைய வீரதுறவியாக அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஊட்டும் வகையில் வீரம் செறிந்த கருத்துகளை கூறி எழுச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

வாழ்க்கை வரலாறு

சிறந்ததொரு ஆன்மீகவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், துறவியாகவும் காணப்படும் சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கல்கத்தா எனும் இடத்தில் பிறந்தார்.

இவரது பெற்றோர் விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி என்போர் ஆவர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா ஆகும். இவரது குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். விவேகானந்தர் சமூகத்திற்கு பல நற்பணிகள் புரிந்துள்ளார்.

பலம், பலவீனம்

ஆன்மீகம் என்பது ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொள்வது ஆகும். வெறுமனே வழிபாடோடு மட்டும் ஆன்மீகம் நின்று விடக்கூடாது. வழிபாட்டு தலங்களை விட்டு வெளியே வந்து ஆன்மீக செயல்களை செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தவதன் மூலமே ஆன்மீகத்தில் புதிய விடியல் ஏற்படும்.

பலத்தைக் கொண்டு பலவீனத்தை போக்க வேண்டும் பிறக்கின்றோம், வாழ்கின்றோம், இறக்கின்றோம் என்று இருப்பது வாழ்க்கை அல்ல என்றும், மனிதருக்குள் காணப்படும் ஆற்றல்கள் அளப்பரியது ஆகும்.

இந்த ஆற்றல்களை சரிவர வளர்த்து வழிபடுத்துவதன் மூலம் எத்தகைய காரியங்களையும் செய்யக்கூடியவர்களாகவும் சிறப்பானவர்களாகவும் திகழ்வர் என்றும் கூறுகிறார்.

இளைஞர்களின் மீதான நம்பிக்கை

“100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன்” என்ற விவேகானந்தர் கூற்றானது அவர் இளைஞர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு இளைஞனும் தன்னைத்தான் முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தனக்கு வந்த உயர்வினைக் கொண்டு அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் மற்றும் சாதி, மதம், இனம் எனும் பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே பாரத கலாச்சாரம்.

இதில் இழிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாக கொள்ளாமல், தேவையற்ற பேச்சுக்களால் உண்டாகும் அற்ப இன்பங்களை தவிர்த்து உலக நன்மை என்ற பரந்துபட்ட சிந்தனை என்பது இளைஞர்களின் மனதில் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என்று கூறுகிறார்.

முடிவுரை

ஒரு விதையை நிலத்தில் போட்டு அது வளர ஏராளமான மண்ணையும், காற்றையும், தண்ணீரையும் அளிக்கின்றார்கள். அந்த விதையானது கன்றாகவும் பின்னர் பெரிய விருட்சமாகவும் வளர்கிறது.

அந்த விதை ஆனது மண்ணாகவோ அல்லது காற்றாகவோ அல்லது நீராகவோ மாறவில்லை. அது தன்னுடைய வளர்ச்சிக்கு தேவையானவற்றை உள்ளடுத்து கொண்டு தன் இயல்புக்கு ஏற்றவாறு வளர்கிறது அவ்வாறே இளைஞர்களின் நிலையும் ஆகும்.

அவர்களது வளர்ச்சிக்கு தேவையானவற்றை உள்ளெடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளியேற்றி சமூகத்தை மாற்றி அமைக்கும் சக்திகளாக திகழ வேண்டும் என விவேகானந்தர் பல அறை கூவல்களை விடுத்துள்ளார்.

You May Also Like:

தமிழின் முதல் கள ஆய்வு நூல்

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்