வரலாற்றில் பொற்கால ஆட்சியினை தந்தது சோழர் காலமாகும். சோழருடைய குலம் வளம் பெற்றிருந்த காவிரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் தான் தோற்றம் பெற்றது.
கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் சிற்றரசர் நிலைக்கு தாழ்ந்து போயினர்.
எனினும் கி.பி 9 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியானது சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது.
கி.பி 2ஆம் நூற்றாண்டையும், அதற்கு முந்திய காலப்பகுதியினையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9ஆம் நூற்றாண்டின் பின்னர் வலிமை பெற்ற சோழர்கள் பிற்காலச் சோழர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
சோழர்கள் பற்றி அறியக் கூடிய சான்றாதாரங்கள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றாதாரங்களின் அடிப்படையில்தான் ஒரு சமூகத்தின் அல்லது அரசாட்சியின் வரலாற்றினை எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டுக்கள், தொல்பொருட் சான்றுகள் மற்றும், இலக்கியச் சான்றுகள் போன்றனவும் உள்ளன.
இவை தவிர வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள், நினைவுச் சின்னங்கள் போன்றனவும் சோழர்கள் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.
சோழர்களின் தலைநகரம்
சோழர்களின் தலைநகரானது காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்பட்டதாக உள்ளது. கி.பி 200-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சோழர்களின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. இது அகளிகளாலும், மதில்களாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக விளங்கியது.
சோழ நாட்டின் மற்றும் ஒரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஆகும். 9 ஆம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் முக்கிய தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையை தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து பல வெற்றிகளை பெற்றான்.
மேலும் பல்லவ நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் ஆட்சி அமைத்து வந்தனர். இருந்தபோதிலும் தஞ்சையே முக்கியமான அல்லது, முதன்மையான தலைநகரமாக விளங்கியது எனலாம்.
காலப்போக்கில் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழக்க ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திரன் “கங்காபுரி” என்னும் புதியதோர் நகரை உருவாக்கி அதை தனது தலைநகரமாக்கிக் கொண்டான்.
11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக விளங்கியது.
சோழ கங்கம் என்ற பெரிய அழகிய ஏரியைக் கொண்ட கங்கைகொண்ட சோழபுரமானது பல நூற்றாண்டுகளாய் ராஜேந்திரனின் சிறப்புக்கும், பெருமைக்கும் சின்னமாக விளங்கியது.
கங்கை கொண்ட சோழபுரம் கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.
சோழர்கள் தென்கிழக்காசியா முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இதனைத் தான் தலைநகராக வைத்து ஆட்சி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இராஜேந்திர சோழனின் பின்வந்த பல அரசர்களும் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
மேலும் சாளுக்கிய சோழர்களின் காலத்தில் சிதம்பரம் மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலைநகரங்களாக விளங்கின.
You May Also Like: