தன் சுத்தம் கட்டுரை

than sutham katturai in tamil

இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நோய் நொடியற்ற நீண்ட ஆயுள் என்பது முக்கியமானதாக காணப்படுகிறது. ஒருவர் நோய் நொடி இன்றி வாழ்வதற்கு சுத்தம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

தன் சுத்தம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தன் சுத்தம் என்பது
  3. தன் சுத்தத்தின் அவசியம்
  4. தன் சுத்தம் பேணுவதன் நன்மைகள்
  5. தன் சுத்தம் பேணாமையின் விளைவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

சுத்தம் என்பது நலமான வாழ்க்கைக்கான ஆரம்ப புள்ளியாக காணப்படுகின்றது. நாம் உட்கொள்ளும் உணவு முறை, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி போன்ற செயற்பாடுகளில் தான் வாழ்வின் ஆரோக்கியமானது காணப்படுகிறது.

ஒவ்வொருவரும் தன் சுத்தம் பேணும்போதுதான் பாதுகாப்பான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றது.

தன் சுத்தம் என்பது

அழகான வாழ்வு என்பது உடல், உளம், சமூகம் என்பன சிறந்த முறையில் அமைந்து காணப்படுவது ஆகும். தன் சுத்தம் என்பது ஒரு மனிதன் தான் சார்ந்த சுகாதாரத்தை பேணுவது ஆகும்.

அதாவது தினமும் இருமுறை பல் துலக்குதல், நன்றாக நீராடுதல், கை சுத்தம், தலை சுத்தம், ஆடைத்தூய்மை, சுகாதாரமான உணவு, வீட்டுத் தூய்மை என்பவற்றை குறிக்கிறது.

தன் சுத்தமானது ஒருவரை ஆரோக்கியமானவராக மட்டுமின்றி நற்பிரஜையாகவும் திகழ செய்கின்றது.

தன் சுத்தத்தின் அவசியம்

தன் சுத்தம் என்பது ஒருவருக்கு முக்கியமான ஒன்றாகும். தன்னைப் பற்றிய சிறந்த சிந்தனை மற்றும் சிறந்த சுத்த நடவடிக்கைகள் என்பவையே பொதுநலத்திற்கான ஒரு தூண்டுகோலாக அமைந்து காணப்படுகிறது.

தன் சுத்தத்தை சரிவர பேணுகின்ற ஒரு மனிதரால் மாத்திரமே சமூகத்தை சிறந்த முறையில் பாதுகாப்பாக பேண முடிகிறது.

பிறர் நம்மை மதிப்பதற்கு தன் சுத்தம் என்பது முக்கியமானதாகும். அதாவது தன் சுத்தத்தை பேணி வாழ்கின்ற போது தான் நமது பழக்கவழக்கங்களும் பிறர் மதிக்கின்ற அளவிற்கு மாறும் என்பது நிதர்சனமான உண்மையாக காணப்படுகிறது.

தன் சுத்தம் பேணுவதன் நன்மைகள்

தன் சுத்தம் பேணுவது மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அடிப்படை விடயமாக காணப்படுகிறது.

தன் சுத்தத்தின் மூலம் ஆரோக்கியமான நோய் நொடியற்ற வாழ்வினை நாம் வாழ முடிகின்றது. தன் சுத்தம் பேணுவதனால் சிறந்த முறையில் வாழ்வதன் மூலம் சமூகத்தில் மதிப்பு உயர்கிறது.

தன் சுத்தம் பேணாமையின் விளைவுகள்

தன் சுத்தத்தை ஒருவர் பின்பற்றாமல் காணப்படுகின்ற போது அவர்களிடம் துர்நாற்றம், பல் சொத்தை, பற்களின் ஈறுகள் மற்றும் வாய கிருமிகளின் தாக்கம் அதிகரிக்கும், இலகுவாக நோய்களுக்குள்ளாவர்.

தூய்மை இல்லாத ஆடைகளை அணிகின்ற போது உடலில் துர்நாற்றம் வீசும், சரும சார்ந்த வியாதிகள், ஒவ்வாமை என்பன ஏற்படுகிறது.

தலை மற்றும் தலைமுடியின் சுத்தமின்மையினால் இறந்த செல்கள் அடையடையாக மாறி தலையில் பொடுகுகள் ஏற்படும் பின்னர் பேன் போன்றவை உருவாகிறது. தலைமுடியை சுத்தமாக பேணாமையினால் அழுக்குகள் படிந்து தலைமுடியின் தன்மையானது மாற்றமடைகிறது.

சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளாமையினால் வாந்திபேதி போன்ற தொற்றும் நோய்களும் சர்க்கரை நோய், அதி உயர் அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொற்றாத நோய்களும் ஏற்படுகிறது.

முடிவுரை

ஒவ்வொரு மனிதரும் தான் சுத்தத்தை பேணுவதன் மூலம் ஆரோக்கியமான சிறந்த சமூகத்தை உருவாக்க முடிகின்றது. அழகான வாழ்வு என்பது உடல் உணர்வு வாழ்கின்ற சூழல் போன்றவை சார்பானதாகும்.

நாம் இந்த உலகில் வாழுகின்ற ஒவ்வொரு வினாடிகளையும் ரசித்து வாழ்கின்ற மனநிலையை ஒருவருடைய தன் சுத்தமே ஏற்படுத்துகின்றது.

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை