பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன

pasumai illa vayukkal

இன்று பசுமை இல்லா வாயுக்களின் அளவு அதிகரித்து காணப்படுகின்றமையால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலினை காணக் கூடியதாக உள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன

பசுமை இல்ல வாயுக்கள் என்பது சில வாயுக்கள் சூரிய வெப்ப கதிர்களை உறிஞ்சி பின்னர் மீண்டும் வெளியிடும் தன்மையை கொண்டுள்ளது. இதன் காரணமாக புவி சூடாகிறது இவ்வாறாக காணப்படும் வாயுக்களே பசுமை இல்லா வாயுக்களாகும்.

பசுமை இல்ல வாயுக்களாக கார்பனீரொட்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ புளோரோ காபன், ஓசோன் போன்றவற்றை குறிப்பிடலாம்.

பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் விளைவுகள்

பசுமை இல்ல வாயுக்கள் ஓர் குறிப்பிட்ட அளவு காணப்பட்ட போது அவை பூமிக்கு நன்மையளித்தன. இப்போது இந்த வாயுக்களின் அளவுக்கு மீறிய பயன்பாட்டினால் வெப்பமயமாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

ஒக்சிஜனின் அளவு குறைந்து காணப்படுகின்றது. மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காபனீரொட்சைட்டு அதிக அளவில் வெளிவிடப்பட்டு காற்று மாசுபடுகிறது. இதன் காரணமாக பல்வேறுபட்ட நோய்கள் எம்மை தாக்குகின்றன.

சூரிய கதிர் வீச்சினுடைய தாக்கம் அதிகரித்து காணப்படுவதோடு விவசாயத்திற்குரிய வளங்களின் பயன்பாடு குன்றி காணப்படுகின்றது. துருவ பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் உருகிவது அதிகரிக்கின்றது.

மேலும் பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதோடு மற்றொரு பக்கம் வெள்ளம், சூறாவளி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவாக ஏற்படுகின்றது.

1750 களில் தொழிற் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் தொல்படிமப் பொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்கள் அதிகளவில் எரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக தொழில் உற்பத்தி பெருகியது. மேலும் பசுமை இல்லா வாயுக்களின் அளவும் அதிகரித்தது. மேலும் பூமியின் வெப்பநிலையும் அதிகரித்தது.

பசுமையில்லா வாயுக்களின் செயற்பாட்டினை குறைப்பதற்கான வழிமுறைகள்

பசுமையில்லா வாயுக்களின் அதிகரித்தே விளைவே பல்வேறு காலநிலை மாற்றங்களுக்கு காரணமேயாகும். இந்த வாயுக்களினுடைய செயற்பாட்டினை குறைப்பதன் மூலமே சிறந்த சூழலை உருவாக்கி கொள்ள முடியும்.

மக்களிடையே விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த பசுமையில்ல வாயுக்களின் செயற்பாட்டினை தடுக்க முடியும்.

ஒரு சமநிலையாக வெப்பக்கதிர்வீச்சானது நிகழும் போது வளிமண்டலமானது வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். அதாவது காடுகளை அழிக்காது மரங்களை நடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.

எனவேதான் மனித செயற்பாடுகளான சிமென்ட் உற்பத்தி, காடழிப்பு போன்ற செயற்பாடுகளினால் காபனீரொட்சைட் வளிமண்டலத்தில் அதிகரிப்பதோடு, மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் பாவனை பூச்சிக் கொல்லிகளை கண்மூடிதனமாக பயன்படுத்தல் போன்றவற்றை குறைப்பதோடு சிறந்த முறையில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், மக்கிப் போகாத கழிவுகளை தவிர்த்தல் போன்றவற்றினூடாக இந்த பசுமை இல்ல வாயுக்களின் மூலம் ஏற்படும் விளைவுகளை குறைக்க முடியும்.

You May Also Like:

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன

ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன