ஓய்வின்றி பயணித்து கொண்டிருக்கும் வயது வேறுபாடு இன்றி அனைவரும் நிற்க நேரமின்றி இரவு பகலாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
வேலைப் பளுவுடன் சேர்ந்து மனிதர்களுக்கு மன அழுத்தம், படபடப்பு மற்றும் மன உளைச்சல் போன்றனவும் சேர்ந்தே வந்துவிட்டன. இன்றைய பதிவில் நாம் படபடப்பு குறைப்பதற்கான வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
படபடப்பு குறைய வழிகள்
தியானப் பயிற்சி
தியானம் என்பது அலை பாய்ந்து ஓய்வின்றி இயங்கும் மனிதனின் மனதை ஒருநிலைப்படுத்த உதவுகின்றது. தியானம் குறிப்பாக அதிகாலையில் அமைதியான இடத்தில் இருந்து மேற்கொள்வது சிறந்தது. தியானம் தொடர்ந்து மேற்கொள்ளும் போது படபடப்பு குறைந்து சீரான நிலை உருவாகும்.
மூச்சுப் பபயிற்சி
பதற்றத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உடல் ஆழமாக மூச்சினை உள் இழுத்து மெதுமெதுவாக வெளியே விட பதற்றம் மெதுமெதுவாக குறையும். குறைந்தது 5-10 நிமிடங்கள் இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுதல் சிறப்பானதாகும்.
புரிந்துணர்வு
தினமும் எவ்வாறான சூழ்நிலையில் நமக்கு அதிகம் படபடப்பு, பதற்றம் உருவாகி எவ்வளவு நேரம் வரை நீடிக்கின்றது என்பதை படபடப்பு உருவாகும் வேளைகளில் அவதானித்து பதற்றம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குறைப்பதற்கான வழிகளைக் கையாள இலகுவாக இருக்கும்.
லாவெண்டர் மணம்
லாவெண்டர் மணத்தை நுகரும் போது மனம் ஒரு விதமான அமைதிப் பிரபஞ்சத்தினுள் செல்கின்றது. எனவே எப்போதும் படபடப்புடன் இருப்பவர்கள் லாவெண்டர் மணத்தை நுகருதல் சிறப்பானது. மேலும் லாவெண்டர் எண்ணெயை தலையணை மீது பூசி விட்டு தூங்குதல் அல்லது குளிக்கும் போது லாவெண்டர் எண்ணெயை சேர்த்து குளிக்கலாம்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச் சாமந்தியில் இயற்கையாகவே எபிஜெனின், லயொடோலின், பைசொபொலஸ் போன்ற பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவை உடலுக்கு ஓய்வளிக்க கூடியவை. தொடர்ச்சியாக சீமைச் சாமந்தி டீ குடித்து வர படபடப்பு மற்றும் மன அழுத்தம் குறைந்து வரும்.
மது, சிகரெட் போன்ற பழக்கங்களில் இருந்து விடுபடுதல்
மதுப்பழக்கம், சிகரெட் பிடித்தல் போன்றன ஒரு மனிதனில் சாதாரணமாக எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்க கூடியவை. எனவே மது, சிகரெட் போன்ற பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் இயலுமானவரை படபடப்புத் தன்மையைக் குறைக்கலாம்.
இசை
இந்த உலகில் இசைக்கு மயங்காத அடிமைகள் யாருமே இல்லை. இந்த இசை எப்படிப்பட்ட மன நோய்களையும் போக்க வல்லது. மன அழுத்தம், மற்றும் படபடப்பு இருப்பவர்கள் மெல்லிய இசையைத் தொடர்ச்சியாக கேட்டு வர இரத்த அழுத்தம் சீராக மனப்பதற்றம், படபடப்புக்கள் குறையும்.
உணவு முறை
காபி அதிகளவில் குடிப்பதால் படபடப்பு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இயலுமான வரை அதிகமாக காபி பருகுவதை தவிர்த்தல் நன்று. முடிந்தவரை ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது சிறந்தது.
எண்ணங்களின் தோற்றப்பாடு
மனது எப்போதும் இயலுமானவரை எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். இத்தகைய சிந்தனைகள் மனதில் எழும் படபடப்புக்கள் குறைக்க உதவும்.
மருத்துவ ஆலோசனை
மேற்குறிப்பிட்ட வழிகள் எவையேனும் செய்தும் படபடப்பு குறையாமல் தொடர்ச்சியாக படபடப்பு, மன உளைச்சல் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுதல் மிகச்சிறந்த வழி ஆகும்.
You May Also Like: