திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை

உலகில் காணப்படுகின்ற மிகப்பெரிய மொழிக்குடும்பங்களில் ஒன்றாக திராவிட மொழிக்குடும்பம் காணப்படுகின்றது. தென்னாசியாவிலேயே திராவிட மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன.

திராவிட மொழி பல மொழிகளின் சேர்க்கையானாலான மொழிக்குடும்பம் ஆகும். திராவிட மொழிக் குடும்பத்தில் மொத்தமாக 86 மொழிகள் காணப்படுகின்றன. திராவிட மொழிகளினை 215 மில்லியனிலும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் தெற்கு, தென்மத்தி, மத்தி,வடக்கு என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகள் இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகக் கருதப்படுகின்றன.

இவை முறையே தமிழ்நாடு, ஆந்திர மாநிலம், கேரளம், கர்நாடகா போன்ற பிரதேசங்களில் பிரதான மொழிகளாகப் பேசப்படுகின்றன.

திராவிடத்தின் தோற்றம்

“திராவிட” என்ற சொல்லை முதன்முதலில் இராபர்டு கால்டுவெல் என்ற ஆய்வாளர் அறிமுகம் செய்தார். இராபர்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுடன் தென்னிந்தியாவில் அப்போது புழக்கத்தில் இருந்த வேறு மொழிகளையும் உள்ளடக்கி அவ் அனைத்து மொழிகளையும் ஒன்றாக்க “திராவிட” எனும் சொல்லைப் பயன்படுத்தி “திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்” என்ற நூலை 1056ல் எழுதினார்.

இவரது காலத்திற்குப் பின்னர் வந்த சில ஆய்வாளர்கள் தென்னிந்தியா தவிர மத்தி இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் போன்ற நாடுகளிலும் திராவிட மொழியிலுள்ள சில மொழிகள் பேசப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

திராவிட மொழியின் வரலாறு

திராவிட நாகரிகம் ஆனது ஆரியர் காலத்திற்கு முன்பு மற்றும் சரசுவதி- சிந்து, அரப்பா, மொகஞ்சதாரோ பள்ளத்தாக்குகளில் உருவாகிய சிந்து நாகரிகம் போன்ற நாகரிகங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றதாக பல ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

ஆனால் இதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகளோ ஆதாரங்களோ இல்லை. ஆனால் இப்பள்ளத்தாக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட வாசிக்க முடியாத எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு சொந்தமானவை என்று நம்பப்படுகின்றது.

திராவிட மொழியின் வகைப்பாடு

திராவிட மொழி இந்திய நாட்டின் புவியியல் அமைப்பின் அடிப்படையில் ஐந்து மாபெரும் அமைப்புக்களாக பிரிக்கப்படுள்ளன. வட திராவிடம், தென் திராவிடம், நடுத் திராவிடம், தென்-நடுத் திராவிடம், வகைப்படுத்தப்படாதவை போன்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும் தென் திராவிடப் பிரிவினில் 34 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும் வகைப்படுத்தப்படாத பிரிவில் 8 மொழிகள் உள்ளடங்கலாக 73 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில் காணப்படுகின்றன.

திராவிடத்தின் பெரும் மொழிகளாக தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்றன காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை சிலர் தமுலிக் என்ற பெயராலும் தமிழியன் என்ற பெயராலும் அழைத்து வந்ததாக அறியப்படுகின்றது.

திராவிட மொழிக் குடும்பமானது தெற்கு, மத்தி, வடக்கு என்று மாபெரும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ், மலையாளம், குடகு மொழி, குறும்பா மொழி, கோத்தர், தோடாமொழி, கன்னடம், படுக மொழி, கொற்றகொரகா, துளுவம், குடியா, கோண்டி, மாரியா, முரியா, பர்தான், நாகர்ச்சால், கிர்வார், கொண்டா, முகாடோரா, கூய்மொழி, குவிமொழி, கோயாமொழி, மண்டா மொழி, பெங்கோ மொழி, தெலுங்கு, செஞ்சு ஆகிய மொழிகள் உள்ளடங்குகின்றன.

இதே போன்று மத்தி திராவிட மொழிக் குடும்பத்தில் நைக்கி, கொலாமி, ஒல்லாரி, த்ருவா மொழி, ஆகியன காணப்படுகின்றன.

இதே போன்று வடக்கு திராவிட மொழிக் குடும்பத்தில் குடக்கு, மல்டோ, பிராகுயி மொழி ஆகிய மொழிகள் காணப்படுகின்றன.

You May Also Like:

பா வகையால் பெயர் பெற்ற நூல்

புறநானூறு குறிப்பு வரைக