நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

nerathai veenadipathu vaalkaiyai veenadipathu katturai in tamil

மனிதனது வாழ்வில் மனிதனுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே நேரம் காணப்படுகின்றது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும்.

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அது பாதகமாக? அல்லது சாதகமா? என்பது அக்கணப் பொழுதின் விளைவிலேயே தென்படும்.

அந்த வகையில் நேரம் பொன்னானது என்ற பொன்மொழி நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் என்பதனை எடுத்துச் சொல்கின்றது.

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நேரத்தின் மகிமை
  • நேரத்தின் பெறுமதி
  • நேரத்தை வீணடிப்பதற்கான காரணங்கள்
  • சிறந்த நேர முகாமைத்துவம்
  • முடிவுரை

முன்னுரை

ஒரு மனிதன் தன்னுடைய நேரத்தினை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அவன் தன்னுடைய வாழ்க்கையினை தானாகவே வீணடித்துக் கொள்கின்றான். நேரம் என்பது வாழ்வில் ஏனைய எல்லா அம்சங்களையும் விட வலுவானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கின்றது.

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் என்ற அடிப்படையில் நேரத்தின் முக்கியத்துவம், முறையான நேர முகாமைத்துவம் மற்றும் நேரத்தை வீணடிப்பதில் இருந்து தடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை இக்கட்டுரையில் நோக்கலாம்.

நேரத்தின் மகிமை

ஒரு மனிதன் தன்னுடைய நேரத்தினை பயன்படுத்தும் விதத்திலேயே அவனுடைய வெற்றி, தோல்வி மற்றும் வாழ்வின் உயர்வு, தாழ்வு என்பன தீர்மானிக்கப்படுவதனை காணலாம்.

இதிலிருந்து நேரத்தின் மகிமையை நாம் உணர முடிகின்றது. அதாவது ஒரு மனிதன் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு தாழ்ந்தவனாகவோ அல்லது மதிப்பு இழந்தவனாகவோ கருதப்படும் இடத்தில், அவன் இச்சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையினை அடைந்து கொள்வதற்காக தன்னுடைய நேரத்தினையே எவ்வாறு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுக் கொள்கிறான்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்த ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய நேரத்தை முறையாக பயன்படுத்தியதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதியாக மாற்றம் கண்டமையினை குறிப்பிடலாம்.

நேரத்தின் பெறுமதி

நேரத்தின் பெறுமதியை யாராலும் குறிப்பிட்டு மட்டிட முடியாது. அதாவது முன்னைய காலங்களில் நேரம் பொன்னானது என்று பாவித்தாலும் கூட தற்காலங்களில் நேரம் பொன்னை விட மேலானது என்ற பொன் மொழியை பாவிக்கின்றமையையும் இங்கு நாம் கூற முடியும்.

நேரத்தினை யாராலும் கட்டுப்படுத்தி நிறுத்த முடியாது அது ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஒரு நாளின் நேரம் அன்றைய நாள்ளுடனே முற்றுப்பெறுகின்றது. அடுத்த நாள் புதிய நேரமே எமக்கு கிடைக்கின்றது.

எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தாத அனைத்து நேரமும் வீணாகவே கழிவுதனை காணலாம். அவை அடுத்த நாள் எமக்கு கிடைப்பதில்லை. எனவே நேரம் பெறுமதியானது அதனை வீணடிப்பதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நேரத்தை வீணடிப்பதற்கான காரணங்கள்

ஒரு மனிதன் நேரத்தை வீணடிக்கின்றான் என்றால் அவன் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறான் என்பதுதான் அர்த்தம்.

வீணான தொலைபேசி பாவனை, வலைத்தள இணையதள விளையாட்டுகளில் மூழ்குதல், அரட்டை அடித்தல், சோம்பல், தட்டிக் கழிக்கும் தன்மை, பிற்போடும் தன்மை, சுறுசுறுப்பு இல்லாமை, முயற்சி இன்மை, நிதானமின்மை மற்றும் உளரீதியான பாதிப்புகள் போன்றன நேரத்தை வீணடிப்பதில் முக்கிய செல்வாக்கு செலுத்தக்கூடிய காரணிகளாக விளங்குகின்றன.

சிறந்த நேர முகாமைத்துவம்

சிறந்த நேர முகாமைத்துவம் என்பது திட்டமிட்ட அடிப்படையில் தன்னுடைய நேரத்தை கழிப்பதாகும். இன்று தொழில்நுட்ப உலகில் நேரம் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

நேரத்தை விடவும் தங்களுடைய வேலைப்பழு அதிகமாக காணப்படுவதனால் நேரம் போதாமல் போய்யுள்ளது என பலர் கருதுகின்றனர்.

ஆகவே தங்களுடைய வேலைப்பழுவினை குறைப்பதற்காக நேரத்தினை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து, அந்த நேர கட்டமைப்புகளுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வேலைகளை செய்வதன் மூலம் தம்முடைய நேரத்தினை முறையாக செலவழிப்பதோடு, நேரம் வீணடிக்கப்படாமலும் பாதுகாக்கலாம்.

முடிவுரை

இன்று நாம் வாழக்கூடிய நவீன யுகத்தில் நேரத்தின் மகிமை என்பது மட்டிடப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

சிறந்த நேர முகாமைத்துவம் மற்றும் நேர திட்டமிடல் என்பவற்றினை பின்பற்றுவதன் ஊடாக நாம் எம்முடைய நேரத்தினை வீணடிப்பதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதாவது நேரம் வீணடிக்கப்படுமானால் எம்முடைய வாழ்க்கையும் சேர்த்தே வீணடிக்கப்படும். ஆதலால் எம்முடைய வாழ்க்கையில் நாம் ஏதேனும் சாதிக்க வேண்டுமானால் நேரத்தை வீணடிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

You May Also Like:

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை