நான் விரும்பும் தலைவர் நேரு பேச்சு போட்டி

jawaharlal nehru speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இப்பொழுது எனக்கு பிடித்த தலைவரான இந்தியாவின் புதிய வரலாற்றை துவங்கி வைத்தவரும், குழந்தைகளால் நேரு மாமா என அழைக்கப்படுகின்ற ஜவஹர்லால் நேருவை பற்றியே பேசப்போகின்றேன்.

பிறப்பும் வாழ்க்கையும்

நேரு அவர்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி அலகாபாத் எனும் இடத்தில் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவராவார். இவரின் பிறந்த நாள் அன்றே இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபத்தில் செல்வந்தரான மோதிலால் நேரு என்பவருக்கும் சுவரூபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார்.

இவர் கமலாகௌர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இந்திரா பிரியதர்சினி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவின் முதல் பிரதமரான இவரை நவீன இந்தியாவின் சிற்பி என அழைக்கின்றனர்.

கல்வி

சிறுவயதில் இவர் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். மோதிலால் நேரு தனது மகனான நேருவை இங்கிலாந்தில் உள்ள ஹர்ரோவில் எனும் இடத்திற்கு கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தார்.

அங்கு பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கேம்பிரிட்ச் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை எழுதி திரினிட்டி கல்லூரிக்கு சென்றார். அங்கு சென்று இயற்கை அறிவியலை கற்றார்.

இவர் 1910ம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவர் பட்டம் பெற்றதன் பின்னர் ஹரோ மற்றும் கேம்ரிட்ஜில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி கற்றார். இங்கு நடைபெற்ற இறுதித்தேர்வில் 1912ம் ஆண்டு வெற்றி பெற்று சட்டதுறைக்கு தெரிவு செய்யப்பட்டார் பின்னர் சட்டப்பணிக்காக இந்தியாவிற்கு திரும்பினார்.

ஜவகர்லால் நேருவின் பணிகள்

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கல்வியிலேயே உள்ளது என்றடிப்படையில் பல்வேறு கல்வி திட்டங்களை மேற்கொண்டார். இந்தியா முழுவதும் பொது நிறுவனங்களை ஏற்பாடு செய்து பல்வேறு தொண்டுகள் ஆற்றப்படுகின்றன.

இந்திய மக்கள் மத்தியில் தேசத்தின் மீதான பற்றை ஏற்படுத்தி நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக தேசத்தை கட்டியெழுப்பினார்.

நேருவின் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளின் முதலீடு என்ற திட்டமானது இந்தியாவின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை இன்று வரை ஆற்றி வருகின்றது.

இந்தியாவில் அரசாங்கமானது ஐந்து வருடத்திற்குள் என்ன திட்டங்களை ஆற்ற வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை நேருவினையே சாரும்.

குழந்தைகளின் நேரு மாமா

இவர் குழந்தைகளின் மீது அலாதி பிரியமுடையவராக காணப்பட்டார். குழந்தைகளுக்காக கல்வித்திட்டங்கள் மற்றும் சிறப்பான பல வகைத்திட்டங்களை அறிமுகப்படுத்தியவராவார்.

இவரது செயலை குழந்தைகள் பெரிதும் விரும்பக்கூடியவர்களாக காணப்படுகின்றனர். இதன் காரணமாக இவர் பிறந்த தினத்திலேயே குழந்தைகள் தினமும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தியவின் முதல் பிரதமர்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இவர் காணப்படுகின்றார். இவர் பதவியேற்று தலைநகர் தில்லியில் விதியுடன் ஒரு போரட்டம் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரையானது இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகின்றது.

இவர் பதவியேற்றதன் பின்னர் பல உள்நாட்டு மத கலவரங்கள் இவருக்கு சவாலாக காணப்பட்டது. இதன் காரணமாக மாநிலதிட்டம், பொருளாதார திட்டம் போன்றவற்றை உருவாக்கினார். இவர் வகுத்த திட்டங்கள் மக்களின் நலன் கருதியே செயற்பட்டு வருகின்றது.

இறப்பு

இவர் 1964 ஆண்டு மே மாதம் 27ம் திகதி புது தில்லி இந்தியாவில் இயற்கை எய்தினாலும் உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை என்ற வாசகத்திற்கு இணங்க சரித்திரம் போற்றும் மாமனிதராக நேரு அவர்கள் இன்று வரை போற்றப்பட்டு வருகின்றார்.

You May Also Like:

போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி

காந்தியின் கொள்கைகள் கட்டுரை