ஜான்சி ராணி வீர வரலாறு கட்டுரை

jhansi rani katturai in tamil

வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக திகழ்ந்தவரே ஜான்சி ராணியாவார். இந்தியாவில் பிரித்தானியருடைய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஓர் வீரப்பெண்ணாகவும் இவர் காணப்படுகின்றார். இன்று வரலாறு போற்றும் கதாநாயகிகளில் ஒருவராகவும் திகழ்கின்றமை இவரது சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

ஜான்சி ராணி வீர வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்ப கால வாழ்க்கை
  • பெண்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்த வீரமங்கை
  • ஆங்கிலயரை எதிர்த்து போராடியவர்
  • ஜான்சி ராணியும் நாட்டுப்பற்றும்
  • முடிவுரை

முன்னுரை

ஜான்சி ராணி தன்னுடைய வீரத்தில் சிறப்புற்று விளங்கியமையானது இவரது வீர வரலாற்றையே பறை சாற்றுகின்றது. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே வாள் சண்டை, வில்வித்தை போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று வந்தமையானது போர் வீரராவதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது. அந்தவகையில் தைரியமிக்க பெண்ணே ஜான்சி ராணியாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் 1828ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி இந்தியாவில் பிறந்தவராவார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா என்பதாகும். இவர் தனது சிறுவயது முதலே வாள் வீச்சு, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கு நிகராக பல்வேறு பயிற்சிகளையும் பெற்று வந்தார்.

மேலும் இவர் தனது 14 வயதில் ஜான்சி மன்னரான கங்காதர் ராவுடன் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக இவரது பெயர் லட்சுமி பாய் என்று மாற்றம் பெற்றது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய துணிகரமான பெண்ணாகவும் திகழ்கின்றார்.

பெண்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்த வீரமங்கை

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்திற்கு வித்திட்டவராக இவர் காணப்படுகின்றார். அதாவது பெண்கள் வீரத்திலும், அன்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இவரை கருதமுடியும்.

வாழ்வில் பல சவால்கள் ஆங்கிலேயர்களால் வந்தபோதிலும் அதனை துணிந்து எதிர்த்துப் போராடிய பெண்ணாகவும் காணப்பட்டார். இவருடைய வரலாற்றை படிக்கும்போது வாழ்வில் போராட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெண்களுக்கும் எழாமல் இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இன்று பெண்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் எம் மனதில் ஜான்சி ராணியை நினைவில் வைத்துக்கொள்கின்ற போதே இந்த இன்னல்களை கடக்கும் உத்வேகம் பிறக்கும்.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது பல்வேறு கொள்கைகளை வகுத்ததோடு பல இன்னல்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். இதன் காரணமாக அதிருப்தியடைந்த சிலர் இவர்களது ஆட்சிக்கெதிராக ஒன்று திரண்டனர்.

இவ்வாறு ஒன்று திரண்டவர்களுள் பிரதானமானதொரு பங்கினை ஜான்சி ராணியே வகிக்கின்றார். அந்தவகையில் சிறந்த முறையில் படைகளை திரட்டி போரிற்கு தயாராகியதோடு 1858ம் ஆண்டு ஜூன் 17ல் ஜான்சி போரானது இடம்பெற்றது.

இத்தகைய போரின் போது ஜான்சி ராணியிடம் குறைந்த படைபலமே காணப்பட்டிருந்த போதிலும் போரில் பின்வாங்காது அனைவரையும் போராட தூண்டினார். மேலும் இப்போரின் இறுதியில் பிரிட்டிஸ் படையே வெற்றி பெற்றதோடு இவர்கள் ஜான்சி நகரையும் கைப்பற்றினர்.

இவர் தனது துணிவின் காரணமாக ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த சிறந்த வீராங்கனையே ஜான்சி ராணி ஆவார்.

ஜான்சி ராணியும் நாட்டுப்பற்றும்

இந்திய தேசத்தினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பதற்காக போராடியவராவார். மேலும் இவர் அநீதிக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுபவர்களை சிறந்த முறையில் செயற்பட வழிவகுத்தவராவார்.

அதாவது இவரது சுதந்திரத்திற்கான போராட்டமானது அனைவரையும் ஊக்கமளிப்பதாகவே காணப்பட்டது. இவருடைய தேசப்பற்றானது பெண்களை தங்களது உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தூண்டியது.

முடிவுரை

இன்று எம் மனக் கண்முன் வீரமங்கையாக திகழ்கின்ற ஜான்சி ராணி அவர்கள் குவாலியர் எனும் போரில் தைரியமாக போராடியதோடு பலத்த காயங்களையும் அடைந்தார்.

இவ்வாறாக சில நாட்களின் பின்னர் 1858 ஜூன் 18ல் உலகை விட்டு மறைந்தார். இவ்வாறு அவர் உலகை விட்டு மறைந்தாலும் இன்றும் இவரை கௌரவிக்கும் முகமாக இவரது நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

You May Also Like:

சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை