நேர்முக வர்ணனை என்றால் என்ன

nermuga varnanai endral enna

ஒரு நிகழ்வினை சிறந்த முறையில் அறிந்து கொள்வதற்கு நேர்முக வர்ணணையானது துணை செய்கின்றது. ஒரு விடயத்தினை நாம் குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்த கூடியதாக நேர்முக வர்ணணையானது காணப்படும்.

நேர்முக வர்ணனை என்றால் என்ன

நேர்முக வர்ணணை என்பது ஒரு நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும் போது நேரடியாக அந்நிகழ்வு தொடர்பாகவும், அதன் சிறப்புக்கள் மற்றும் அது தொடர்பான எமது உணர்வுகளையும் சரியான தொனி உச்சரிப்புக்களுடன் வெளிப்படையாக கூறுகின்ற ஒரு தன்மையே நேர்முக வர்ணணை எனலாம்.

சில நிகழ்வுகள் இடம் பெறும்போது நேரடியாக வானொளி மற்றும் தொலைக்காட்சியினூடாக இடம்பெறும் இதுவே நேர்முக வர்ணணையாகும்.

நேர்முக வர்ணணையின் பண்புகள்

நேரடியானதாக காணப்படும் அதாவது நேரடியாக ஒரு நிகழ்வினை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது.

கற்பனை திறன் கொண்டமைந்ததாக காணப்படும். அதாவது ஒரு நிகழ்வினை கற்பனையாக உணர்ந்து அந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றது போல் ஓர் உணர்வினை எமக்கு ஏற்படுத்த கூடியதாக காணப்படுகின்றது.

சீரான உச்சரிப்பு தன்மையினை கொண்டமைந்ததாக காணப்படும். அதாவது சிறந்த தொனி அதனுள் இடம்பெற்றிருப்பதோடு அதனை இலகுவாக எம்மால் விளங்கிக்கொள்ள கூடியதாகவும் காணப்படும்.

நேர்முக வர்ணணை இடம்பெறும் சந்தர்ப்பங்கள்

விளையாட்டுப் போட்டிகள்

நேர்முக வர்ணணையானது விளையாட்டுப் போட்டிகளின் போது இடம்பெரும் அதாவது கிரிக்கட் போட்டியினை நேரடியாக தொலைக்காட்சி மற்றும் வானொளிகளில் நேர்முக வர்ணணை மூலமாக எம்மால் கண்டு கொள்ள முடியும்.

திருவிழாக்காலங்கள்

திருவிழாக்காலங்களில் தொலைக்காட்சியினூடாக அந்நிகழ்வை இலகுவாக எம்மால் பார்க்ககூடியதாக இருக்கும். மேலும் அந்நிகழ்வில் தாமும் ஒருவராக இருப்பது போன்ற ஒரு உணர்வினை ஏற்ப்படுத்துகின்றது.

ஊர்வலங்கள்

நேர்முக வர்ணணையில் ஊடாக ஊர்வலங்கள் நாம் காணக்கூடியதாக உள்ளது. அதாவது சுதந்திர தின சந்தர்ப்பங்களில் வீட்டில் இருந்துகொண்டே இதனை பார்க்ககூடியதாக உள்ளது.

நிகழ்வினை வர்ணிப்பவருக்கு இருக்க வேண்டிய பண்புகள்

  • சரளமான பேச்சாற்றல் இருத்தல் வேண்டும்.
  • தெளிவான உச்சரிப்பு மற்றும் தொனி வேறுபாடு காணப்படல்
  • கேட்போரை ஈர்க்கும் வண்ணம் வர்ணணை நுட்பங்களை கையாள வேண்டும்.
  • நிகழ்வு பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவு காணப்பட வேண்டும்.
  • வர்ணணை செய்பவர் நவீன தொடர்பாடற் கருவிகளை கையாளும் திறனை கொண்டிருத்தல் வேண்டும்.
  • மெழிப்புலமை, சமயோசித சிந்தனை, தொடர்புபடுத்தல் திறன் காணப்படுதல் வேண்டும். இன்றைய நவீன சூழலிற்கு ஏற்றாற் போல் கணினி அறிவு காணப்படல் வேண்டும்.

நேர்முக வர்ணணையின் நன்மைகள்

ஒரு நிகழ்வினை நேரடியாக அறிந்து கொள்வதற்கு நேர்முக வர்ணணையானது துணை புரிகின்றது.

அதாவது உதாரணமாக கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இடம்பெறுகையில் எம்மால் அங்கு சென்று பார்வையிட முடியாத ஒரு நிலை காணப்படலாம்.

அவ்வாறு காணப்படுகின்ற பட்சத்தில் நேர்முக வர்ணணையின் ஊடாக அதனை காண்கின்ற போது எமக்கு அந்த நிகழ்விற்கு சென்று பார்வையிடுவது போன்றதொரு உணர்வானது ஏற்படுகின்றது.

செலவின்றி ஒரு நிகழ்வை பார்க்கவோ கேட்கவோ முடியும். அதாவது தொலைக்காட்சி மற்றும் வானொலிகளின் ஊடாக செலவுகள் இன்றி கேட்கவோ பாரக்கவோ முடிகின்றது. இதன் மூலமாக அந்த நிகழ்விற்கு செல்கின்ற செலவானது ஏற்படாது.

ஒரு நிகழ்வு பற்றிய பூரணமான விளக்கத்தினை தெளிவாக பெற்றுக் கொள்வதற்கு நேர்முக வர்ணணையானது துணைநிற்கின்றது. அதாவது திருவிழாக்கள், ஊர்வலங்கள் பற்றிய உண்மைத்தன்மையினை தெளிவாக காணமுடியும்.

எனவேதான் நேர்முக வர்ணணையானது நிகழ்காலத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வொன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு உந்து சக்தியாக காணப்படுகிறது.

You May Also Like:

நற்செயல் என்றால் என்ன

நிறைவு போட்டி என்றால் என்ன