நோக்கு வர்மம் என்றால் என்ன

வர்மக் கலைகளின் வகைகளுள் ஒன்றாகவே நோக்கு வர்மமானது காணப்படுன்கிறது.

நோக்கு வர்மம் என்றால் என்ன

நோக்கு வர்மம் என்பது கண்களால் பார்க்கும் அனைத்தையும் தம் வசப்படுத்துவதே ஆகும். அதாவது பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி அதனூடாக விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும்.

நோக்கு வர்மத்தினை மேற்கொள்வதற்கான பயிற்சிமுறை

நோக்கு வர்மத்தினை மேற்கொள்வதற்கான பயிற்சி முறையினை யோகத்திராடகம் எனக்கூற முடியும். இப்பயிற்சியானது அகத்திராடகம், புறத்திராடகம் என 2 வகையாக காணப்படுகிறது.

புறத்திராடகம்

இது கண்களால் சித்த சக்தியினையும் பிராண சக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப் பெறுவதாகும். இவ்வாறு கண்களால் பிராண சித்த சக்திகளை செலுத்தும் ஆற்றலைப் பெற்ற ஒரு தகுதி வாய்ந்த யோகியே நோக்கு வர்மத்தை பிரயோகப்படுத்த முடியும்.

அகத்திராடகம்

அதாவது நல்ல குருவிடம் பயிற்சி பெறுவதனூடாக சிறந்த வழிகாட்டல் கிடைப்பதோடு முறையான பயிற்சி காணப்படாமல் இருக்குமாயின் கண்கள் பாதிப்படையும் அபாயம் காணப்படும். முறையான பயிற்சியினூடாக மாத்திரமே நோக்கு வர்மக்கலையை கற்றுக் கொள்ள முடியும்.

நோக்கு வர்மத்தின் ஊடாக மனித உடம்பில் ஏற்படும் தாக்கங்கள்

நோக்கு வர்மத்தின் முலமாக ஒரு யோகி தன்னுடைய தாரணா சக்தியையும், பிராண சக்தியையும் ஒன்று திரட்டி தீட்சண்யப் பார்வை மூலமாக பிறிதொரு மனிதனின் உடம்பிலுள்ள 72000 நாடிகளில் மூன்று விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அந்தவகையில் அத்தாக்கங்களை நோக்குவோமேயானால்,

  • நாடிகளில் அதிக பிராணனை உட்செலுத்துதல்.
  • நாடிகளில் பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்.
  • நாடிகளிலுள்ள பிராணனை உறிஞ்சுதல், அதிக பிராணனை உறிஞ்சும் இம்முறையானது பாதிப்பில்லாததாகும்.

நோக்கு வர்மத்தின் சிறப்புக்கள்

ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் நோயினை நோக்கு வர்மத்தினூடாக குணப்படுத்த முடியும். அதாவது உயிர் பிரிய முடியாமல் வலியினால் வேதனைப்படும் நோயாளிகளுக்கு இம்முறையினை பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.

எந்த ஒரு பொருளையோ, மனிதனையோ தொடாமல் கண்பார்வையினால் மட்டுமே மற்றவர்களை இயக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு கலையாக நோக்கு வர்மம் காணப்படுகிறது.

கண்பார்வையினூடாக ஒருவரை தவறான பாதையிலிருந்து சரியான பாதைக்கு நோக்குவர்மத்தினூடாக கொண்டு வரமுடியும்.

மனந்தெளிந்த நிலையாக காணப்படுவர். அதாவது நோக்கு வர்மத்தினூடாக மனச்சோர்வு போன்றவை ஏற்படாது திறந்த மனமாக காணப்படும்.

நோக்கு வர்மமும் தாரணா சக்தியும்

ஒரு மனிதரானவர் நோக்கு வர்மத்தினை பிரயோகிப்பதற்கு அவரிடம் தியானம், சமாதி ஆகிய நிலை தவிர்ந்த அஸ்டாங்க யோகத்தின் படிமுறைகளை அறிந்திருத்தல் வேண்டும்.

அதாவது இயம, நியமம் அவனது மனது தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும்,

ஆசனம் – உடலை சீர்செய்யும், பிரணாயாமம் – பிராண சக்தியை சீர் செய்யும்,

பிரத்தியாகாரம் – உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதை பண்படுத்தும்,

தாரணை- நோக்கு வர்ம தாக்குதல் நடாத்தும் முறை போன்றவற்றை கொண்டிருத்தல் வேண்டும்.

தாரணை என்பது அசையாமல் கட்டுப்படுத்தப்பட்ட சித்த சக்தி என பதஞ்சலியார் விளக்கியுள்ளார். அதாவது ஒருவருடைய மனமானது மேல்மனம், ஆழ்மனம், மறைமனம் என 3 அடுக்குகளை அல்லது வலயங்களை உடையதாகக் காணப்படுகிறது.

சாதாரணமாக பெரும்பாலானோருக்கு மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் காணப்படும். ஏனெனில் மேல்மனத்தின் செயல்முறையை கேள்வி கேட்பதினூடாக அறிந்த கொள்ள முடியும். ஆனால் ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர் போன்றோரில் ஆழ்மனம் செயல்பாட்டில் காணப்படும்.

மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு தூண்டுகோல், சக்தியின் இருப்பிடம், என்ற சித்ததினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல வெற்றிகளை கொடுக்கும். இதனையே தாரணா சக்தி என கூறலாம்.

இந்த தாரணா சக்தியினை பெற்று கண்களால் சித்த சக்தி மற்றும் பிராண சக்தியினை செலுத்தும் ஆற்றலை பெறும் ஒருவரே நோக்கு வர்மதினை பிரயோகிக்க முடியும்.

You May Also Like:

அதிகாரம் என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன