பசுமைப் புரட்சி – Pasumai Puratchi In Tamil

Pasumai Puratchi In Tamil

1940களில் உலக சனத்தொகை அதிகரிப்பு காரணமாக அன்றைய கால கட்டத்தில் உணவு பற்றாக் குறையினால் அதிக மக்கள் பசி பட்டினி, வறுமைச் சாவு, போசாக்கின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

அவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறிய நிலப்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் அதிக விளைச்சலை பெறும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடே பசுமை புரட்சி எனப்படும். 1942 காலப்பகுதியில் ஆரம்பித்து 1950, 1960களில் சிறப்பான வளர்ச்சியினை பெற்றது எனலாம்.

பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்

 • குறைவான உணவு உற்பத்தி
 • சனத்தொகை அதிகரிப்பு காரணமாக உணவின் தேவைப்பாடு
 • உணவு இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்கள்
 • புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டமை.

குறைவான உணவு உற்பத்தி

1940 காலக் கட்டத்தில் விவசாயிகள் தமது குடும்ப நலனை மட்டுமே கருதி விவசாயத்தில் ஈடுபட்டனர் இதனால் நிலம் இல்லாத ஏனைய மக்கள் சிக்கலுக்கு உள்ளானர்.

அக்காலத்தில் விவசாயம் மழையை நம்பி மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அதனை தவிர நீர்ப்பாசன திட்டங்கள், நீரினை சேமித்து வைக்கும் திட்டங்கள் இல்லாமை , பயிர்ச்செய்கைக்கு தேவையான விதைகள், உரம் இல்லாமை மற்றும் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள முடியாத அளவு வறுமை அதற்கான கடன், மானிய வசதிகள் இல்லாமை காரணமாக உணவு உற்பத்தி குறைவடைந்தது.

அத்தோடு அக்கால அரசாங்கங்கள் விவசாயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட தொழிற்சாலைகள் அமைத்து புதிய தொழில் துறைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியது. பல அரசுகள் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது.

சனத்தொகை அதிகரிப்பு காரணமாக உணவின் தேவைப்பாடு 1960 காலக்கட்டத்தில் உலக மக்கள் தொகை அதிகரித்தது. குறிப்பாக உணவு உற்பத்தி வளர்ச்சியை விட சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்தது.

உணவு இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்கள்

1940களில் நாடுகள் உலகமகா யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உணவு உற்பத்தி குறைந்து இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அரசுகள் யுத்தத்திற்கு தேவையான செலவீனங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

அத்தோடு 1960, 1965 களில் கடும் வறட்சிக்கு பல நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் உற்பத்தி குறைந்து ஏற்றுமதிக்கு தடை ஏற்பட்டது. அதிகரித்த மக்கள் தொகை காரணமாக மக்கள் தங்களின் நலன் கருதி சுயநலமாக செயற்பட்ட காரணத்தினால் ஏனைய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி மேற்கொள்ள முடியவில்லை.

நாடுகளுக்கிடையிலான அரசியல் போட்டி உதாரணமாக வியட்நாம் அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா கருத்து தெரிவித்ததன் காரணமாக அப்போது பதவியில் இருந்த அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் இந்தியாவிற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதனை தாமதப்படுத்தினார்.

புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டமை

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 1943 ஆம் ஆண்டு நோர்மன் ஏர்னஸ்ட் போர்லக், ராகபெல்லர் போன்ற நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க விவசாய ஆராய்ச்சி துறை, இந்தியாவில் சுவாமிநாதன் போன்றவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் இதன் விளைவாக பசுமைப் புரட்சி தோற்றம் பெற்றது எனலாம்.

பசுமை புரட்சியின் தோற்றம்

பசுமைப் புரட்சி எனும் வார்த்தையானது முதலில் வில்லியம் எஸ்.கௌட் எனும் அமெரிக்கரால் பயன்படுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியின் தந்தையான நார்மன் எர்னஸ்ட் போர்லக் எனும் அமெரிக்கர் 1943 ஆம் ஆண்டு மெக்சிக்கோ நாட்டில் சோளம் தொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொண்டு அதிக விளைச்சல் பெற்றதன் காரணமாக பசுமை புரட்சி தோற்றம் பெற்றது.

இக்காலத்தில் நார்மன் எர்னஸ்ட் போர்லக் இனால் அதிக விளைச்சல் தரக் கூடிய விதைகள் கண்டுபிடிக்கப்பட்டது, நீர் பாசன திட்டங்கள் தொடர்பான புதிய போக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது, கலப்பின விதைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிக விளைச்சல் பெற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்பட்டது.

மேலும் நோர்மன் ஏர்னஸ்ட் போர்லக், ராகபெல்லர் போன்ற நிறுவனங்கள் மெக்சிக்கோவில் பசுமை புரட்சியை அறிமுகம் செய்தது.

மெக்சிக்கோவினை தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஆப்காணிஸ்தான், சீனா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஈரான், கென்யா, இலங்கை போன்ற நாடுகளில் பசுமை புரட்சியின் தாக்கம் ஏற்பட்டது.

1960களில் இந்தியாவில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் உணவு உற்பத்தி குறைந்ததால் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 395 கிராம் மட்டுமே உணவு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ் நிலமையை சீர்செய்யும் நோக்கில் அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த எம். எஸ். சுவாமிநாதன் நார்மன் போர்லக் மற்றும் போர்ட் நிறுவனம், ராக்பெல்லர் நிறுவனம், அமெரிக்க விவசாயத் துறை போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடினார்.

பின் எம். எஸ். சுவாமிநாதன் அழைப்ப்pன் பெயரில் நார்மன் போர்லக் இந்தியாவிற்கு வருகை தந்தார். மேலும் 1960 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் புதிய நெல் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, விவசாயம் தொடர்பான பல ஆலோசணைகள் வழங்கப்பட்டது, உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

1971 ஆம் ஆண்டு சர்வதேச விவசாய ஆராய்ச்சி குழு தாபிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு “சர்வதேச விவசாய ஆராய்ச்சி தொடர்பான ஆலோசனை சபை” தாபிக்கப்பட்டது. ஆபிரிக்காவின் பசுமைப் புரட்சியானது ஏனைய நாடுகளில் வெற்றியளித்தது போன்று வெற்றியளிக்கவில்லை.

இதற்கான காரணங்களாக ஆபிரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு பூசல்கள், புதிய நெல் இனங்களின் பாவனை அறியாமை, அரசாங்கத்தின் பங்களிப்பு இன்மை போன்ற காரணங்களின் காரணமாக ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சி வெற்றியளிக்கவில்லை.

பசுமைப் புரட்சியின் நோக்கங்கள்

 • உற்பத்தியை அதிகரித்தல்
 • புதிய விவசாய தொழிநுட்பங்களை அறிமுகம் செய்தல்
 • உயர்தர வீரிய விதைகளை அறிமுகம் செய்தல்.
 • வறுமையை ஒழித்தல்
 • நீர்ப்பாசன முறை நவீன முறைப்படுத்தல்
 • உரம், கிருமி நாசினிகளின் பாவனை அதிகரித்தல்

பசுமைப் புரட்சியானது 03 முறைகளில் மேற்கொள்ளப்பட்டது.

நெல், கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலில் இன விருத்தி மேற்கொள்வதற்கு மரபனு தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டது.

உற்பத்திகளை அதிகரிப்பதற்கு இரசாயண பசளைகள் , உரம், பூச்சி கொல்லிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறு நிலப் பகுதியில் அதிக விளைச்சலைப் பெறல்.

பசுமைப் புரட்சியினால் ஏற்பட்ட தீமைகள்

 • அதிக நச்சுத் தன்மை கொண்ட விதை வகைகளின் அறிமுகம்.
 • அதின நீர் பயன்பாடு.
 • அதிக செலவு.
 • பாமர மக்கள் நவீன இயந்திரங்கள் தொடர்பான விளக்கத்தினை கொண்டிராமை.
 • கிருமி நாசினிகளின் பாவணை மூலம் மனிதன் பாதிக்கப்படல்.
 • சூழல் பாதிக்கப்படல்.
 • மண் வளம் இழத்தல் போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம்.

You May Also Like:

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை