செவ்வாய் வேறு பெயர்கள்

செவ்வாய் வேறு சொல்

சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவும் ஒன்றாகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்கோளானது மிகச்சிறிய கோள்களுள் இரண்டாவது சிறியகோளாக உள்ளது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரை சூட்டியுள்ளனர்.

இக்கோளானது இரும்பு, ஆக்சைடு என்பன இதன் மேற்பரப்பில் காணப்படுவதனால் செந்நிறமாக காணப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

நவகிரகங்களின் ஒன்றாக செவ்வாய் விளங்குகின்றது. செவ்வாயால் திருமணம் தடைபட்டிருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில், பழனி ஆகிய கோவில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளை செய்த பின் திருமணம் செய்து கொள்ளலாம்.

ரோம் நகரத்தினர் செவ்வாயைப் போர்க் கடவுளாக வணங்கியதுடன் செவ்வாய்க்கு பல கோவில்களை ரோமபுரியில் கட்டியுள்ளனர். செவ்வாயை தளபதியாக ஏற்றுக் கொண்டால் யுத்தத்தில் வெற்றி பெறலாம் என நம்புகிறார்கள்.

செவ்வாய்க்கு பரிகாரமாக செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம் சாம்பிராணி காட்டவும். செவ்வாயின் பூஜைக்கு சிவந்த மலர்களே உகந்தது.

செவ்வாய் வேறு பெயர்கள்

  • மங்களகாரன்
  • பூமிகாரகன்
  • அங்காரகன்
  • காமாதிபதி

You May Also Like:

விளைச்சல் வேறு சொல்

அரும்பு வேறு சொல்